Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி 16.01.2010

நகராட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜன. 15: புதுச்சேரி நகராட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடி சம்பளம் வழங்கவேண்டும் என கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

÷இங்கு அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி யூனியன் பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

÷தீர்மானங்கள்: அரசுத் துறையில் கிரேடு பே வழங்கியது போல நகராட்சியில் பணிபுரியும் டி பிரிவு ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 6-வது ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி விடுபட்ட அனைத்து ஆணைகளையும் வெளியிட வேண்டும். ÷நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு தாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்யவேண்டும். தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் மஸ்தூர்களுக்கு சொந்த நிதியிலிருந்து சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.÷கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம். உதயகுமார், தலைவர் விநாயகவேல், துணைத் தலைவர்கள் பாலகுரு, குமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.