Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை நகரில் மாடுகள், நாய்கள் தொல்லை கிடையாது: மேயர் கூறுகிறார்

Print PDF
தினமலர் 22.01.2010

சென்னை நகரில் மாடுகள், நாய்கள் தொல்லை கிடையாது: மேயர் கூறுகிறார்

சென்னை: ""சென்னை நகரில் மாடுகள், நாய்கள் தொல்லை கிடையாது; அவைகள் பெருமளவில் பிடிக்கப் பட்டு விட்டன,'' என்று மேயர் சுப்ரமணியன் கூறினார்.

மாநகராட்சி சார்பில், செல்லப் பிராணிகளுக்கான மருத்துவமனைகள், நுங்கம் பாக்கத்திலும், திரு.வி.., நகரிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதை, மேயர் சுப்ரமணியன் திறந்து வைத்து பேசியதாவது: கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது போல், செல்லப் பிராணிகளுக்கு வடசென்னையில் திரு.வி.., நகரிலும், தென் சென்னையில் நுங்கம்பாக்கத்திலும் மருத்துவமனைகள் துவங்கப்பட் டுள்ளன. இங்கு செல்லப் பிராணி களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, ஆலோசனையும் வழங்கப்படும். வெறிநாய் தடுப்பூசி இலவசமாக போடப்படும். பொதுமக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பாலில் கலப்படம் உள்ளதா என்பதையும் பரிசோதித்து கொள்ளலாம்.

செல்லப் பிராணிகள் இறந்து விட்டால், அவைகளை கண்ட இடங்களிலும், நீர்வழித் தடங் களிலும் போட்டு வந்தனர். இதனால், அவைகள் அழுகி, துர் நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக் கேடு ஏற்படுத்தியது. அந்த நிலையை போக்க, வடசென்னையில் மூலகொத்தளம் மயானத்திலும், தென் சென்னையில் மயிலாப்பூர் மயானத்திலும் அரை ஏக்கர் நிலப்பரப்பில், இறந்த செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, திறக்கப்பட்டுள்ள மருத்துவமனையில், நாய்களுக்கு உரிமமும் வழங்கப்படும். தெருக்களில் திரியும் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, அவற்றுக்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்வதோடு, வெறிநாய் தடுப்பூசியும் போடப் படுகிறது. இதனால், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. முன்பு ஆண்டுக்கு 7,000 முதல் 8,000 நாய்கள் பிடிக்கப்பட்டு, இனப் பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2006ம் ஆண்டுக்கு பின், ஆண்டுதோறும் 20 ஆயிரம் நாய்கள் பிடிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது.

நகரில் சுற்றித் திரிந்த 3,948 மாடுகள் கடந்த ஆண்டுகளில் பிடிக்கப்பட்டன. மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து, 58 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் அப ராதத் தொகையாக வசூல் செய்யப் பட்டது. தற்போது, சாலைகளில் மாடுகள் திரிவது குறைந்துள்ளன. அதுபோல் நாய்கள் தொல்லையும் குறைந்துள்ளன. இவ்வாறு மேயர் பேசினார். கமிஷனர் ராஜேஷ் லக்கானி, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, வார்டு குழுத் தலைவர் அன்பு துரை, தமிழ்நாடு மண் பாண்ட தொழிலாளர் சங்கத் தலைவர் நாராயணன் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 22 January 2010 07:34