Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையில் காளான், காய்கறி உற்பத்தி: கலக்குது கூடலூர் பேரூராட்சி

Print PDF

தினமலர் 22.01.2010

குப்பையில் காளான், காய்கறி உற்பத்தி: கலக்குது கூடலூர் பேரூராட்சி

பெ.நா.பாளையம் : வீடுகளில் கழிவாக தூக்கி எறியப்படும் குப்பையில் இருந்து உரம், காய்கறி மற்றும் காளான் உற்பத்தி செய்து, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையில் சாதித்து கொண்டிருக்கிறது கூடலூர் பேரூராட்சி.

கூடலூர் பேரூராட்சியில் 35 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 9361 வீடுகள், 120 வியாபார கடைகள் ற்றும் நிறுவனங்கள், 12 தொழிற்சாலைகள், எட்டு ஊராட்சி பள்ளிகள், ஒரு நடுநிலை பள்ளி, ஏழு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றிலிருந்து மாதம் ஏழு டன் குப்பை வெளியேற்றப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பையை தரம் பிரித்து வீடு தோறும் சேகரிக்கவும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 10 வார்டுகளில் உள்ள 6,533 வீடுகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், மட்காத குப்பை மறுசுழச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. மட்கும் குப்பையை பயன்படுத்தி இயற்கை உரம், பஞ்ச காவ்யா கலவை, மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்கான கிடங்கு 1.5 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு மூன்று "டன்' உரம் தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம், கலவை உரம் என இரு வகை தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாடு கட்டுப்பாடு வாரியத்தின் தடையின்மை சான்றும் பெறப்பட்டுள்ளது.

இத்திட்டம் தவிர, வீட்டு பின்புறத்தில் சமையல் கழிவை கொண்டு உரம் தயாரிக்கும் முறையும் பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரான இயற்கை உரத்தை பயன்படுத்தி "காம்போஸ்ட் பூங்கா' பகுதியில் வெண்டை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், கலவை உரம், வைக்கோல் கொண்டு காளான் உற்பத்தி பிரிவும் துவக்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை துவக்க விழா நேற்று முன் தினம் நடந்தது. காளான் விற்பனையை, கூடலூர் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி, செயல்அலுவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 22 January 2010 07:40