Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

Print PDF

தினமணி 27.01.2010

மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

தூத்துக்குடி, ஜன. 26: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், எம்.பி. அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை குடியரசு தினவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தேசிய கொடியேற்றினார். துணை மேயர் தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி முனியசாமிபுரத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை தேசியக் கொடியேற்றினார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில், அதன் இயக்குநர் பி. பிரபாகரன் தேசிய கொடியேற்றினார். மற்றொரு இயக்குநர் டி. ராஜகுமார், வங்கியின் பொதுமேலாளர்கள் எஸ். செல்வன் ராஜதுரை, கே.பி. நாகேந்திர மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், அதன் தலைவர் பி. கதிர்வேல் தேசிய கொடியேற்றினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ். ஜஸ்டின் தேசிய கொடியேற்றினார். தூத்துக்குடி இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில், துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் தேசிய கொடியேற்றினார்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில், அதன் அலுவலகத்தில் மாநில பொதுச்செயலர் எம். சொக்கலிங்கம் தேசிய கொடியேற்றினார். மாவட்ட தலைவர் ஏ.எம்.டி. வேல்முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தூய இன்னாசியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு பள்ளி தாளாளர் அருள்தந்தை ஆஸ்வால்ட் தலைமை வகித்தார். தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார்.

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்வியியல் கல்லூரி செயலர் ஏ. ஆறுமுகநயினார் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவுக்கு அதன் செயலர் ஆறுமுக கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.

தூத்துக்குடியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் அதன் காப்பாளர் த. எபனேசர் டேனியல் தனராஜ் தேசிய கொடியேற்றினார். மாணவர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Last Updated on Wednesday, 27 January 2010 08:10