Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேவகோட்டை நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி 29.01.2010

தேவகோட்டை நகர்மன்றக் கூட்டம்

தேவகோட்டை, ஜன. 28: தேவகோட்டை நகர்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவர் வேலுச்சாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் செழியன், பொறியாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். அலுவலக உதவியாளர் வேலுச்சாமி தீர்மானங்களை வாசித்தார். அப்போது நடைபெற்ற விவாதம்:-

கவுன்சிலர் முத்தழகு:- எனது பகுதியில் கடந்து 20 நாள்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. புகார்தெரிவித்தும் பயனில்லை. அலுவலகத்தில் இருக்கும் மின்சார ஊழியர்கள் வாக்காளர் படிவம் சரிபார்க்கும் பணிக்குச் சென்றுவிடுவதால், பணிகளை கவனிக்க ஆள் இல்லை.

தலைவர்:- தற்போது விளக்குகள் சரிசெய்யப்பட்டு விட்டன. இனி புகார் வராமல் மின்சாரத் துறை பார்த்துக் கொள்ள வேண்டும்.

சண்முகநாதன்:- நகரில் சுகாதாரம் மிகவும் மோசம். நகராட்சியில் இருந்த லாரிகள் எங்கே? லாரிகளை ஆய்வுக்காக ஏன் குறித்த காலத்தில் அனுப்பவில்லை. தற்போது நிறுத்தி வைத்திருப்பது ஏன்?

தலைவர்:- லாரிகளை அதன் மறு ஆய்வு வருவதற்கு முன்பே தீர்மானம் வைத்து ஆய்வுக்கு அனுóப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வு நாள் வந்து பிறகு தீர்மானம் கொண்டுவந்து ஒப்பந்தம் கோரியது தவறு. தவறிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறேன்.

கேசவன்:- நமது நகராட்சியில் தற்போது கொசு அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் வருகின்றன. கொசு மருந்து அடிப்பதே இல்லை.

ராஜேஸ்வரி:- எனது 11-வது பகுதியில் மருந்தை அடிக்காமல் இரு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து வீட்டில் நீர் தேங்காமல் பார்க்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்கள். முதலில் மருந்து அடித்து கொசு வராமல் பார்த்துவிட்டு பிறகு அறிவுரை வழங்குங்கள்.

எல்,பி.வி.பழனியப்பன்:- கால்வாய்களை வழித்து சுத்தம் செய்யாமல் மருந்து அடித்து பலனில்லை.

தலைவர்:- எல்லா பகுதிகளிலும் மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அவர்கள் கணக்கு பராமரித்து வருகிறார்கள்.

நகர்நல அலுவலர்:- தேவையான அளவு மருந்து உள்ளது. தினமும் மருந்து அடிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். காலையில் கால்வாயை வழித்து சுத்தம் செய்துவிட்டு பிற்பகலில் மருந்து அடிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

சண்முகநாதன்:- ராமநகர் அழகப்பா பூங்காவில் தற்போது எத்தனை பேர் வேலை செய்கிறார்ரகள்.

தலைவர்:- தற்போது நகராட்சியே நேரடியாகப் பராமரித்து வருவதால், இருக்கும் ஊழியர்களே அங்கும் வேலைகளைக் கவனித்து வருகிறார்கள். வருகிற பிப்ரவரி 1 முதல் பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு வழங்க இருக்கிறோம். அப்போது போதிய ஊழியர்களை அவர்கள் நியமித்து பணிகளைக் கவனிப்பார்கள்.

செல்லமுத்து:- எனது இரண்டாவது பகுதியில் அதிகமாக விரிவாக்க பகுதிகள் உள்ளன. இங்கெல்லாம் கூடுதலாக சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்துதர வேண்டும்.

தலைவர்:- ஏற்கனவே 106 புதிய மின் விளக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுளளது. இதற்குரிய பணத்தை மின் வாரியத்தில் அதிகாரிகள் உடனடியாக செலுத்தவேண்டும். அவை தேவையான பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்படும்.

பின்னர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.