Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆலந்தூர் நகராட்சி கூட்டத்தில் தினமலர் செய்தி குறித்து விவாதம்

Print PDF

தினமலர் 01.02.2010

ஆலந்தூர் நகராட்சி கூட்டத்தில் தினமலர் செய்தி குறித்து விவாதம்

ஆலந்தூர் : "செப்டிக்' டேங்க் கழிவுகளை மழைநீர் கால்வாயில் விடும் நட்சத்திர ஓட்டல்கள் குறித்து, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகியும், இதுவரை ஓட்டல்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆலந்தூர் நகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆலந்தூர் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் "பழவந்தாங்கல் மக்கள், 2 கி.மீ., தூரம் சென்று நங்கநல்லூரில் மின் கட்டணம் மற்றும் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, பழவந்தாங்கலிலேயே கட்டடங் களை கட்டித் தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனம்பாக்கம் ரயில்வே சுரங்கப் பாலம் திறந்த பின், நேரு நெடுஞ்சாலையை வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். படுமோசமாக இருக்கும் நேரு நெடுஞ் சாலையை சீரமைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

"சில நட்சத்திர ஓட்டல்கள், மழைநீர் கால்வாயில் "செப்டிக் டேங்க்' கழிவுகளை இரவில் திறந்து விடுகின்றன. இதனால், ஆலந்தூர் பகுதி மக்களுக்கு மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இது குறித்து, "தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இரண்டு மாதங்களாகியும் நட்சத்திர ஓட்டல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று கவுன்சிலர்கள் பாஸ் கரன், ராமதாஸ் ஆகியோர் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி தலைவர் துரைவேலு, "நட்சத்திர ஓட்டல்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைப் பதற்கு அவகாசம் கேட்டுள்ளனர். விரைவில் கழிவுநீர் மையத்தை அமைப்பதற் கான முயற்சியில் அவர்கள் ஈடுபடுவர். அதற்குபின் அத்துமீறும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Last Updated on Monday, 01 February 2010 06:21