Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

முஸ்லிம்கள் தொழுகை நடத்த பேரூராட்சி இட ஒதுக்கீடு

Print PDF

தினமணி 12.02.2010

முஸ்லிம்கள் தொழுகை நடத்த பேரூராட்சி இட ஒதுக்கீடு

உளுந்தூர்பேட்டை
, பிப். 11: உளுந்தூர்பேட்டையிலுள்ள முஸ்லிம்கள் பண்டிகைக் காலங்களில் தொழுகை நடத்துவதற்கு அவர்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்து, அதற்கான உத்தரவுக் கடிதத்தை பேரூராட்சித் தலைவர் வெ.இராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினார்.

÷உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 3 ஜமாத்துகள் உள்ளன. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பண்டிகைக் காலங்களில் தொழுகை நடத்துவதற்கு ஒரு பொது இடம் ஒதுக்கித் தரக்கோரி 7-வது வார்டு கவுன்சிலர் ப.காதர்சேட்டுவிடம் கோரிக்கை வைத்தனர். ÷

அவர் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டத்தின்போது முஸ்லிம்கள் பண்டிகைக் காலங்களில் தொழுகை நடத்துவதற்கு ஒரு பொது இடம் ஒதுக்கித் தரக்கோரி தலைவர் வெ.இராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்தார்.

÷அதன்பேரில் பேரூராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்து அவர்கள் தொழுகை செய்வதற்கு ஊ.கீரனூர் தட்டான்குளம் அருகில் பஞ்சாயத்துக்கு சொந்தமான 66.5 செண்ட் இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்து பண்டிகைக் காலங்களில் மட்டும் தொழுகை நடத்துவதற்கான உத்தரவுக் கடித்தத்தை பேரூராட்சி தலைவர் வெ.இராதாகிருஷ்ணன், உளுந்தூர்பேட்டை ஜமாத் நிர்வாகிகளிடம் வழங்கினர்.

Last Updated on Friday, 12 February 2010 11:29