Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு ஒதுக்கிய பணம் ரூ.2 லட்சம் விரயம் மணப்பாறையில் செயல்பாடின்றி முடங்கிய நாய்களுக்கான கு.க., அறுவை சிகிச்சை மையம்

Print PDF

தினமலர் 14.02.2010

அரசு ஒதுக்கிய பணம் ரூ.2 லட்சம் விரயம் மணப்பாறையில் செயல்பாடின்றி முடங்கிய நாய்களுக்கான கு.., அறுவை சிகிச்சை மையம்

மணப்பாறை: "மணப்பாறை நகராட்சியில் பெருகி வரும் நாய்த்தொல்லையை ஒழிக்க செயல்படாமல் உள்ள நாய் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தை செயல்படுத்த வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை டுத்துள்ளனர்.
மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் பெருகியு ள்ள நாய்களால் மக்கள் பாதித்த னர். வெறிநாய் தெருக்களில் அதிகம் நடமாடியதால் நடக்க, குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டனர். தெருக்களில் கிடக்கும் உணவுப்பொருட்களுக்காக நாய்கள் சண்டையிடும் போது அவ்வழியே செல்பவர்களை பதம்பார்க் க தவறுவதில்லை. பெருகி வரும் நாய்தொல்லையிலிருந்து மக்களை காத்து, நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. நகர்மன்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் பிச்சை, சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சவுக்கத் அலி ஆகியோர் ஒவ்வொரு நகர்மன்ற கூட்டத்திலும் நாய்களால் ஏற்படும் பிரச்சினை குறித்து பேசி வந்தனர். நாய்களை கட்டுப்படுத்த குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசு முடிவு செய்து ஒரு நாய்க்கு 450 ரூபாய் வீதம் செலவு செய்தது. இத்திட்டத்தின் படி மணப்பாறை நகராட்சியும் செவலூர் ரோட்டில் மாமுண்டி ஆற்றங்கரையில் உள்ள பாலு வாட்டர் ஹவுஸ் கட்டிடத்தில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து ஒருவாரம் அவைகளை பராமரிப்பதற்காக ஏற்பாடு சய்தது. அதற்காக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் உபகரணம் வாங்கப்பட்டன. நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய கால்நடை மருத்துவர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்ட நாய் அறுவை சிகிச்சை திட்டம் சில நாட்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. அதில், நாற்பது நாய்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல நாய் அறுவை சிகிச்சை செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அறுவை சிகிச்சை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளது. கட்டிடம் பூட்டி வைக்கப்படாததால் உள்ளே உள்ள உபகரணங்கள் பாதுகாப்பின்றி உள்ளது. ஒதுக்குப்புறமாக உள்ள இக்கட்டிடத்தில் இரவு நேரங்களில் பாலியல் தொழில் களைகட்டி வருகிறது. நாய்களுக்கான அறுவை சிகிச்சை திட்டம் செயல்படாததால், நகரில் மீண்டும் நாய்கள் அதிகரித்துள்ளது.

இதை பிரதிபலிக்கும் விதமாக கடந்த ஜனவரி 12ம் தேதி நகராட்சி கூட்டத்திற்கு கவுன்சிலர் சவுக்கத் அலி, நாயுடன் வந்து ரபரப்பை ஏற்படுத்தினர். அப்போது பதிலளித்த அதிகாரிகள், ஒருமாதமாகியும் இதுவரை கிடப்பில் போடப்பட்ட நாய் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையை மீண்டும் செயல்படுத்தவில்லை. மணப்பாறை நகராட்சியில் கிடப்பில் போடப்பட்ட நாய் அறுவை சிகிச்சை திட்டத்துக்காக வாங்கப்பட்ட உபகரணங்களுக்கான நிதி இரண்டு லட்சம் விரயமாக்கப்பட்டுள்ளது. நல்ல நோக்கத்துக்காக அரசு செலவு செய்யும் நிதி நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் அரசுக்கும், மக்களுக்கும் பயனில்லாமல் போனது. "நாய்த்தொல்லையிலிருந்து பொதுமக்களை காக்க மீண்டும் நாய் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.