Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி பகுதிகளில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி! எஸ்.ஜே.எஸ்.ஆர்.ஒய்., திட்டம் மார்ச்சில் துவக்கம்

Print PDF

தினமலர் 16.02.2010

நகராட்சி பகுதிகளில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி! எஸ்.ஜே.எஸ்.ஆர்.ஒய்., திட்டம் மார்ச்சில் துவக்கம்

கடலூர் : சொர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு தொழில் பயிற்சி மார்ச் மாதம் துவங்குகிறது. சொர்ண ஜெயந்தி ரோஜ்கார் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத் தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை அடிப்படையிலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் அடிப்படையில் 18 முதல் 22 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு குளிர்சாதன பெட்டி பழுது பார்த் தல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுது பார்த் தல், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல், மொபைல் போன் பழுது பார்த்தல், வரவேற்பாளர் (அலுவலகம், மருத்துவமனை), செவிலியர், சமையல் கலை, ஜே.சி.பி., ஓட் டுனர் பயிற்சி உள்ளிட்ட தொழில் பயிற்சிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. 6 மாதம் நடைபெறும் இந்த பயிற்சிக்கு நபர் ஒருவருக்கு அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்காக அந்தந்த நகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பயிற்சி முடித் ததும் அந்த நிறுவனமே அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. மார்ச் மாதம் பயிற்சி துவங்கும் என அறிவிக்கப் பட் டுள்ளது.

முதல் கட்ட பயிற்சியாக விருத்தாசலத்தில் விருத்தாம்பிகை ஐ.டி.., மற்றும் "ட்ரெசிஸ்டெட்' இணைந்து நடத்தும் பயிற்சிக்கு 48 பேர் அனுமதிக்கப்பட்டு 35 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் 30 பேர் அனுமதிக்கப்பட்டு ஏ.சி.டி., நிறுவனத்தில் பயிற்சிக் காக தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. நெல்லிக்குப்பத்தில் 38 பேருக்கு அனுமதியளிக் கப்பட்டு 28 பேரும், பண் ருட்டியில் 24 பேருக்கு 23 பேரும் தேர்வு செய் யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு கடலூர் மஞ்சக் குப் பம் "ட்ரெசிஸ்டெட்' நிறுவனத்தில் பயிற்சி அளிக் கப்படும். அனைத்து நகராட்சியிலும் அந்தந்த பகுதிகளில் விண்ணப்பம் அளித்து தேர்வு செய்துள்ள நிலையில் கடலூர் நகராட்சியில் நேற்றுதான் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சேர்மன் தங்கராசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சேர்மன் பேசுகையில் "இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் கடலூர் நகராட்சிக்கு 104 பேருக்கு அனுமதிக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு கவுன் சிலர்களும் தங்கள் பகுதியில் திறமையுள்ள 2 பேரை தேர்வு செய்து பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்' என கூறி அதற்கான படிவங் களை வழங்கினார்.

Last Updated on Tuesday, 16 February 2010 03:07