Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் மேல்முறையீடு செய்ய அரசு திட்டம்

Print PDF

தினமணி 16.02.2010

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் மேல்முறையீடு செய்ய அரசு திட்டம்

பெங்களூர், பிப்.15: பெங்களூர் மாநகராட்சி மன்ற தேர்தல் விவகாரம் 3-வது முறையாக உச்ச நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறுகிறது. இம்முறை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.

பெங்களூர் மாநகராட்சி மன்ற தேர்தலை நடத்த கடந்த ஆண்டு இறுதியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள தொடங்கியது. மாநில அரசும் 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து பட்டியலை நவம்பர் 30-ம் தேதி அறிவித்தது.

÷இதைத்தொடர்ந்து பிப்ரவரி 21-ம் தேதி மாநகராட்சி மன்ற தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனுதாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி துவங்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

÷இந்நிலையில் அரசு அறிவித்த இட ஒதுக்கீடு பட்டியலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வார்டுகளில் வசிக்கும் மக்கள் தொகை அடிப்படையில் சாதிவாரி இட ஒதுக்கீடு செய்து, புதிய பட்டியலை அறிவித்துதிட்டமிட்டபடி பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

÷ உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் அந்த மனுவை விசாரித்து, அரசு அறிவித்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

÷இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிலர் சிறப்பு மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலானபெஞ்ச், இட ஒதுக்கீடு பிரச்னையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து விளக்கம் பெற்று தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

÷இந்நிலையில் தேர்தல் நடத்த போதிய கால அவகாசம் இல்லாததால் தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதுஉயர் நீதிமன்றத்தில் மனு செய்து அனுமதி பெறாமல் தேர்தலை ரத்து செய்தது சட்டவிரோதம். எனவே, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து முதலில் அறிவித்தபடி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் ராமச்சந்திரப்பா, ரமேஷ், ஹுச்சப்பா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கோபால கெüடா தலைமையிலான உயர் நீதிமன்ற பெஞ்ச், மார்ச் 30-ம் தேதிக்குள் பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்தி முடிக்கஉத்தரவிட்டது.

÷ ஆனால் மார்ச் மாத்திற்குள் தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை. இதனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.

÷மார்ச் மாதம் எஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வுகள் நடைபெறவுள்ளன. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சியை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதனால் மார்ச் மாதம் தேர்தல் நடத்துவது முடியாத காரியம் என உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு செய்ய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

÷இதற்கான ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் மே மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மே மாதத்துக்குப் பிறகு தேர்தலை ஒத்தி வைக்கக்கூடாது என்று கடந்த சனிக்கிழமை நடந்த பாஜக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா கண்டிப்புடன் கூறியுள்ளார். ÷

அவ்வாறு ஒத்திவைத்தால் அது பாஜகவுக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என அவர் அரசை எச்சரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே, தற்போதைய சூழ்நிலையில் மாநகராட்சி மன்றத் தேர்தலை மே மாதத்திற்கு தள்ளிவைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு செய்ய தயராகிவிட்டது அரசு.

Last Updated on Tuesday, 16 February 2010 06:08