Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டூவீலர் ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டுக்கு 'கப்பம்'

Print PDF

தினமலர் 18.02.2010

டூவீலர் ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டுக்கு 'கப்பம்'

திருப்பூர் : திருப்பூரில் டூவீலர் ஓட்டுவோர் அவசியம் ஹெல்மெட் அணிந்து செல்வது நலம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், டூவீலர் ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டுக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில் நகரமான திருப்பூரில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணியாற்றுகின்றனர். கோவை, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பணிக்காக வருகின்றனர். வேலையின் தன்மைக்கேற்ப, டூவீலர் வைத்திருக்கின்றனர். தினமும் டூவீலரிலேயே ஊருக்குச் செல்ல முடியாது என்பதால், ஸ்டாண்டுகளில் விட்டுச் செல்கின்றனர்.
பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான டூவீலர் ஸ்டாண் டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங் கள் நிறுத்தப்படுகின்றன. இடப்பற்றாக் குறை ஏற்பட்டால், அருகிலுள்ள தனியார் ஸ்டாண்டுகளில் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.

தற்போது, டூவீலர் ஓட்டுவோர் ஹெல் மெட் அணிந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், ஹெல்மெட் அணிவது அதிகரித்து வருகிறது. ஸ்டாண்டுகளில் டூவீலர் நிறுத்துவோரிடம் இருந்து, ஹெல்மெட்டுக்கென தனியாக கட்டணம் நிர்ணயித்து வசூலிக் கின்றனர். வாகனங்களில் ஹெல்மெட் "லாக்' வசதியிருந்தால் கட்டணமில்லை; அதிலேயே "லாக்' செய்து கொள்ளலாம். "லாக்' வசதி இல்லாமல், "பத்திரமாக வைத்திருங்கள்; நாளை வாங்கிக் கொள்கிறேன்' என்று கூறினால், அதற்கு ஒரு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள மாநகராட்சி ஸ்டாண்டில் இடப் பற்றாக்குறை ஏற்படுவதால், தனியார் ஸ்டாண்டுகளை நாடிச் செல்ல வேண்டிஉள்ளது. வெளியூருக்குச் செல்லும் போது, ஹெல்மெட்டை கையோடு எடுத்துச் செல்ல முடியாது; ஸ்டாண்டுகளில் வைத்துச் செல்ல வேண்டும்.
பாதுகாப்பு கருதி, டோக்கன் எண்ணுடன் ஹெல்மெட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இதற்காக ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். தனியார் ஸ்டாண்டுகளில் 12 மணி நேரத்துக்கு வாகனம் நிறுத்த ஐந்து ரூபாய், ஹெல்மெட் பாதுகாக்க ஒரு ரூபாய் வசூலிக்கின்றனர். ஒரு நாள் முழுவதும் ஹெல்மெட்டுடன் வாகனத்தை நிறுத்திச்சென்றால் 12 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. திருப்பூர் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் டூவீலரை நிறுத்திச் செல்ல சிரமமாக உள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதலாக டூவீலர் ஸ்டாண்டுகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும், என்றனர

 

Last Updated on Thursday, 18 February 2010 07:44