Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மூன்றாண்டுக்கு மாநகராட்சி இனங்கள் ஏலம் : 'பினாமி'யுடன் பங்கேற்ற கவுன்சிலர்கள்

Print PDF

தினமலர் 19.02.2010

மூன்றாண்டுக்கு மாநகராட்சி இனங்கள் ஏலம் : 'பினாமி'யுடன் பங்கேற்ற கவுன்சிலர்கள்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் முதல் முறையாக மூன்றாண்டுக்கான குத்தகை ஏலம் நேற்று நடந்தது. கவுன்சிலர்கள் பலரும் "பினாமி' பெயரில் குத்தகை இனங்களை ஏலம் எடுத்தனர். மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு குத்தகை இனங்களில் வரி வசூலிப்பதற்கான உரிமம் 2009-10 முதல் மூன்றாண்டுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த அரசாணை வெளியிடும் போது பல மாநகராட்சிகளில் ஏலம் விடப்பட்டதால், சென்றாண்டு அரசாணை நிறைவேற்ற முடியாமல் போனது. அரசாணை வெளியிட்ட பின் ஈரோடு மாநகராட்சியில் முதல் முறையாக மூன்றாண்டுக்கான (2010-13) பொது ஏலம் நேற்று நடந்தது. நேதாஜி தினசரி சந்தை, பாரதி வீதியில் உள்ள சிலம்பாரன் குட்டை தினசரி சந்தை, நேதாஜி ரோட்டில் உள்ள ஹெமிங்வே வாரச்சந்தை, தங்கபெருமாள் வீதி மற்றும் நீல்கிரிஸ் சந்து பகுதியில் உள்ள வாரச்சந்தை மற்றும் பெரியார் நகர் வாரச்சந்தை, கனி மார்க்கெட், பஸ் ஸ்டாண்டு, பஸ் ஸ்டாண்டில் உள்ள தங்கும் விடுதி, பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டணக் கழிப்பிடம், பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கழிப்பிடம், பஸ் ஸ்டாண்டு சைக்கிள் ஸ்டண்டு, ..சி., பூங்கா நுழைவுக் கட்டணம், ஆடுவதைக்கூடம் உள்பட மொத்தம் 27 இனங்களுக்கு நேற்று ஏலம் நடந்தது.

நேதாஜி தினசரி சந்தை, கனிமார்க்கெட், மாநகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டு மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் பஸ் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஆகிய மூன்று இனங்களுக்கு மட்டும் ஆறு மாத உரிமம் கொடுக்கப்பட்டது. ஏலம் எடுக்க வைப்பு தொகை செலுத்தியவர்கள் அனைவரும் நேற்று காலை மாநகராட்சி வளாகத்தில் குவிந்திருந்தனர். இனங்கள் வாரியாக வைப்பு தொகை செலுத்தியவர்கள் கமிஷனர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏலத்தின் போது தி.மு.., - .தி.மு.., நிர்வாகிகள் அதிகளவில் காணப்பட்டனர். ஏலம் விடும்போது இரு தரப்பினரும் ஒன்றிணைந்து பேசி பின்னரே, ஏலம் நடக்கும் அறைக்குள் சென்றனர்.

ஏலம் அறிவிப்பு வெளியாகும்போது தி.மு.., - .தி.மு.., - தே.மு.தி.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் பெரும் பரபரப்பாக காணப்பட்டனர். இதை வைத்து பார்க்கும் போது, மாநகராட்சி இனங்கள் பலவற்றை கவுன்சிலர்கள், தங்கள் ஆதரவாளர்களை வைத்து எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து கவுன்சிலர்களிடம் கேட்டபோது, "கவுன்சிலர்கள், அவர்களை சார்ந்த குடும்பத்தினர் ஏலம் எடுக்க கூடாது. ஏலம் நடப்பதை கவுன்சிலர்கள் பார்வையிடலாம். இனங்கள் எவ்வளவு மதிப்புக்கு ஏலம் விடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளோம்' என்றனர். கமிஷனர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது," பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட நான்கு இனங்கள் மட்டும் ஏலம் போகவில்லை. மற்ற இனங்கள் நன்றாக ஏலம் போனது,' என்றார்.

Last Updated on Friday, 19 February 2010 07:24