Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை டவுன் வழுக்கோடையில்ரூ.2 கோடி செலவில் பாலம்: அடுத்த மாதம் பணிகள் துவங்க முடிவு

Print PDF

தினமலர் 24.02.2010

நெல்லை டவுன் வழுக்கோடையில்ரூ.2 கோடி செலவில் பாலம்: அடுத்த மாதம் பணிகள் துவங்க முடிவு

திருநெல்வேலி:நெல்லை டவுன் வழுக்கோடையில் ரூ.2 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறினார்.நெல்லை டவுன் வழுக்கோடை பாலத்தில் மழை காலங்களில் மழைநீர் ரோட்டில் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கும், மக்கள் செல்வதற்கும் இடையூராக உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் வழுக்கோடை தாம்போதியில் பாலம் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை வந்த துணை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. வழுக்கோடை பகுதியை பார்வையிட்ட துணை முதல்வர் ஸ்டாலின், அந்த இடத்தில் பாலம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க எஸ்டிமேட் போடப்பட்டது. அந்த இடத்தில் செல்லும் குடிநீர் குழாயை மாற்றியமைக்கவேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால் வேறு பிளானில் பாலம் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து புதிய மதிப்பீடு போடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் இதற்கான பணிகள் துவங்கும் என தெரிகிறது.

இணைப்புச் சாலை3ம் தேதி திறப்பு:வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல்.பகுதியில் இருந்து கொக்கிரகுளம் வரையிலான 1.2 கி.மீ இணைப்பு ரோடு ரூ.33 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மார்ச் 3ம் தேதி திறந்துவிடப்படும்.இவ்வாறு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறினார்.