Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விரைவில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல்: எடியூரப்பா அறிவிப்பு

Print PDF

தினமணி 24.02.2010

விரைவில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல்: எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூர், பிப்.23: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உறுதி அளித்தார்.

பெங்களூர் மாநகராட்சித் தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அப்பீல் செய்யப்பட்டது. அதில் மார்ச் மாதம் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெற இருப்பதால் மாநகராட்சி தேர்தலை நடத்த இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என கோரியிருந்தது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசு மனுவை தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும் கால அவகாசம் வேணóடுமானால் உயர்நீதிமன்றத்தையே அணுக வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால் ஏற்கெனவே கால அவகாசம் அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்த அரசு முன்வருமா அல்லது மீண்டும் உயர்நீதிமன்றத்தில் கால அவகாசம் கோருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை விதானசெüதாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த முதல்வர் எடியூரப்பாவிடம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிபெங்களூர் மாநகராட்சித் தேர்தலை நடத்த அரசு முன்வருமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்து எடியூரப்பா கூறியது:

தேர்தலை நடத்த அரசு தயாராகவே உள்ளது. ஆனால் மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு நடக்க இருப்பதால் தேர்தலை நடத்த வகுப்பறைகள் கிடைப்பது கஷ்டம். மேலும் தேர்தலில் பணியாற்ற ஆசிரியர்களையும் நியமிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் இதை எல்லாம் பரிசீலித்து பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றார். விரைவில் என்றால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட கெடுவுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்க முதல்வர் மறுத்துவிட்டார்.

மார்ச் 14-ல் தேர்தல்?: உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மாநில தேர்தல் ஆணையர் சிக்கமட் கூறியது: மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அளிக்கும்படி அரசுக்கு úóதர்தல் ஆணையம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அரசு இட ஒதுக்கீடு பட்டியலை அளிக்கவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் அரசின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டதால், தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் ஆணையம் சார்பில் மனுதாக்கல் செய்யப்படும். மார்ச் மாதம் 14-ம் தேதி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்றார் அவர்.

Last Updated on Wednesday, 24 February 2010 10:39