Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கும்பகோணம் நகராட்சிக் கூட்டம்

Print PDF

தினமலர் 25.02.2010

கும்பகோணம் நகராட்சிக் கூட்டம்

கும்பகோணம்:கும்பகோணம் நகரில் கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்க கொள்ளிடம் ஆற்றில் புதிதாக 3 ஆழ்துளை கிணறுகளை அமைக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.கும்பகோணம் நகராட்சி கூட்டம் தலைவர் தமிழழகன் தலைமையில் நடந்தது. ஆணையர் பூங்கொடி, பொறியாளர் கனகசுப்புரெத்தினம், நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன், மேலாளர் கருணாநிதி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனைக்காரன் பாளையம் குடிசைப் பகுதி மாணிக்கம் நகர் பாதாள சாக்கடை மெயின் அமைக்கப்படாமல் விடு பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம் பாட்டு திட்டத்தின் கீழ் சிமென்ட கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ரூ.80 ஆயிரம் மதிப்பில் புதை சாக்கடை மெயின் குழாய் அமைக்கப்படும்.ரெங்கன் தெரு பொது கழிவறை ரூ.3 லட்சம் மதிப்பில் பொது மராமத்து பணிகள் மேற்கொள்ளப் படும். உள்ளிக்கான் மேல மற்றும் கீழவீதிகளில் பாதாள வடிகால் இணைப்பு வழங்கியதால் உடைக்கப்பட்ட கான்கிரீட் தளங்கள் சேதமடைந்துள்ளதால் ரூ.2 லட்சத்தில் மேம்படுத்தப்படும்.

வரும் ஆண்டிற்கு குடிநீர் பாது காப்பிற்கென ரூ.10 லட்சம் மதிப் பிலான குளோரின் திரவம் வாங்கப் படும். தெரு விளக்கு பராமரிப்பு பணிக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் உதிரி பாகங்கள் வாங்கப்படும். துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான தளவாட பொருட்கள் ரூ.6 லட்சம் மதிப்பில் வாங்கப்படும். பொது சுகாதார பிரிவு வாகனங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் உதிரி பாகங்கள் வாங்கப்படும்.பொது சுகாதார பிரிவுகளில் பயன்படுத்த கிருமி நாசினிகள் ரூ.3 லட்சம் மதிப்பில் வாங்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தில் விடுபட்ட வீட்டு இணைப்புகளை நகராட்சி மூலம் வார்டு வாரியாக பிரித்து ஆள் இறங்கு கிணற்றில் இருந்து சுற்றுச்சுவர் வரை இணைப்பு கொடுக்கப்படும். கொசுப்புழு கொல்லி மருந்து ரூ.13 லட்சத்தில் வாங்கப்படும் போன்ற வளர்ச்சிப் பணிகள் செய்வதென முடிவெடுக்கப்பட்டது.
தலைமை நீரேற்று நிலையமான கொள்ளிடம் ஆற்றின் 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. அவற்றில் 2 கிணறுகளில் மட்டும் தற்போது நீரூற்று கிடைக் கிறது. 3 ஆழ்துளை கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காத காரணத்தால் குடிநீர் வினியோகம் வறட்சி காலங்களில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு ஆழ்துளை கிணறு அமைக்க நீரூற்று உள்ள இடங்களை குடிநீர் வடிகால் வாரிய கிராம குடிநீர் திட்டம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எனவே புதிதாக 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. அதில் 15 குதிரை விசைத்திறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டார் பம்புசெட்டுகள், ஸ்டாட்டர்கள், கேபிள்கள், பைப் பிட்டிங்குகள், கெப்பாசிட்டார்கள், பேனல் போர்டுகள் ரூ.21 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.வரும் நிதியாண்டில் குடிநீர் வினியோகத்தில் தலைமை நீரேற்று நிலைய மின் மோட்டாரை இயக்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் வால்வுகள் இயக்கு தல் மற்றும் காத்தல் பணியை மேற்கொள்ள இந்நகராட்சியில் போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தனியார் ஒப்பந்த பணிகள் மேற்கொள்வ தென்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 25 February 2010 06:54