Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சோழிங்கநல்லூரில் உள்ளாட்சி தினவிழா மகளிர் குழு பேரணி

Print PDF

தினகரன்                 02.11.2010

சோழிங்கநல்லூரில் உள்ளாட்சி தினவிழா மகளிர் குழு பேரணி

துரைப்பாக்கம், நவ. 2: சோழிங்கநல்லூர் பேரூராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர் அரவிந்த் ரமேஷ் தலைமை வகித்தார். பேரூராட்சியின் 4 ஆண்டு பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற பேரணியும் நடந்தது. இதை அரவிந்த் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய அட்டைகளை பேரணியில் சென்றவர்கள் பிடித்துச் சென்றனர். கிராம நெடுஞ்சாலை வழியாக பேரணி சென்று திரும்பியது. செயல் அலுவலர் சம்பத், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

நகராட்சி சத்துணவு பணிக்கு 224 பேர் விண்ணப்பம்

Print PDF

தினமலர்                 01.11.2010

நகராட்சி சத்துணவு பணிக்கு 224 பேர் விண்ணப்பம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் சத்துணவு அமைப்பாளர் இரண்டு பணியிடத்திற்கு 224 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சி பள்ளிகளில் காலியாகவுள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன. கடந்த செப்., 22ம் தேதி முதல் அக்., 5ம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. சத்துணைவு அமைப்பாளர் இரண்டு பணியிடத்திற்கு விண்ணப்பித்த 224 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. சத்துணவு உதவியாளர் 12 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 79 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. சான்றிதழ்களை சரிபார்த்த நகராட்சி கமிஷனர் பூங்கொடி அருமைக்கண், விண் ணப்பங்களை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்களுக் கான நேர்காணல் நடந்தது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், இரண்டு அமைப்பாளர் பணியிடத்திற்கும், ஒன்பது உதவியாளர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

 இதில், இனசுழற்சி முறையில் பயனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நேர்காணல் நடந்தது. அமைப்பாளர் பணியிடத்திற்கு 65 பேரும், உதவியாளர் பணியிடத்திற்கு 60 பேரும் விண்ணப்பித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வளநாட்டுத்துரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) தனலட்சுமி ஆகியோர் விண்ணப்பித்தவர்களிடம், சான்றிதழ்களை சரிபார்த்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 11 அமைப்பாளர் பணியிடத்திற்கு 148 பேரும், 10 உதவியாளர் பணியிடத்திற்கு 58 பேரும் விண்ணப்பித்திருந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகைரத்தினம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) மாரிமுத்து ஆகியோர் நேர்காணலை நடத்தினர். இதில், தேர்வான பயனாளிகள் குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. வால்பாறை: வால்பாறையில் காலியாக உள்ள சத்துணவுப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்து சத்துணவு அமைப்பாளர் பணியிடமும், பத்து சமையலர் பணியிடமும் காலியாக உள்ளன. இந்தப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வு வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டவர்களிடம் பொறியாளர் சுப்பிரமணி, தலைமை எழுத்தர் ராமதாசு ஆகியோர் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தினர். இந்த நேர்முகத்தேர்வில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கு 83 பேரும், சத்துணவு சமையலர் பணியிடத்திற்கு 139 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

 

நகர வளர்ச்சி திட்டத்தில், மக்கள் எதிர்பார்ப்பு என்ன?படிவத்தில் விபரம் கேட்குது மாநகராட்சி

Print PDF

தினமலர்                 01.11.2010

நகர வளர்ச்சி திட்டத்தில், மக்கள் எதிர்பார்ப்பு என்ன?படிவத்தில் விபரம் கேட்குது மாநகராட்சி

திருப்பூர்:ஒருங்கிணைக்கப்பட உள்ள திருப்பூர் மாநகராட்சியில் செய்ய வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, பொதுமக்களிடம் கலந்தாய்வு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன; மக்களின் எதிர்பார்ப்புகளைஅறியும் வகையில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.அவை வருமாறு:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் எத்தனை ஆண்டுகளாக வசிக்கிறீர்கள்; திருப்பூரில் குடியேறியதற்கான காரணம்; தொழில் நகரமான திருப்பூர் குறித்த மதிப்பீடு; நகரின் மூன்று முக்கிய பிரச்னை; குடிநீர், போக்குவரத்து, மழைநீர் வடிகால் அமைப்பு, உள்ளாட்சி பணிகள், நீர்நிலை பராமரிப்பு, மாசுபடுதல், தொழிற்சாலை கழிவு, கல்வி வசதி, மருத்துவ வசதி, குடிசை பகுதி, பொழுதுபோக்கு வசதி உள்ளிட்ட விபரங்கள் குறித்த வினாக்கள், படிவத்தில் உள்ளன.இதுதவிர, வீட்டு வசதியில் உள்ள பிரச்னை; நகரில், புறநகரில் வசிப்பதற்கான முக்கிய காரணம்; குடிசை பகுதிகளில் உள்ள பிரச்னை; பிரச்னைகளை தீர்க்க வழிமுறை குறித்தும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் பிரிவில் உள்ள பிரச்னை;

மாநகராட்சி வழங்கும் குடிநீர் அளவு, வழங்கும் நேரம்; குடிநீர் வசதியற்ற தெருக்கள், பகுதிகள், குடிநீர் வினியோகிக்கும் நேரம், இதை மேம்படுத்த மக்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீர் வெளியேற்றப்படும் விதம்; இதில் உள்ள பிரச்னை, இதை மேம்படுத்த கூறப்படும் ஆலோசனை குறித்து கேட்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால், பேரிடர் மேலாண்மை வசதி. போக்குவரத்து வசதிகளில், போக்குவரத்தில் உள்ள பிரச்னை; தனியார் வாகன போக்குவரத்து, ஆக்கிரமிப்பு, குறுகலான சாலை, வாகன நிறுத்துமிட வசதி, பிரச்னையான சாலை சந்திப்புகள், நடைபாதைகளின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மையில் உள்ள பிரச்னை; இதை மேம்படுத்த ஆலோசனை; பூங்கா, விளையாட்டு திடல்களின் விபரங்கள்; அதன் பராமரிப்பு, சுற்றுலா வசதிகளற்ற நிலை பற்றிய கருத்துகளை மக்கள், படிவத்தில் தெரிவிக்கலாம்.இத்துடன், திருப்பூர் மாநகரம், புறநகர் பகுதிகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த மக்களின் கருத்துகள்; 25 ஆண்டுகளுக்குபின், திருப்பூர் இருக்க வேண்டிய நிலை, வரும் முதலாண்டில் செய்ய வேண்டிய முன்னுரிமை திட்டம், ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்கள் என 42 வினாக்களாக, அதில் உட்பிரிவு கேள்விகளுடன் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படிவங்களில் பெறப்படும் மக்களின் கருத்துகள், தேவையான ஆலோசனைகளை கொண்டு உத்தேச மதிப்பீடுகளில் மாற்றம் செய்வதும், மாநகர வளர்ச்சிக்கேற்ப புதிய முறைகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 


Page 335 of 841