Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிய தகவல் மையம் திறப்பு புகார் தெரிவித்தால் நடவடிக்கை

Print PDF

தினகரன்               01.11.2010

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிய தகவல் மையம் திறப்பு புகார் தெரிவித்தால் நடவடிக்கை

பெரம்பலூர், நவ. 1: பிறப்பு, இறப்பு பதிவு செய்ய பெரம்பலூர் நகராட்சியில் தகவல் மையம் இன்று திறக்கப்படுகிறது. தகவல் மையத்தில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பா ண்டு பெரம்பலூர் மாவ ட் டத்தில் 121 ஊராட்சி, பெர ம்பலூர், ஆலத்தூர், வேப் பூர், வேப்பந்தட்டை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடி காடு ஆகிய 4பேரூராட்சி கள், ஒரு மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட 130 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளாட்சி தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நான் கரை ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ள சாதனை பட்டியல்கள் நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி நகரா ட்சி தலைவர் இளையராஜா கூறியதாவது:

உள்ளாட்சி தினவிழாவையொட்டி பெரம்பலூர் நகராட்சியில் தகவல் மையம் திறக்கப்படுகிறது. இதில் பிறப்பு இறப்பு சான் றிதழ் பதிவு செய்தல், வீட்டுமனைகளுக்கு அனுமதி பெறுதல், சொத்து வரிவிதி ப்பு, காலிமனை வரிவிதிப்பு, குடிநீர் இணைப்பு கட்டிட அனுமதி, பாதாள சாக்கடை திட்ட இணைப்பு குறித்து விண்ணப்பிக்க வசதியாக நகராட்சி அலுவலகத்தில் இந்த தகவல் மையம் நவம் பர் 1 முதல் செயல்பட உள் ளது. இந்த தகவல் மையத் தில் புகார்களை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள் ளது.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய 21 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இங்குள்ள 04328& 277185 என்ற தொலைப்பேசி எண் ணில் தொடர்பு கொண்டு, தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு பிர ச்னை, சுகாதார பிரச்னை உள்ளிட்ட அடிப்படை வசதி குறைபாடு குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தினவிழாவையொட்டி, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பங்கேற்கும் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. 2ம் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்கும் சுகாதார விளையாட்டு போட்டி நடைபெறுகிறது என்றார்.

இதேபோல் ஒன்றியங் கள், பேரூராட்சி அலுவலகங்களில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்படவுள்ளது. நிகழ்ச்சிகளில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்கின்ற னர்.

 

வில்லிவாக்கம் ரெயில்வே சுரங்கபாதை டிசம்பர் மாதம் திறப்பு: மண்டல குழு தலைவர் தகவல்

Print PDF

மாலை மலர்             29.10.2010

வில்லிவாக்கம் ரெயில்வே சுரங்கபாதை டிசம்பர் மாதம் திறப்பு: மண்டல குழு தலைவர் தகவல்

வில்லிவாக்கம் ரெயில்வே சுரங்கபாதை டிசம்பர் மாதம் திறப்பு:  மண்டல குழு தலைவர் தகவல்

சென்னை அக். 29- சென்னை மாநகராட்சி 4-வது மண்டல குழு கூட்டம் அயனாவரத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. மண்டல தலைவர் வி.எஸ்.ஜெ. சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல அதிகாரி பூமிநாதன், கவுன் சிலர்கள் சாமிக்கண்ணு, நாகராஜன், காஞ்சிதுரை, மாலினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் மண்டல தலைவர் வி.எஸ்.ஜெ. சீனிவாசன் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி துணை முதல்-அமைச்சர்கள் ஆலோசனையின் கீழ் சென்னை மாநகராட்சி 4 ஆண்டுகளை கடந்து 5-வது ஆண்டு மக்கள் பணியை தொடங்குகிறது. கடந்த 4 வருடத்தில் பல்வேறு நலத்திட்டப்பணிகள் இப்பகுதி, மக்களுக்கு நிறை வேற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய சாதனை திட்டங்களாக பெரம்பூர் ரெயில்வே மேம்பாலம் திகழ்கிறது. இதையடுத்து ரூ.10 கோடியில் பெரம்பூரில் லோகோ பாலம் கட்டும் பணி நிறைவடைகிறது. வில்லிவாக்கத்தில் ரெயில்வே சுரங்கபாதை கட்டப்படுகிறது. அந்த பணியும் நிறை வடைந்து இரண்டு பாலங்களும் டிசம்பர் மாதத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

மழை நீர் வடிகால், பூங்காக்கள் ஏராளம் அமைக்கப்பட்டுள்ளன. 60-வது வட்டத்தில் பசுமை மாறா உலர் வெப்பகாடு ஒரு கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 51-வது வட்டத்தில் ரூ.1.20 கோடி செலவில் சத்துணவு கூடம் எம்.எல்.. நிதியில் கட்டப்பட்டுள்ளது.

54-வது வட்டத்தில் 22 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பாலவாயல் நடைபாதை வியாபாரிகளுக்கு மார்க்கெட் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.ரூ.3? கோடி செலவில் தார் சாலை போடப்பட்டுள்ளது. ரூ.52 கோடி செலவில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. அயனாவரம் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் செலவில் கூடு தல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

51-வது வட்டத்தில் தீட்டி தோட்டத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்துள்ளன. இதுதவிர உடற்பயிற்சி கூடம், சிமெண்ட் சாலை, என பல்வேறு மக்கள் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

5-வது ஆண்டிலும் மேலும் பல திட்டங்கள் இப்பகுதி மக்களுக்கு செய்து கொடுக்க சென்னை மேயர் தயாராக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Friday, 29 October 2010 11:42
 

கரூர் நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி                    29.10.2010

கரூர் நகர்மன்றக் கூட்டம்

கரூர், அக். 28: கரூர் நகர்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பெ. சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி. கனகராஜ் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 3,34,195 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும், அந்த நிதியில் இரட்டைவாய்க்காலுக்கு தடுப்புச் சுவர் அமைப்பது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், ரூ. 6.05 லட்சத்தில் நகராட்சியில் பணியாற்றும் ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தாய் சேய் நல உதவியாளர்களுக்கு சீருடை, காலணி வழங்குவது என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் இரா. பிரபு, ஆண்டாள் பாலகுரு, . சுப்பன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

 


Page 336 of 841