Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை

Print PDF

தினமணி                     29.10.2010

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை

அறந்தாங்கி, அக். 28: அறந்தாங்கி நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் ஜி.எம்.ஆர். ராஜேந்திரன் வெளிநடப்பு செய்தார்.

அறந்தாங்கி நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி..என். கச்சுமுஹம்மது, ஆணையர் பா. அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜி.எம்.ஆர். ராஜேந்திரன் (திமுக): எனது வட்டத்துக்கு இரண்டாம் கட்டமாக வழங்க வேண்டிய 105 வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் அலுவலகத்திற்கு வந்த பின்னரும், 2 மாதங்களாக நகராட்சி நிர்வாகம் அவற்றை விநியோகிக்கவில்லை. சாலை மேம்பாட்டுத் திட்டத்திலும் எனது வட்டம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் (இப்படிக் கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார் ராஜேந்திரன்).

தலைவர்: ""கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கலாம் என்று முடிவெடுத்தபோது, தான் வெளியூர் செல்வதால் தேதியை மாற்றும்படி அவர்தான் கேட்டுக்கொண்டார்; இப்போது அவரே வெளிநடப்பு செய்கிறார்.''

லெ. முரளிதரன் (திமுக): ""அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் முறையாக கிடைக்க குடிநீர் இணைப்புகளில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவி அமைக்க வேண்டும். கோட்டை கொத்தவால் சாவடியில் 272 வீடுகள் உள்ளன. இந்த இடம் தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கு சொந்தமான இடம் என்பதால் குடியிருப்பவர்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. ஆகவே, அந்த இடத்தை நகராட்சிக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.''

தலைவர்: ""இந்த இடத்தைப் பற்றி ஏற்கெனவே மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி மூலம் சம்பந்தப்பட்ட துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தை வகைமாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர்

இணைப்பில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி வைத்தால் பள்ளம் மேடு போன்ற இடங்களில் குடிநீர் செல்வது பாதிக்கப்படும். இருந்தாலும் உறுப்பினரின் கோரிக்கைபடி மன்றத்தில் தீர்மானம் வைக்கப்படும்.''

வி.ஆர்.எஸ். சுப்பிரமணியன் (திமுக): ""குடிநீர் இணைப்பு வழங்குவதில் பல முறைகேடுகள் நடக்கின்றன.''

சு. ரமேஷ் (திமுக): ""குடிநீர் கிடைப்பதில் பிரச்னை இருந்தால் எந்த நேரத்திலும் சந்திக்கலாம் என்று துணை முதல்வர் கூறியுள்ளார். அறந்தாங்கியில் 4 முதல் 5 அடி ஆழத்தில் பள்ளம் வெட்டி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது.

ஆகவே, 27 வட்ட உறுப்பினர்களும் வருகிறோம். துணை முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்து தீர்வு கிடைக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.''

தலைவர்: ""இதுகுறித்து ஆய்வுசெய்ய நகராட்சி மண்டல அலுவலகத்திலிருந்து ஒரு குழு விரைவில் வரவுள்ளது. உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.''

கோ. நாராயணசாமி (திமுக): ""தெரு விளக்கிற்கு மின் உபகரணங்கள் இல்லாத காரணத்தால் தெருவிளக்குகளைப் பராமரிக்க முடியவில்லை என்று ஊழியர்கள் கூறுகிறார்கள். ஆகவே, உபகரணங்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும். எல்.என்.புரத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை ஒழுங்காக செயல்படுவதில்லை, தீபாவளி நேரத்தில் பொருள் வாங்க மக்கள் சிரமப்படுகிறார்கள்.''

தலைவர்: ""மின் உபகரணங்கள் உடனுக்குடன் வாங்கப்படுகின்றன. பணியாளர் பற்றாக்குறை காரணமாக ரேஷன் கடைகள் முழுமையாக இயங்க முடியவில்லை.''

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

 

மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி                   29.10.2010

மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம்

மானாமதுரை, அக். 28: மானாமதுரை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ராஜாமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் துணைத் தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் மருது மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

5-வது வார்டு அதிமுக கவுன்சிலர் நரசிங்கம் பேசுகையில், வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்வதில் தனது வார்டு புறக்ககணிக்கப்படுவதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த தலைவர் ராஜாமணி, உங்கள் வார்டில் நீங்கள் தெரிவிக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அவசியம் செய்து தரப்படும் என்றார்.

17-வது வார்டு அதிமுக கவுன்சிலர் வி.என்.சந்திரசேகர் பேசும்போது, வாரச் சந்தை நடைபெறும் நாளில் ஆற்றுக்குள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் மீன்கடைகள் வைக்கப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் இந்த பாதையில் மூக்கை மூடிக்கொண்டு நடந்து செல்கின்றனர். எனவே மீன் கடைகளை வேறு இடத்தில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். ஆற்றுக்குள் வேறு இடத்தில் மீன் கடைகள் வைக்க ஏற்பாடு செய்வதாக தலைவர் தெரிவித்தார். மேலும் நகரில் அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து கொசு மருந்து அடிக்கப்படும் எனவும் அவர் கூறினார். பின்னர் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

 

சுகாதார பணி தீவிரம் நகராட்சி பகுதியில் பன்றிகள் வேட்டை

Print PDF

தினகரன்                  29.10.2010

சுகாதார பணி தீவிரம் நகராட்சி பகுதியில் பன்றிகள் வேட்டை

ஜெயங்கொண்டம், அக். 29: ஜெயங்கொண்டம் நகராட்சியில் சுற்றி திரியும் பன்றிகளை நகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட சின்னவளையம், சீனுவாசநகர், ஸ்டேட் பேங்க் காலனி, வேலாயுதநகர், கரடிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் அதிக பன்றிகள் சுற்றி திரிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தின. இது குறித்து பன்றி வளர்ப்போரை பல முறை எச்சரித்தும் தொடர்ந்த பனிறிகள் உலா வந்தன.

இதையடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி செயல் அலுவலர் மோகன் உத்தரவின் பேரில் நேற்று அதிரடி நடவடிக்கையில் இறங்கிய நகராட்சி ஊழியர்கள் மூலம் ஒரே நாளில் 52 பன்றிகளை காவல் துறை உதவியுடன் பிடித்தனர். பின்னர் லாரியில் அவற்றை உயிருடன் கொண்டு சென்று காட்டுப்பகுதியில் விடப்பட்டன.

 


Page 337 of 841