Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கரூர் நகராட்சி சாதாரண கூட்டம்

Print PDF

தினகரன்                             29.10.2010

கரூர் நகராட்சி சாதாரண கூட்டம்

கரூர், அக்.29: கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் பெத்தா ட்சி மண்டபத்தில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவி சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கனகராஜ் முன்னிலை வகித் தார். நகராட்சி மற்றும் மாநகராட்சி மாணவர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை கூடுதலாக வழங்குதல், நகராட்சியில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் கள், தாய்சேய் நல விடுதி பெண் உதவியாளர்கள், ஆயாக்கள், ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்களு க்கு சீருடைகள் வழங்குவது சம்பந்தமான செலவுகள் குறித்து மன்றத்தின் அனுமதி கேட்பது, நகராட்சி பொதுப்பிரிவு, பொறியியல் பிரிவு போன்றவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கால ணிகள் வழங்குதற்குண்டான செலவுகள் குறித்தும் மன்றத்தின் அனுமதி கோறுவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, காங்கிரஸ் கவுன்சிலர் சுப்பன்; கரூர் பஸ் ஸ்டாண்டில் பெண்கள் நிற்கும் பகுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க நகராட்சி சார்பில் எப்போது டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கும் எனக்கேட்டார். அதற்கு பதலளித்த தலைவி சிவகாமசுந்தரி, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், திமுக உறுப்பினர் மாரப்பன்: எனது வார்டு பகுதியில், பொதுமக்களுக்கு நகராட்சியின் அனுமதியின்றி பிட்டரால் பைப் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து பல கூட்டங்களில் கூறி விட்டேன் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார். அது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என தலைவர் கூறியதும் அனைத்து கவுன்சிலர்களும் எழுந்து சென்றனர்.

 

நகரின் முக்கிய இடங்களில் விளம்பர பேனர் வைக்க தடை ஆர்.டி.ஓ. அதிரடி உத்தரவு

Print PDF

தினகரன்                 29.10.2010

நகரின் முக்கிய இடங்களில் விளம்பர பேனர் வைக்க தடை ஆர்.டி.. அதிரடி உத்தரவு

பொள்ளாச்சி, அக் 29: பொள்ளாச்சி நகரில் பஸ் நிலையம், அரசு அலுவலகங்கள் முன்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து ஆர்.டி.. அழகிரிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொள்ளாச்சி நகரின் பல்வேறு இடங்களிலும் விளம்பர பேனர்கள் மாதக்கணக்கில் வைக்கப்படுவதால் போக்குவரத்து பாதித்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவஸ்தைக்கு ஆளாகி வருகின்றனர். இரு பஸ் நி¬லையங்கள், பாலக்காடு ரோடு, நகராட்சி அலுவலகம், காந்தி சிலை, நியூ ஸ்கீம் ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு, தேர்நிலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாகவே இருந்து வருகின்றன. பல இடங்களில் முறையான அனுமதி எதுவும் பெறாமல் மாதக்கணக்கில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மெத்தனமாகவே இருந்து வந்தனர். இதனையடுத்து, ஆர்.டி.. அழகிரிசாமி தலைமையில் ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள விளம்பர பேனர்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது. வர்த்தக நோக்கிலான பேனர் களை நகராட்சி நிர்வாகமும், அரசியல் கட்சியினரின் பேனர்களை போலீ சாரும் அகற்றுவதாக கூறி னர்.

ஆனால், விளம்பர பேனர்களை அகற்றும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் விளம்பர பேனர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கின. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் ஆர்.டி.. அழகிரிசாமி தலைமையில் ஆலோசனைகூட்டம் நடத்தப்பட்டது. இதில் நகராட்சி சார்பில் நகரமைப்பு அலுவலர் வரதராஜ், தி.மு.. சார்பில் கவுன்சிலர் கண்ணன், .தி.மு.. சார்பில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நகரின் முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து ஆர்.டி.. அழகிரிசாமி கூறியதாவது:

நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விளம்பர பேனர்களால் போக்குவரத்து ஸ்தம்பித்து, பொது மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். ஆகவே இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசியல் கட்சியினர், நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி பல்வேறு முடிவு எடுக்கப்பட்டுள்ளன.

நகரின் எந்த ஒரு இடத்திலும் விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால் நகராட்சி மற்றும் போலீசாரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விளம்பர பேனர்கள் வைக்க நகராட்சியும், போலீசாரும் அனுமதி வழங்க வேண்டும். பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களைசுற்றிலும், அரசு அலுவலகங்கள் அருகிலும் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்படுகிறது. காந்தி சிலை பகுதியில் சிக்னல்களை மறைக்கும் விதத்தில் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் அரசு விதிகளின்படி நிகழ்ச்சிக்கு மூன்று நாள் முன்பும், நிகழ்ச்சி முடிந்து மூன்று நாட்களுக்கும் மட்டுமே விளம்பர பேனர்கள் வைக்கப்பட வேண்டும். நகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து வாரத்திற்கு ஒரு நாள் நகர் முழுக்க ரோந்து பணி மேற்கொண்டு விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும். இவ்வாறு ஆர்.டி.. தெரிவித்தார்.

 

இன்று மாநகராட்சி கூட்டம் சாதனை மலர் வெளியீடு

Print PDF

தினகரன்                     29.10.2010

இன்று மாநகராட்சி கூட்டம் சாதனை மலர் வெளியீடு

சென்னை, அக். 29: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆணையாளர் கார்த்திகேயன், துணை மேயர் சத்யபாமா முன்னிலை வகிக்கிறார்கள். வடகிழக்கு பருவமழைக்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மாநகராட்சியின் 4ம் ஆண்டு நிறைவு சாதனை மலர் புத்தகம் 180 பக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு..ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியுடன் இந்த சாதனை மலர், மன்ற கூட்டத்தில் வெளியிடப்படுகிறது. முன்னதாக காலை 9.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

 


Page 338 of 841