Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகரில் சுற்றிய 11 மாடு சிக்கியது

Print PDF

தினகரன்               28.10.2010

நகரில் சுற்றிய 11 மாடு சிக்கியது

கோவை, அக்.28: கோவை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றிய 11 மாடு களை மாநகராட்சியினர் நேற்று பிடித்தனர்.

கோவை தியாகி குமரன் வீதி, வைசியாள் வீதி, ஒப்பண கார வீதி, பெரியகடை வீதி, என்.எச்.ரோடு உள்ளிட்ட பகுதி யில் மாடுகள் சுற்றிதிரிவதாக புகார் வந்தது. குறிப்பாக மார்க் கெட், குப்பை மேடுகளில் மாடுகள் மேய்கின்றன.

ரோட்டில் மாடுகளின் நட மாட்டம் அதிகமாகி விட்ட தால் போக்குவரத்து இடை யூறு ஏற்படுகிறது.அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது என மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் பெருமாள்சாமி தலைமையில் மாநகராட்சி தொழிலாளர்கள், தியாகி குமரன் வீதி, வைசியாள் வீதி, ஒப்பணகார வீதியில் நேற்று 2 மணி நேரத்தில் 11 மாடுகளை பிடித்தனர்.

10 மாடுகளுக்கு தலாஆயிரம், ஒரு மாட்டு கன் றுக்கு 500 ரூபாய் என 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பூங்கா இயக்குநர் பெருமாள் சாமி கூறுகையில், " மாடுகளை கட்டி வைத்து வளர்க்கவேண் டும். நகரில் நட மாட விட்டால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சாயிபாபாகா லனி உள்ளிட்ட பகுதியில் குதிரைகள் அதிக மாக சுற்றுகின்றன. இவற்றையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே 3 குதிரைகளை பிடித்து அபராதம் விதித்திருக்கிறோம், " என்றார்.

 

உள்ளாட்சி தின விழா போட்டி: மேயர்- கமிஷனர் பங்கேற்பு

Print PDF

தினமலர்                 28.10.2010

உள்ளாட்சி தின விழா போட்டி: மேயர்- கமிஷனர் பங்கேற்பு

சேலம்: உள்ளாட்சி தினத்தையொட்டி கவுன்சிலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநிலம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, கவுன்சிலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. எம்.எல்.., வீரபாண்டி ராஜா போட்டிகளை துவக்கி வைத்தார். மேயர் ரேகாபிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். 8 வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட்டது. பந்து எறிதல் போட்டியில் பெண்கள் பிரிவில் கவுன்சிலர்கள் புவனேஸ்வரி முதலிடமும், செல்வி, சாரதாதேவி ஆகியோர் இரண்டாம் இடமும், சாந்தி மூன்றாம் இடமும், ஆண்கள் பிரிவில் கவுன்சிலர்கள் தினகரன் முதலிடமும், கபீர் இரண்டாம் இடமும், துணைமேயர் பன்னீர் செல்வம் மூன்றாம் இடமும் வென்றனர். நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் விவேகானந்தன் முதலிடமும், ரங்கசாமி இரண்டாம் இடமும், தினகரன் மூன்றாம் இடமும், பெண்கள் பிரிவில் சாரதா தேவி முதலிடமும், சாந்தி இரண்டாம் இடமும், மேயர் ரேகாபிரியதர்ஷினி மூன்றாம் இடமும் வென்றனர். குண்டு எறிதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் பழனிசாமி முதலிடமும், அசோகன் இரண்டாம் இடமும், விவேகானந்தன் மூன்றாம் இடமும், பெண்கள் பிரிவில் சாந்தி முதலிடமும், சாரதாதேவி இரண்டாம் இடமும், மேயர் ரேகாபிரியதர்ஷினி மூன்றாம் இடமும் வென்றனர்.

ஓட்டப் போட்டியில் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி முதலிடத்தையும், கவுன்சிலர்கள் விவேகானந்தன் இரண்டாம் இடமும், ரங்கசாமி மூன்றாம் இடமும், பெண்கள் பிரிவில் சாரதாதேவி முதலிடமும், மேயர் ரேகாபிரியதர்ஷினி இரண்டாம் இடமும், சாந்தி மூன்றாம் இடமும் வென்றனர். லக்கி கார்னர் போட்டி பெண்கள் பிரிவில் கவுன்சிலர்கள் சாஜிதா முதலிடமும், சாந்தி இரண்டாம் இடமும், மணிமேகலை மூன்றாம் இடமும், ஆண்கள் பிரிவில் அசோகன் முதலிடமும், ரங்கசாமி இரண்டாம் இடமும், ரமணி மூன்றாம்இடமும் வென்றனர். லெமன் ஸ்பூன் போட்டியில் கவுன்சிலர்கள் சாரதாதேவி முதலிடமும், செல்வி இரண்டாம் இடமும், உஷாராணி மூன்றாம் இடமும், நீளம் தாண்டுதலில் விவேகானந்தன் முதலிடமும், கேபிள் சுந்தர் இரண்டாம் இடமும், பாண்டியன் மூன்றாம் இடமும் வென்றனர். கேரம் போட்டியில் பெண்கள் பிரிவில் மேயர் ரேகாபிரியதர்ஷினி, கவுன்சிலர் செல்வி குழுவினர் முதலிடத்தையும், சாரதாதேவி, சாந்தி குழுவினர் இரண்டாம் இடத்தையும், ஆண்கள் பிரிவில் அசோகன், கபீர் குழு முதலிடமும், கேபிள் சுந்தர், கமிஷனர் பழனிசாமி குழு இரண்டாம் இடமும் வென்றனர்.

உள்ளாட்சி தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தின விழாவில் பரிசு வழங்கப்படும். விட்டுக் கொடுத்த கவுன்சிலர் பரிசு வாங்க மறுத்த மேயர் : உள்ளாட்சி தின விழா போட்டி நேற்று சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அப்போது பெண்களுக்கான 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மேயர் ரேகாபிரியதர்ஷினி, கவுன்சிலர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் தொடர்ந்து பரிசு வென்ற சாரதா தேவி உள்ளிட்ட பெண் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். வழக்கம் போல ஓட்டப்பந்தயத்தில் முன்னதாக ஓடிய சாரதாதேவி, அவருக்கு பின்னால் வந்த மேயருக்கு விட்டுக் கொடுத்ததால், மேயர் ரேகாபிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், விட்டுக் கொடுத்ததை அறிந்த மேயர், "தனக்கு அந்த பரிசு வேண்டாம், கவுன்சிலர் சாரதா தேவி தான் அந்த பரிசுக்கு உகந்தவர்' என, கூறி முதல் பரிசை வாங்க மறுத்தார். மேலும் எழுத்துப்பூர்வமாக கவுன்சிலர் சாரதாதேவி தான் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்றார் என்பதையும் அறிவித்தார். இதன்காரணமாக மேயர் இரண்டாவது பரிசு பெற்றார்.

 

கோபி நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேறுமா?

Print PDF

தினமலர்                28.10.2010

கோபி நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேறுமா?

கோபிசெட்டிபாளையம்: தீர்மானங்கள் ஏதும் சென்ற மாதம் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று காலை பரபரப்பான சூழ்நிலையில் கோபி நகராட்சி கூட்டம் நடக்கிறது. தி.மு.., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்று, தீர்மானங்களை மீண்டும் ஒத்திவைப்பரா அல்லது "டிமிக்கி' கொடுப்பரா? என்பது, இன்று தெரியவரும். தமிழக அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் கோபி நகராட்சி பகுதியில் சாலைகள் அமைக்க நான்கு கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. .தி.மு.., வை சேர்ந்த கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கியதாக, தி.மு.., மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 கவுன்சிலர்கள், கடந்த மாதம் 29 ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். எந்த ஒரு தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை."சாலை மேம்பாட்டு நிதியை அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும்' எனக் கூறி, தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஈரோடு எம்.எல்.., ராஜா, பேச்சுவார்த்தை நடத்தி, அரசிடம் இருந்து கூடுதல் நிதி வாங்கி தருவதாக உள்ளிருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் மோசமாக உள்ள ரோடுகள் குறித்த பட்டியலை தயார் செய்து வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு கோபி நகராட்சி கூட்டம் நடக்கிறது. சென்ற முறை கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட, சிறப்பு சாலைகள் குறித்த தீர்மானம் மற்றும் புதிய தீர்மானங்கள் உள்பட 42 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்திலும் இடம் பெற்றுள்ளன. இதனால், தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஒவ்வொரு கூட்டத்துக்கும் முதல்நாள் தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் தனியாக கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் குறித்து முடிவு எடுப்பது வழக்கம். ஆனால், இன்று நடக்கும் கோபி நகராட்சி கூட்டம் முடிவு குறித்து, நேற்று மாலை 5 மணி வரை தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆலோசனை ஏதும் நடத்தவில்லை. இன்றைய கோபி நகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு, தீர்மானங்களை ஒத்திவைக்க ஒருமித்த குரல் கொடுப்பரா; அல்லது வழக்கம் போல் பின்வாங்குவரா? என்பது புரியாத புதிராக உள்ளது.

 


Page 341 of 841