Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சிப் பணிகள் நவம்பர் 30-க்குள் தொடங்கும்

Print PDF

தினமணி 27.10.2010

நகராட்சிப் பணிகள் நவம்பர் 30-க்குள் தொடங்கும்

கடலூர், அக். 26: கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தில், நகராட்சி சம்மந்தப்பட்ட பணிகள், நவம்பர் 30-ம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று, சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர் குத்தாலம் எம்.எல்.. .அன்பழகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு, கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பல்வேறு திட்டங்களைப் பார்வையிட்டது. மதிப்பீட்டுக் குழுவிடம் கடலூர் அனைத்து பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். கடலூர் சுரங்கப் பாதைத் திட்டத்துக்கு ரயில்வே இலாகா டெண்டர் விட்டு 3 மாதங்கள் ஆகியும், மாநில நெடுஞ்சாலைத் துறை தனது பணிக்கு இதுவரை டெண்டர் விடாமல் காலம் கடத்தி வருகிறது.

கடலூரில் உள்ள 4 வியாபாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள். அவர்களுக்காகவே நெடுஞ்சாலைத்துறை காலம் கடத்துகிறது. சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விட்டால், கடலூர் மக்கள் அனைவரும் வாழ்த்துவர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மாலையில் மாவட்ட அதிகாரிகளுடனான மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்குக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின், குழுத் தலைவர் அன்பழகன் எம்.எல்.. கூறியது:

சுரங்கப் பாதை பணியை ரயில்வே தொடங்கி விட்டதாக அறிவித்து இருக்கும் நிலையில், மேற்கொண்டு பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நகராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் தொடங்கப்படும். நிச்சயமாக கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றார்.

கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு முதல்வர் கருணாநிதியால் ஒப்படைக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்கு உரியது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பாலங்களின் பணிகள் தொடங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அன்பழகன் தெரிவித்தார்.

காடாம்புலியூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சிவகாமி என்பவர் முதியோர் உதவித்தொகை கேட்டு, மதிப்பீட்டுக் குழுவிடம் காலையில் மனு கொடுத்து இருந்தார். மாலையில் அவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை அன்பழகன் வழங்கினார்.

மொத்தம் 21 பேருக்கு முதியோர் உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 3 பேருக்கு தையல் இயந்திரங்கள், 3 பேருக்கு சலவைப்பெட்டி ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

மதிப்பீட்டுக் குழு ஆய்வுக் கூட்டத்தில் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் எம்.எல்..க்கள் சபா.ராஜேந்திரன், ராமசாமி, டாக்டர் சதன் திருமலைக்குமார், ஆர்.செüந்தர பாண்டியன், அங்கயற்கண்ணி ஆகியோரும் கடலூர் எம்.எல்.. கோ.அய்யப்பன், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 27 October 2010 11:01
 

பெங்களூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் 30ம் தேதி நியமனம்

Print PDF

தினகரன்                      27.10.2010

பெங்களூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் 30ம் தேதி நியமனம்

பெங்களூர், அக். 27: பெங்களூர் பெருநகர் மாநகராட்சிக்கு 41 மாதங்கள் கழித்து கடந்த மார்ச் 28ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 198 வார்டுகளில் 111 வார்டுகளில் பாஜ வெற்றி பெற்று பெருபான்மை பலத்துடன் நிர்வாகத்தை கைபற்றியது. பாஜ நிர்வாகத்தில் முதல் மேயராக எஸ்.கே.நடராஜ் மற்றும் துணை மேயராக என்.தயானந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிலைக்குழு எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ஆளுநர் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி ஒப்புதல் வழங்கினார். ஆளும் கட்சியில் நிலைக்கு தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியதால், முதல் கட்டமாக வரி மற்றும் நிதிநிலைக்குழு தலைவராக சதாசிவாவை கடந்த ஆகஸ்ட் மாதம் மேயர் நியமனம் செய்தார். அவர் ஆகஸ்ட் 31ம்தேதி நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மீதியுள்ள 11 நிலைக்குழுகளுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யாமல் இருப்பதற்கு எதிர்க்ட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இனியும் காலம் தாழ்த்துவது சரியல்ல என்ற முடிவுக்கு வந்துள்ள மேயர் நடராஜ், வரும் 30ம் தேதி காலியாகவுள்ள 11 நிலைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி பாஜ தலைவர் சத்யநாராயணா, மாநகர பாஜ தலைவரும், பேரவை உறுப்பினருமான விஜயகுமார் மற்றும் சட்ட நிபுணர்களுடன் மேயர் நடராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் பொது சுகாதாரம், நகர திட்டம் மற்றும் வளர்ச்சி, நகரில் செயல்படுத்தப்படவுள்ள பெரியளவிலான வளர்ச்சி திட்டம், வார்டு அளவில் பொது வளர்ச்சி திட்டம், தணிக்கை, கல்வி, சமூகநீதி, மேல்முறையீடு, தோட்டக்கலை, மார்க்கெட், நிர்வாக சீர்த்திருத்தம் ஆகிய நிலை குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. 11 நிலைகுழுவின் தலைவர்கள் பாஜவுக்கு வழங்கப் படுகிறது. நிலைகுழுவில் 11 உறுப்பினர்களில் 7 பாஜவுக்கும், 4 காங்கிரஸ் மற்றும் மஜதவுக்கு அளிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

மாநகராட்சி நிலை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரும் 30ம் தேதி தேர்வு செய்வதை தொடர்ந்து பாஜ மூத்த கவுன்சிலர்களான வெங்கடேசமூர்த்தி, சோமசேகர், ராமமூர்த்தி, எல்.சீனிவாஸ், வி.பி.கணேஷ், ரங்கண்ணா, கங்கபைரய்யா, ரவீந்திரா, சாந்தகுமாரி, நஞ்சுண்டப்பா, ஹரிஷ் உள்பட பலர் தங்கள் ஆதரவு தலைவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் சார்பில் நிலைக்குழு உறுப்பினர்கள் யார் என்பதை எதிர்க்கட்சி தலைவர் நாகராஜ் மற்றும் மாநகராட்சி மஜத தலைவர் பத்மநாபரெட்டி ஆகியோர் தேர்வு செய்துள்ளனர். இரண்டொரு நாளில் மேயரிடம் பட்டியல் கொடு க்க முடிவு செய்துள்ளனர். தற்போது அமைக்கப்படும் நிலைகுழுவின் பதவி காலம் 6 மாதங்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

நகராட்சி நிர்வாக துறையில் 174 பேருக்கு நியமன ஆணை

Print PDF

தினகரன் 27.10.2010

நகராட்சி நிர்வாக துறையில் 174 பேருக்கு நியமன ஆணை

சென்னை, அக். 27: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை 4 கட்டங்களாக 628 வாரிசுதாரர்களுக்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் கருணை அடிப்படையில் பணி நியமன பரிந்துரை ஆணைகளை வழங்கியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நகராட்சி பணியிலிருக்கும்போது மரணமடைந்த 174 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், பணி ஆய்வாளர், ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் போன்ற பணியிடங்களுக்கு பணி நியமன பரிந்துரை ஆணைகளை ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் அசோக்வர்தன் ஷெட்டி, இயக்குனர் ப.செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மு..ஸ்டாலின் வழங்கினார்

துணை முதல்வர் மு.. ஸ்டாலின் நேற்று, தமிழ்நாடு நகராட்சி பணியிலிருக்கும்போது இயற்கை எய்திய 174 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், பணி ஆய்வர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், மற்றும் காவலர் போன்ற பணியிடங்களுக்கு கருணை அடிப்ப¬டியில் பணிநியமனப் பரிந்துரை ஆணைகளை வழங்கினார்.

 


Page 342 of 841