Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருவொற்றியூரில் அடுத்த மாதம் திறப்பு ரூ1 கோடியில் காஸ் தகன மேடை

Print PDF

தினகரன் 25.10.2010

திருவொற்றியூரில் அடுத்த மாதம் திறப்பு ரூ1 கோடியில் காஸ் தகன மேடை

திருவொற்றியூர், அக். 25: திருவொற்றியூரில் ரூ1 கோடி செலவில் கட்டப்பட்ட நவீன காஸ் தகன மேடை அடுத்த மாதம் திறக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் தெரிவித்தார்.

திருவொற்றியூர் நகராட்சி சார்பில் பட்டினத்தார் கோயில்தெரு அருகில் மயானம் உள்ளது. மயானத்துக்கு செல்லும் வழியில் முட்புதர்கள் இருந்ததால் சடலத்தை எடுத்துச்செல்லவும், புதைக்கவும், எரிக்கவும் மக்கள் சிரமப்பட்டனர்.

இதனால், மயானத்தை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, ரூ1 கோடியே 5 லட்சம் செலவில் பூங்காவுடன் கூடிய நவீன எரியூட்டு மயானம் (காஸ் தகன மேடை) அமைக்க திருவொற்றியூர் நகராட்சி முடிவு செய்தது. இதன் கட்டுமான பணியை மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தொடங்கி வைத்தார்.

சுற்றுப்புற சுவருடன் அழகான பூங்கா, மின்விளக்குகள், அமரர் ஊர்தி, பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் என அனைத்து வசதிகளுடன் இந்த மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் கூறுகையில், ‘நவீன எரியூட்டு மயான பணிகள் திட்டமிட்டபடி முடிந்துள்ளது. அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். அடுத்த கட்டமாக கிறிஸ்துவர்களுக்கான மயான இடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

 

 

வாக்காளர் சேர்க்கும் பணி விளக்கக் கூட்டம்

Print PDF

தினமணி 25.10.2010

வாக்காளர் சேர்க்கும் பணி விளக்கக் கூட்டம்

திருச்சி, அக். 24: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட திருச்சி மேற்கு மற்றும் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை அளித்து, நிரப்பிப் பெற்று, கள ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் தொடர்பான விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த.தி. பால்சாமி தலைமை வகித்தார். உதவி ஆணையர்கள் வி. நடராஜன் (கோ-அபிஷேகபுரம்), முத்துக்கிருஷ்ணன் (அரியமங்கலம்), பாஸ்கர் (ஸ்ரீரங்கம்), தேர்தல் தனித் துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மனுதாரரால் நிரப்பப்பட வேண்டிய படிவங்கள் 6,7,8,8ஏ ஆகியவை குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள் ஆகியோருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

 

மாநகராட்சி மாற்றுத்திறன் பணியாளர் ஊர்திப்படி உயர்வு

Print PDF

தினமலர் 25.10.2010

மாநகராட்சி மாற்றுத்திறன் பணியாளர் ஊர்திப்படி உயர்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சி மாற்றுத்திறன் பணியாளருக்கு ஊர்திப்படியை உயர்த்துவதுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு நிதித் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படியை உயர்த்துவது தொடர்பாக கடந்த ஏழாம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறன் பணியாளர், அலுவலர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படியை 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக அக்டோபர் முதல் தேதியிலிருந்து உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை அமல்படுத்துவதுக்கு ஒப்புதல் அளித்து, திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


Page 345 of 841