Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உலக மேயர்கள் மாநாடு: மேயர் மா.சுப்பிரமணியன் நாளை தென்கொரியா பயணம்

Print PDF

மாலை மலர் 22.10.2010

உலக மேயர்கள் மாநாடு: மேயர் மா.சுப்பிரமணியன் நாளை தென்கொரியா பயணம்

உலக மேயர்கள் மாநாடு: மேயர் மா.சுப்பிரமணியன் நாளை தென்கொரியா பயணம்

சென்னை, அக். 22- தென்கொரியா நாட்டில் உள் இன்கியான் நகரில் உலக மேயர்கள் மாநாடு 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் உலகில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது, அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் இந் தியா சார்பில் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். இதற்காக நாளை அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார். இந்தியாவிலேயே சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தட்ப வெப்பநிலை மாறுதல் குறித்து மாநகராட்சியுடன் இணைந்து சென்னைப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மேயர் அங்கு உரையாற்றுகிறார்.

 

மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

Print PDF

தினமணி 22.10.2010

மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

மதுரை, அக்.21: மதுரை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தலைமை வகித்தார். பின்னர், அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் தற்போது பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமை, மத்திய அரசு மற்றும் ஐக்கிய நாடு வளர்ச்சித் திட்டமும் இணைந்து நடத்துகின்றன. மதுரை, நீலகிரி, திருவள்ளூர், நாகபட்டினம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஆசிரியர்கள், மாணவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு இயற்கைப் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த பயிற்சி முகாம் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

தீ விபத்து, வெள்ளம், மின்கசிவு போன்ற ஆபத்தான நேரங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், பல உயிர்கள் பலியாகின்றன. எனவே, இதுபோன்ற பயிற்சிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இதில், திட்ட அலுவலர் வனிதா படக்காட்சிகளுடன் விளக்கமளித்தார். துணை ஆணையர் தர்ப்பகராஜ், மண்டலத் தலைவர் க. இசக்கிமுத்து, தலைமைப் பொறியாளர் சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் விஜயகுமார், நிர்வாகப் பொறியாளர் மதுரம், மக்கள் தொடர்பு அலுவலர் ரா. பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

 

தரைக்கடை வணிக வளாகம் வருவாய் அதிகரிக்க மாநகராட்சி கூட்டத்தில் ஆலோசனை

Print PDF

தினகரன் 22.10.2010

தரைக்கடை வணிக வளாகம் வருவாய் அதிகரிக்க மாநகராட்சி கூட்டத்தில் ஆலோசனை

திருச்சி, அக். 22: தரைக்கடை வணிக வளாகம் அமைத்து மாநகராட்சி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சுஜாதா தலைமை வகித்தார். கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஜவஹர் பேசுகையில், திருச்சி அரசு மருத்துவமனை ரூ.50 கோடியில் தரம் உயர்த்த முயற்சி மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதேபோல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். ஸ்ரீரங்கத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். ரூ.25 லட்சம் செலவில் பூ மார்க்கெட் அமைக்க வேண்டும் என்றார்.

அதிமுக கவுன்சிலர் இளஞ்சியம் பேசுகையில், எனது வார்டுக்கான இளநிலை பொறியாளரை பணி நிமித்தமாக தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரை இடமாற்றம் செய்ய வேண்டும். மாநகராட்சி பள்ளியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான கட்டிட பொருட்கள் எங்கே என்று தெரிவிக்க வேண்டும் என்றார்.

கோட்ட தலைவர் பாலமுருகன் பேசுகையில், வார்டில் இருந்து எடுத்து செல்லப்படும் பொருட்களின் விபரம் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் இந்த இளநிலை பொறியாளருக்கு அதிக பணிச்சுமை இருப்பதால் அவரால் வார்டு பணிகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கம்ப்யூட்டர் பிரிவில் அனுபவம் கொண்டவராக இருப்பதால் அவரை மைய அலுவலகத்திற்கு மாற்றம் செய்துவிட்டு புதியவரை நியமிக்க வேண்டும் என்றார்.

செயற்பொறியாளர் சந்திரன் பதிலளிக்கையில், தமிழக அரசிடம் இருந்து ரூ.25 கோடி நிதி பெற சம்மந்தப்பட்ட இளநிலை பொறியா ளர் இரவு பகலாக பணிபுரிந் தார். தற்போது 4 இளநிலை தரைக்கடை...பொறியாளர் பணியிடம் காலியாக உள்ளது. அதனால் பணிகளை மீதம் உள்ளவர்கள் மூலம் பிரித்து மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒரு இடத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் ஸ்டோர்ஸில் வரவு வைக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து 2 மடங்கு ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால் வார்டுகளில் இருந்து எடுத்து செல்லப்படும் பொருட்கள் கண்டிப்பாக கணக்கில் வரும் என்றார். கோட்ட தலைவர் அறிவுடைநம்பி பேசுகையில், எனது வார்டில் பள்ளி கட்டும் பணி தாமதமாக கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைந்து முடிக்க கான்ட்ராக்டரை அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும் என்றார்.

அதிமுக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், கருவாடு பேட்டை பகுதியில் பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதை சீர்செய்ய ரூ. 2 லட்சம் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

.கம்யூ கவுன்சிலர் ஸ்ரீரா மன் பேசுகையில், மாவட்ட நிர்வாகத்தை போல் என்எஸ்பி ரோடு, நந்திகோயில் தெருக்களிள் பண்டிகை காலங்களில் தரைக்கடை அமைக்க அனு மதி வழங்க வேண்டும். செ ன்னையை போல் தரைக்கடை வணிக வளாகங்கள் அமைத்து மாநகராட்சி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கவுன்சிலர் ஹேமா பேசுகையில், எனது வார்டில் பணிபுரியும் மேஸ்திரிகளுக்கு அடிக்கடி மெமோ வழங்குவதால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு பணியில் முழு கவனம் செலு த்த முடியாத நிலை அவர்களு க்கு ஏற்படுகிறது. மத்திய பஸ் நிலையம் பகுதியில் சாலைக ளில் குப்பைகளை கொட்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வெள்ளம் வரும்

அதிமுக கவுன்சிலர் முத்துமாரி தேவி பேசுகையில், எனது வார்டில் உள்ள குறுக்கு சாலைகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கபடாமல் உள்ளது. இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உங்களது வார்டு வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி. வரும் மழை காலத்தில் வெள்ளம் வரும். வந்தவுடன் வெள்ள நிவாரண நிதியை பெற்று சரி செய்யப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பால்சாமி கூறினார்.

 


Page 346 of 841