Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து சங்க கூட்டுக்குழு நிர்வாக கூட்டம்

Print PDF

தினகரன் 22.10.2010

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து சங்க கூட்டுக்குழு நிர்வாக கூட்டம்

புதுச்சேரி, அக். 22: புதுவை ஏஐடியுசி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சங்கங்களின் கூட்டுக்குழு நிர்வாக குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

சங்க கூட்டு தலைவர் அபிஷேகம் த¬¬மை தாங்கினார். பொதுச்செயலாளர் மன்னாதன் நடந்த வேலைகள் குறித்தும், எதிர்கால வேலைகள் பற்றியும் விளக்கி பேசினார்.

பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் அருணாச்சலம், செயலாளர் அஞ்சு கிருஷ்ணமூர்த்தி, அரியாங்குப்பம் பஞ்சாயத்து ஒர்க்கர்ஸ் யூனியன் செய லாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் 15 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் டிஎஸ் மற்றும் தினக்கூலி பகுதிநேர ஊழியர்களை உடனே நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கூட்டுக்குழு சார்பில் கடந்த 7ம் தேதி தர்ணா போராட்டம் கவர்னர் மாளிகை முன் நடந்தது. ஆனால் நிர்வாகம் இது நாள் வரையில் நிரந்தரம் செய்யப்படாததை கண்டித்து வரும் 25ம் தேதி முதல் டிஎஸ் மற்றும் தினக்கூலி பகுதி நேர ஊழியர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்யும் வரை இரவு, பகல் தொடர் உண்ணாவிரத போராட்டம் கவர்னர் மாளிகை முன் மேற்கொள்வது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

 

குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு ரூ.1.57 கோடி போனஸ்: கருணாநிதி உத்தரவு

Print PDF

மாலை மலர் 21.10.2010

குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு ரூ.1.57 கோடி போனஸ்: கருணாநிதி உத்தரவு

குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு ரூ.1.57 கோடி  போனஸ்: கருணாநிதி உத்தரவு

சென்னை, அக். 21-தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களில் மாதம் 9300-34800 ஊதியத்துடன் ரூ. 4,300 தர ஊதியம் பெறும் பதவிகளில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் சட்டத்தின்படி சம்பள உச்சவரம்பிற்கு விலக்களித்து, 2009-2010 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கிட முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணையின்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 4 ஆயிரத்து 493 பணியாளர்களுக்கு ரூ. 1 கோடியே 57 லட்சம் போனஸ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இயற்கை இடர்பாடு பாதிப்பு குறித்த மாநாடு: மேயர் கொரியா பயணம்

Print PDF

தினமணி 21.10.2010

இயற்கை இடர்பாடு பாதிப்பு குறித்த மாநாடு: மேயர் கொரியா பயணம்

சென்னை, அக். 20: இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தென் கொரியா செல்கிறார்.

இந்த மாநாடு தென் கொரியாவின் இன்சியான் நகரில் அக்டோபர் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேயர்கள் கலந்து கொண்டு, தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தட்பவெப்ப நிலை மாறுதல் குறித்த கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.

 


Page 347 of 841