Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குற்றாலத்தில் நாளைபூங்கா திறப்பு விழா

Print PDF

தினமலர் 21.10.2010

குற்றாலத்தில் நாளைபூங்கா திறப்பு விழா

குற்றாலம்:குற்றாலத்தில் நாளை (20ம் தேதி) சுற்றுலா வரவேற்பு மையங்கள், வைரம்ஸ் நகர் பூங்கா திறப்பு விழா நடக்கிறது.நெல்லை மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாதலமான குற்றாலத்திற்கு வருகை தரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு குற்றாலம் டவுன் பஞ்., மற்றும் சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் பலகோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.குற்றாலநாதர் ரோடு அலுவலகம் அருகே ரூ.20 லட்சத்தில் சுற்றுலா வரவேற்பு மையம், ஐந்தருவி பகுதியில் 13.74 லட்சத்தில் சுற்றுலா வரவேற்பு மையம், வைரம்ஸ் நகரில் ரூ.7.05 லட்சத்தில் வைரம்ஸ் நகர் புதிய பூங்கா, 11.50 லட்சத்தில் புலியருவி நவீன கழிப்பிடம், 14.43 லட்சத்தில் சிறுவர் பூங்கா, 18.35 லட்சத்தில் விஸ்வநாதராவ் பூங்கா பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதன் திறப்பு விழா நாளை (20ம் தேதி) மாலை 5 மணியளவில் டவுன் பஞ்., வளாகத்தில் நடக்கிறது. நிகழ்ச்சியில் தென்காசி எம்.எல்.., கருப்பசாமிபாண்டியன், மாவட்ட கலெக்டர் ஜெயராமன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், டவுன் பஞ்., தலைவர் ரேவதி, துணைத் தலைவர் ராமையா, செயல் அலுவலர் ராஜையா உட்பட பணியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

வீரப்பன்சத்திரம் நகராட்சியில் நலத்திட்ட உதவிகள்

Print PDF

தினமணி 20.10.2010

வீரப்பன்சத்திரம் நகராட்சியில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு, அக். 19: ஈரோடு வீரப்பன்சத்திரம் நகராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சித் தலைவர் மல்லிகா நடராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை உறுப்பினர் என்கேகேபி.ராஜா பங்கேற்று, இருவருக்கு தலா ரூ 400 வீதம் ஊனமுற்றோர் உதவித்தொகையும், மூவருக்கு முதியோர் உதவிதொகையும், 29 பேருக்கு தலா ரூ 6 ஆயிரம் மகப்பேறு நிதியுதவியும் வழங்கினார்.

நகராட்சி துணைத் தலைவர் செல்வராஜ், செயல் அலுவலர் தன்னாசி, வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

 

மேயர் பிருத்விராஜ் சகானி தகவல் சி.வி.சி. கேட்டுள்ள விளக்கங்களுக்கு மாநகராட்சி விரைவில் பதில் தரும்

Print PDF

தினகரன் 20.10.2010

மேயர் பிருத்விராஜ் சகானி தகவல் சி.வி.சி. கேட்டுள்ள விளக்கங்களுக்கு மாநகராட்சி விரைவில் பதில் தரும்

புதுடெல்லி, அக். 20: காமன்வெல்த் போட்டி தொடர்பான திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் கேட்டுள்ள விளக்கங்களுக்கு மாநகராட்சி விரைவில் பதில் அளிக்கும் என்று மேயர் பிருத்விராஜ் சகானி தெரிவித்தார்.

காமன்வெல்த் போட்டி கட்டுமானப் பணிகள் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி.) விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பணிகள் தொடர்பாக மாநகராட்சியிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு மாநகராட்சியிடம் இருந்து தங்களுக்கு இன்னமும் பதில் வரவில்லை என்றும் சி.வி.சி. அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மேயர் பிருத்விராஜ் சகானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

காமன்வெல்த் போட்டிக்காக அதிகாரிகள் கடும் பணிச்சூழலில் இருந்தனர். இப்போது போட்டிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், அதிகாரிகளுக்கு வேலைப்பளு குறைந்துள்ளது. இதனால் சி.வி.சி. கேட்ட அனைத்து விளக்கங்களுக்கும் விரைவில் பதில் அனுப்பப்படும்.

எந்த அதிகாரியும் தன்னுடைய கடமையில் இருந்து தப்ப முடியாது. சி.வி.சி. கேட்டுள்ள அனைத்து விளக்கங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டும்.

அநேகமாக சி.வி.சி.யின் அனைத்து கேள்விகளுக்கும் ஏற்கனவே பதில் அனுப்பப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இதுதவிர கூடுதலாக சி.வி.சி.யில் இருந்து விளக்கங்கள் கேட்டு எனக்கு தகவல் அனுப்பப்பட்டால், அதையும் தர தயாராக உள்ளோம்.

இவ்வாறு மேயர் பிருத்விராஜ் சகானி கூறினார்.

அதிகாரிகளுக்கு நோட்டீஸ்: காமன்வெல்த் போட்டி பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த அதிகாரிகளுக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:

காமன்வெல்த் போட்டி தொடர்பான பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரிப்பிரிவினர் தங்களுக்கு கிடைத்த ஆவணங்களை இறுதி செய்து வருகின்றனர். காமன்வெல்த் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக முதலில் விசாரணையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஒருங்கிணைப்புக் குழு மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இரு துறையினரும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

ஆனால், முறைகேடுகள் தொடர்பாக இதுவரையில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

முதலில் பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டு அதில் குற்றம் நடந்திருப்பது உறுதி செய்து கொண்ட பின்னர்தான் வழக்கு பதிவு செய்யப்படும். இதுபோன்ற விசாரணையை எல்லா துறையினரும் நடத்துவது வழக்கம். இதுதொடர்பாக சோதனைகளையும் மேற்கொள்ள இரு பிரிவினருக்கும் அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 


Page 349 of 841