Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னையில் குடியரசு தின விழா

Print PDF

தினமணி          27.01.2014 

சென்னையில் குடியரசு தின விழா

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 65-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ரிப்பன் கட்டடத்தில்...

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மேயர் சைதை துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியரின் அணிவகுப்பு மாõயாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெüரவித்தார்.

2013-14-ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கும் கேடயங்களையும் அவர் வழங்கினார். செண்பகப்பூ மற்றும் செüந்தரியம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, இந்தியன் வங்கி கிளைகளின் மூலம் வழங்கப்பட்ட தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மேயர் வழங்கினார். மேலும், 71 பயனாளிகளுக்கு தனி நபர் கடனாக ரூ.1.06 கோடிக்கான காசோலைகளையும், 21 அண்டை வீட்டுக் குழுக்களுக்கு ரூ.33 லட்சத்துக்கான காசோலைகளையும் அவர் அளித்தார்.

விழாவில் சென்னை மாநகராட்சி துணை மேயர் பெஞ்சமின், ஆணையர் விக்ரம் கபூர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலத்தில்...

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் நடந்த விழாவில், மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர், தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பா.ஜோதி நிர்மலா, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எழிலகத்தில்...

சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்(பேரிடர் மேலாண்மை) ஆஷிஷ் சாட்டர்ஜி, இணை ஆணையர் ஜெயராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியன் வங்கி...

ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் ராஜாஜி சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.ஜெயின், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியரசு தினத்தையொட்டி, மூத்த குடிமக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாமுக்கு இந்தியன் வங்கி ஏற்பாடு செய்திருந்தது.

அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்...

குடியரசு தினத்தையொட்டி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், மருத்துவமனை வளாகத்தில் ரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனித உரிமைகள் ஆணையத்தில்...

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், ஆணையத் தலைவர் ஜெயந்தி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர், பதிவாளர் துரைசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

நாமக்கல், பரமத்தியில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

நாமக்கல், பரமத்தியில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

நாமக்கல், பரமத்தி பகுதியில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தினவிழா

நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் குடியரசு தினவிழா கொண் டாடப்பட்டது. விழாவுக்கு சங்க தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப் பினர் கே.பி.பி.பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சங்க வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் காந்திமுருகேசன், நகராட்சி துணை தலைவர் சேகர், கூட்டுறவு சங்கத்தின் துணை தலைவர் நல்லதம்பி மற்றும் சங்க உறுப்பினர்கள், பணி யாளர்கள் கலந்து கொண் டனர்.

நகராட்சி பள்ளி

நாமக்கல் கோட்டை நகராட்சி தொடக்கபள்ளியில் குடியரசு தினவிழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உழவன் தங்கவேலு தலைமை யில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்று பேசினார். இதில் நாமக்கல் நகராட்சி தலைவர் கரிகாலன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில் நக ராட்சி கமிஷனர் (பொறுப்பு) கமலநாதன், பள்ளி கல்விக்குழு தலைவர் குப்புசாமி, மேலாண்மை குழு தலைவர் சம்பத் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். இதையொட்டி மன வளக்கலை மன்றம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் உதவி ஆசிரியை யோகலட்சுமி நன்றி கூறினார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டா டப்பட்டது. இதையொட்டி ஒன்றிய குழு தலைவர் கவிதா சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல் லப்பன், வெங்கடாசலம் மற் றும் ஒன்றியகுழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் அருகே உள்ள சின்னமுதலைப்பட்டி நடு நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட் டது. தலைமை ஆசிரியர் மோகன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் அம்மச்சி அம்மன் அறக்கட் டளை துணை செயலாளர் முத்துசாமி, நூலகர் சுப்பிர மணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எலச்சிபாளையம் அருகே உள்ள புள்ளாச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கிராம கல்விக்குழு தலைவர் ஆறுமுகம், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற் றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

தோ.ஜேடர்பாளையம்

நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் திப்பகாப் பட்டி காலனி நேருயுவக் மண்டல் இணைந்து குடியரசு தினத்தை முன்னிட்டு விளை யாட்டு போட்டிகளை நடத் தின. இதில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசு பொருட் களும், சான்றிதழ்களும் வழங் கப்பட்டது. இதில் நேருயுவ கேந்திரா சார்பில் தவமணி, ராஜசேகர், கிருஸ்துதாஸ், முன்னாள் தலைவர் சரவ ணன், தற்போதைய தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தோ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையொட்டி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் பள்ளி அளவில் நடை பெற்ற பேச்சுபோட்டி, கட் டுரை போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பரிசுகளும், சான் றிதழ்களும் வழங்கப்பட்டது.

பொன்விழா நகர் கிளை நூலகத்தில் நடைபெற்ற குடி யரசு தினவிழாவுக்கு வாசகர் வட்ட தலைவர் மதுரம் தலைமை தாங்கினார். நாமக் கல் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கவிதா சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் நூலக புரவலர்கள், வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பொத்தனூர் பேரூராட்சி

பொத்தனூர் பேரூராட்சி யில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பேரூராட்சி தலைவர் நாராயணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்பு கள் வழங்கினார். இதில் செயல்அலுவலர் வெங்கடே சன், துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

பாண்டமங்கலம் பேரூராட் சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பானுமதிபாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயல்அலுவலர் கந்தசாமி, துணைத்தலைவர் கருணாநிதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

வெங்கரை பேரூராட்சி

வெங்கரை பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் நித்யகுமாரி விஜயகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயல் அலுவலர் ஞானசுந்தரம், துணைத் தலைவர் சகாதேவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்தி வேலூர் பேரூராட்சி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வேலுச்சாமி தேசிய கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கினார். துணைத் தலைவர் பேபிலதா, செயல்அலுவலர் குருராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பரமத்தி பேரூராட்சி

பரமத்தி பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் உஷாராணி பாண்டி யன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். துணைத் தலைவர் பிரபாகரன், செயல் அலுவலர் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பொத்தனூர் வெங்க மேடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆகிய பள்ளி களில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சி யில் பள்ளி தலைமை ஆசிரியர் கள் மாலதி, சித்தார்த்தன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

இதேபோல் நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் குடியரசு தினவிழா கோலா கலமாக கொண்டாடப் பட்டது.

 

சேலம் மாநகராட்சி பகுதியில் 25,575 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஆணையாளர் அசோகன் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

சேலம் மாநகராட்சி பகுதியில் 25,575 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி ஆணையாளர் அசோகன் தொடங்கி வைத்தார்

சேலம் மாநகராட்சியில் வாக்காளர் தினவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்மாபேட்டை தேர்வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி ஆணையாளர் அசோகன் கலந்துகொண்டு சேலம் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் புதியதாக சேர்க்கப்பட்ட 25,575 வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

மேலும், ‘‘வாக்களிப்பதின் முக்கியத்துவம்’’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

அம்மாபேட்டை காந்தி மைதானம், பழைய பேருந்து நிலைய வணிக வளாகம், புதிய பேருந்து நிலையம், குரங்குச்சாவடி, சூரமங்கலம் ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

கன்னியமான முறையில் தேர்தல், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, வன்முறையற்ற வாக்குப்பதிவு, வாக்களிப்பது நமது தேசத்துக்கு செய்யும் மகத்தான தொண்டு என்ற கருத்துக்களை மையமாக கொண்ட கலைநிகழ்ச்சிகள் மற்றும் தீவிர பிரசாரப் பணிகள் 4 மண்டலங்களிலும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் உதவி ஆணையாளர்கள் கணேசன், பிரித்தி, புஷ்பவதி, ராஜா, உதவி செயற்பொறியாளர்கள் சிபிசக்ரவர்த்தி, ரவி, தேர்தல் தாசில்தார் வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 


Page 36 of 841