Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பில் தொகை வழங்க உறுதி மாநகராட்சி ஒப்பந்ததாரர் போராட்டம் வாபஸ்

Print PDF

தினகரன் 14.10.2010

பில் தொகை வழங்க உறுதி மாநகராட்சி ஒப்பந்ததாரர் போராட்டம் வாபஸ்

பெங்களூர், அக். 14: பெங்களூர் மாநகராட்சி ஒப்பந்த தாரர்களுக்கு பாக்கியுள்ள தொகையில் ரூ.230 கோடி வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாநகராட்சிக்கு எதிராக நடத்திய தர்ணா போராட்டம் வாபஸ் பெற்றனர்.

மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கியுள்ள பில்லை செட்டில் செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தற்கு தலைமை ஏற்று சங்க தலைவர் ஆர்.ஜெ.சீனிவாஸ் பேசியதாவது:

மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் ஆட்சி நடந்த காலம் முதல் தற்போது வரை குறைந்தது 4 ஆண்டுகளாக வார்டுகளில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை முடித்துள்ளோம். ஆனால் எங்களுக்கு வர வேண்டிய பாக்கி பணம் இன்னும் வழங்கவில்லை. இதை வழங்கும்படி பலமுறை ஆணையரிடம் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. மாநகராட்சி பணியை கையில் எடுத்த நாங்கள் பொருட்கள் வாங்கியது, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கல் போன்றவைக்கு தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளோம். வட்டி கொடுக்க முடியாமலும், கடனை திருப்பி செலுத்த முடியாமலும் கஷ்டப்படுகிறோம்.

நவராத்திரி விழா தொடங்கி வரும் சனிக்கிழமை அனைத்து பிரிவு தொழிலாளர்களும் ஆயுதா பூஜை போடுகிறார்கள். அப்போது எங்களின் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணத்தை வழங்க வேண்டும். ஆகவே அதற்குள் மாநகராட்சி சார்பில் நிலுவையில் உள்ள பில் அனைத்தும் செட்டில் செய்ய வேண்டும். இல்லையெனில் தற்போது கையில் எடுத்துள்ள வளர்ச்சி திட்டங்களை முடக்குவதுடன், எதிர்க்காலத்திலும் எந்த திட்டமும் செயல்படுத்த வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்று எச்சரித்தனர். இதனிடையில் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த இணை ஆணையர் நிரஞ்சன், உடனடியாக ரூ.230 கோடி வழங்குகிறோம். மீதி பாக்கியை அடுத்த வாரம் செட்டில் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதை ஏற்று போராட்டம் கைவிட்டனர்.

 

பட்டாவுக்கான இடம் பெற 27 ஆண்டுகள்! அடிப்படை வசதிகள் செய்து தர பேரூராட்சி முடிவு

Print PDF

தினமலர் 14.10.2010

பட்டாவுக்கான இடம் பெற 27 ஆண்டுகள்! அடிப்படை வசதிகள் செய்து தர பேரூராட்சி முடிவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வழங்கிய பட்டாவுக்கான இடம், மக்களின் தொடர் போராட்டத்தால் 27 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது. அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க, பேரூராட்சிக்கு உட்பட்ட குஞ்சிபாளையம் பிரிவு அருகே ஆதிதிராவிட நலத்துறை மூலம் 4.91 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அங்கு, 85 பேருக்கு தலா மூன்று சென்ட் இடம் கொடுப்பதற்காக இலவச வீட்டுமனைப்பட்டாக்களை கடந்த 1983ல், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., நெகமத்தில் நடந்த விழாவில் வழங்கினார்.இலவச பட்டா வழங்க கையகப்படுத்தப்பட்ட இடத்தை வழங்க மறுத்து நிலத்தின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடைஉத்தரவு பெற்றதால், பட்டாவுக்கான நிலத்தை அளந்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆதிதிராவிட நலத்துறை மூலம் கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு மாற்றாக வேறு இடம் கொடுப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட இடத்தை வழங்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் நிலத்தின் உரிமையாளர் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டதால், நீதிமன்ற தடை உத்தரவு நீடித்தது.

இந்நிலையில் கடந்த 2000ல், உயர்நீதிமன்ற தடை உத்தரவு விலக்கப்பட்டு அரசுக்கு சாதகமாக தீர்ப்பானது. அதன்பின், ஆதிதிராவிட நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு இடம் அளந்து வழங்கப்பட்டது. மொத்த பயனாளிகள் 85 பேரில், 60 பேரின் பட்டாவுக்கான நிலம் அளந்து கொடுக்கப்பட்டது. அப்போது, நில உரிமையாளர் மீண்டும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.

பட்டாவுக்கான நிலம் பெற்றவர்கள் அங்கு குடிசை மட்டுமே அமைக்க முடிந்தது. பட்டா வைத்திருந்த 25 பேருக்கு நிலம் அளந்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலத்தின் மீது நீதிமன்ற தடை உத்தரவு அமலில் இருந்ததால் தெருவிளக்கு, ரோடு, சாக்கடை, குடிநீர், மின் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 2004ல் அங்கு வசிக்கும் மக்களுக்கு சொத்துவரி விதித்து அங்கீகாரம் வழங்கியது.இந்நிலையில், கடந்த 2009 ஜூன் மாதம் நீதிமன்ற தடை உத்தரவு நிரந்தரமாக விலக்கிக்கொள்ளப்பட்டு, மேல் முறையீட்டிற்கு செல்ல முடியாதபடி உத்தரவிடப்பட்டது. அதையடுத்து மின்வாரிய பொறியாளர் சிவலிங்கம் வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கினார். 1983ல் இருந்து 2009ம் ஆண்டு வரையிலும் இருந்த நீதிமன்ற தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டதால் பட்டாவுக்கான நிலம் அளவு செய்து கொடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.ஆதிதிராவிட நலத்துறை தனித்தாசில்தார் சாந்தாதேவி, ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் லிங்கம்மாள், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் ஜெயராமச்சந்திரன், கவுன்சிலர்கள் வெள்ளைச்சாமி, சுப்பிரமணி, காளீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி 24 பேருக்கு புதிதாக பட்டா வழங்கினார்.பேரூராட்சி தலைவர் கூறுகையில், "25 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் மக்களால் அங்கு வீடுகட்ட முடியவில்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கும் தடையாக இருந்த நீதிமன்ற உத்தரவு விலக்கப்பட்டதால், அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.மக்களுக்கு தேவையான குடிநீர், சாக்கடை, சாலை, தெருவிளக்கு, பொதுக்கழிப்பிடம், இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 

உண்மையான பயனாளிகளுக்கு விரைவில் கடைகள் ஒதுக்கப்படும் மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

Print PDF

மாலை மலர் 13.10.2010

உண்மையான பயனாளிகளுக்கு விரைவில் கடைகள் ஒதுக்கப்படும் மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

உண்மையான பயனாளிகளுக்கு
 
 விரைவில் கடைகள் ஒதுக்கப்படும்
 
 மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, அக். 13- சென்னை மாநகராட்சி மேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகரில் சாலையோர வியாபாரி களுக்கான வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

எழும்பூர் ரெயில் நிலையம் எதிரிலும், சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரிலும், பூங்கா இரயில் நிலையம் அருகிலும், விக்டோரியா பப்ளிக் ஹால் சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அல்லிக்குளம் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல் தியாகராயநகரில் உள்ள தியாகராய சாலை, உஸ்மான் சாலை, சிவப்பிரகாசம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பாண்டி பஜாரிலும், அயனாவரம் பாலவாயல் மார்க்கெட் சுற்றியுள்ளவர்களுக்கு அதன் அருகாமையிலும், ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் நடைபாதை வியாபாரிகளுக்கு அந்தப் பகுதியிலும் ஹாக்கின்ஸ் கமிட்டி தலைவர் நீதிபதி ராமமூர்த்தியின் ஆணைப்படி வணிக வளாகங்கள் கட்டப்பட்டது.

துணை முதல்- அமைச்சர் மு..ஸ்டாலின் தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 வணிக வளாகங்ளையும் திறந்து வைத்தார். ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் 117 பேர்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டதில் சில புகார்கள் வந்ததன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி விழிப்புப்பணி அலுவலர் மூலம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நேரிடையாக ஆய்வு செய்து, அதில் 101 பேர்கள் மட்டுமே உண்மையான பயனாளிகள் என தெரிய வந்துள்ளது. அதில் 16 பேர்கள் கடைகளே இல்லாதவர்கள் என கண்ட றியப்பட்டுள்ளது.

அதே போன்று, பாண்டிபஜாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அயனாவரம் பாலவாயல் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்களின் உண்மையான பயனாளிகள் விழிப்புப்பணி அலுவலர் மூலம் அந்த அந்த பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து, பட்டியல் தேர்வு செய்து, ஹாக்கின்ஸ் கமிட்டி நீதிபதி ராம மூர்த்தியிடம் சமர்ப்பிக்கப்படும்.

அவர்கள் முன்னிலையி லேயே பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள கடைகள் அவரிடம் அனுமதி பெற்று, திறந்தவெளி ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை மாநகராட்சி கட்டியுள்ள வணிக வளாகங்கள் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒருபோதும் சேர வாய்ப்பு இல்லாத வகையில் உண் மையான பயனாளிகளுக்கு கடைகள் கிடைத்திட உரிய வழிவகைகள் உறுதியாக மேற்கொள்ளப்படும். இதில் எந்தவித குறைபாடுமின்றியும், கால தாமதமின்றியும், உரிய வழிமுறைகளின்படி கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதன் மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள சாலை களில் பொதுமக்கள் எந்தவித சிரமுமின்றி செல்வதற்கு சென்னை மாநகராட்சி வழிவகுக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Last Updated on Wednesday, 13 October 2010 11:47
 


Page 353 of 841