Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி நிறைவடைவது எப்போது?

Print PDF

தினமணி 13.10.2010

எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி நிறைவடைவது எப்போது?

மன்னார்குடி, அக். 12: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நகராட்சி சார்பிலான எரிவாயு தகன மேடை கட்டும் பணியை தொய்வில்லாது, விரைந்து முடிக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மன்னார்குடியில் உள்ள 33 வார்டுகளில் 15 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இதில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். நகரப் பகுதியில் வசிப்பவர்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் மரணமடைந்தால் எரியூட்டுவதற்கும், புதைப்பதற்கும் என எட்டு மயானங்கள் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், மன்னார்குடி நகரத்துக்குள்பட்ட பகுதியில் மின்சாரம், எரிவாயு மூலம் தகன மேடை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு, அதுதொடர்பாக அரசுக்கு கருத்துருவும் அனுப்பப்பட்டது.

அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து, உரிய இடத்தை தேர்வு செய்து அனுப்புமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, வடசேரி சாலையில் தகனமேடை அமைப்பது என நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

எரிவாயு தகன மேடை அமைக்க 2009-ல் அரசு சார்பில் 40 லட்சம் வழங்கப்பட்டு, மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் கட்டுமானப் பணிகளை தொடங்கியது. இந்தப் பணிகளுக்காக இரும்பால் ஆன 30 அடி உயரம் உள்ள புகைக்கூண்டு, மரக்கதவு, ஜன்னல் ஆகியவை கொண்டு வரப்பட்டன. 30 சத அளவுக்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், திடீரென பணிகள் நிறுத்தப்பட்டன.

பணிகள் நிறுத்தப்பட்டு ஓர் ஆண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த தளவாடப் பொருள்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இரும்புக் குழாய்கள் துருப்பிடித்து சேதமடையும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

"எரிவாயு தகன மேடை கட்டும் பணியை தடையில்லாது, விரைந்து தொடர வேண்டும் என அந்த நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. திட்டத்தில் அரசு அளிக்க வேண்டிய எஞ்சிய தொகையை விரைந்து பெற்று, விரைவில் தகன மேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, முடிக்கப்படும்' என்கின்றனர் நகராட்சி நிர்வாகத்தினர்.

எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளை தொய்வில்லாது, விரைந்து தொடங்கி, உரிய காலத்துக்குள்ளாக பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே மன்னார்குடி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

தாந்தோணி நகராட்சி கமிஷனர் மீது அதிருப்தி தன்னிச்சை செயல்பாடு

Print PDF

தினமலர் 13.10.2010

தாந்தோணி நகராட்சி கமிஷனர் மீது அதிருப்தி தன்னிச்சை செயல்பாடு

கரூர்: கரூர் மாவட்டம், தாந்தோணி நகராட்சி கமிஷனர் தன்னிச்சையாக செயல்படுவதாக, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.தாந்தோணி நகராட்சி அவசர கூட்டம், தலைவர் ரேவதி தலைமையில் மன்ற வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், தாந்தோணிமலை கோவிலை சுற்றியுள்ள தேர் வீதி தளம் அபிவிருத்தி, தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி சாலை, குமரன் சாலை, ராயனூர் பகுதி சாலை, காமராஜ் நகர் சாலை பாரதிதாசன் நகர் , ஜீவா நகர், திண்ணப் பா நகர், காந்திகிராமம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி சாலை உள்ளிட்ட 10 திட்டங்கள் 106.8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டது.

25.16 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு, கட்டளை பகுதியில் தலைமை நீரேற்று நிலையம், தாந்தோணி நகரில் ஏழு மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் நீர் உந்து நிலையம், நீர் சேகரிப்பு கிணறு, நீரேற்று குழாய், பகிர்மான குழாய் பதித்தல் பணி நடக்கவுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை நகராட்சிக்கு பெற்று, திட்டப்பணிக்கு பயன்படுத்த கரூர் கலெக்டர் அனுமதி கோரப்பட்டது.நகராட்சியில் முதல் 13 வார்டுகளுக்கு ஒப்பந்த அடிப்டையில் சுகாதார பணிகளை தனியார் மே ற்கொண்ட காலக்கெடு முடிந்ததால், தினக்கூலி அடிப்படையில் செப்டம்பர் 6ம் தேதி முதல் நியமிக்கப்பட்ட பணியாளருக்கான ஊதியம் வழங்க கவுன்சிலர் அனுமதி கோரப்பட்டது. மேலு ம், கூடுதலாக 75 துப்புரவு பணியாளர் பணியிடங்களை அனுமதிக்க கோரி சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கோரிக் கை விடுக்கப்பட்டது குறித்தம் பார்வைக்கு வைக்கப்பட்டது.இந்த இரு குறிப்புகளும் இடம்பெற்ற 6 மற்றும் 7ம் தீர்மானத்தை கவுன்சிலர்கள் பெ.ரவி, ராதாகிருஷ்ணன், பாலுசாமி, பாபுக்குமார், வசந்தாமணி, மாரியம்மாள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மன்றத்தில் அனைத்து தீர்மானமும் நிறைவேறியது.

எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் கூறியதாவது: தாந்தோணி நகராட்சியில் 1 முதல் 13ம் வார்டு வரை தனியார் மூலம் ஒப்பந்த அடிப்டையில் பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், ஒப்பந்த காலம் ஆகஸ்ட் 31ம் தேதி முடிந்தது. தனியார் துப்புரவு பணிக்கான ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது குறித்து இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது. ஆனால், எந்த அறிவிப்பும் இணையதளத்தில் இல்லை. இணைய தளத்தில் அறிவிப்பு வெளியான பிறகு, "டென்டர்' அழைக்குமாறு கமிஷனர் தெய்வசிகாமணியிடம் நேரில் கூறினோம்.

 ஆனால், அவர் தன்னிச்சையாக "டென்டர்' அழைத்து உறுதி செய்தார்.இதைக்கண்டித்து கவுன்சிலர் ஏகாம்பரம், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும், ஒப்பந்தப்புள்ளியிலும், கடந்த ஆண்டை விட 98 ஆயிரம் ரூபாய் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.தலைவர் ரேவதி கூறுகையில், ""ஒப்பந்தப்புள்ள விஷயத்தில் உயர்நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், சுகாதார அவசியத்தை கருதி, கரூர் மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி அடிப்டையில் தற்காலிக பணியாளர் நியமனம் செய்யப்பட்டு பணி நடக்கிறது. கூடுதலாக 75 பணியாளர் நியமனத்துக்கும் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அனுமதி கோரப்பட்டுள்ளது,'' என்றார்.

 

தாந்தோணியில் துப்புரவு பணிக்கு 75 கூடுதல் பணியாளர் அனுமதி கேட்டு நகராட்சியில் தீர்மானம்

Print PDF

தினகரன் 13.10.2010

தாந்தோணியில் துப்புரவு பணிக்கு 75 கூடுதல் பணியாளர் அனுமதி கேட்டு நகராட்சியில் தீர்மானம்

கரூர், அக்.13: தாந்தோணி நகராட்சி அவசர கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவி ரேவதி ஜெயராஜ் தலைமை யில் நடைபெற்றது. துணைத்தலைவர் வசந்தாமணி, செயல் அலுவலர் தெய்வசிகாமணி, உறுப்பினர்கள் பெ.ரவி, பிஎம்.ரவி, மாரியம் மாள், செல்வராஜ், லட்சுமி, ராதாகிருஷ்ணன், ராஜூ, பாபுகுமார், கண்ணகி, மகாலிங்கம், பழனிச்சாமி, ஏகாம்பரம், பாலுசாமி, மணி யம்மை ஆகியோர் கலந்து கொண்டனர்.

1முதல் 13வார்டுகள் வரை தனியார் மூலம் ஒப் பந்த அடிப்படையில் பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பணிக்காலம் கடந்த ஆக ஸ்ட் மாதம் முடிவடையும் தருவாயில் மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு டெண் டர் கோரப்பட்டது.

ஒப்பந்தப் புள்ளிகள் உறுதி செய்யப்படாததால், பொதுசுகாதார பணிகள் அவசர அவசியம் கருதி, கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி அடிப்படையில் பணியாளர் கள் நியமிக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு தினக்கூலி வழங்குவது, தாந்தோணி நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. கலெக்டர், எஸ்பி அலுவல கம் மற்றும் அனைத்து தலைமையிடத்து அலுவலகங்களும் அமைந்துள்ளது. 1முதல் 13வது வார்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையிலும், 14 முதல் 18வார்டுகள் வரை நகராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண் டும் பொது சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. நடப்பாண்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் கோர்ட்டில் வழக்கு தொரடப்பட்டது. அவசர அவசியம் கருதி தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தற்காலிகமாக பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக 75 துப்புரவு பணியாளர்கள் புதிய பணியிடங்கள் அனுமதிக்க வேண்டி நகராட்சி நிர்வாக இயக்குனரை கேட்டுக்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுகவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

முன்னாள் தலைவர் ரவி பேசுகையில், 40 நாட்களுக்கு பின்னர் இந்த தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. இவ்வ ளவு அவகாசம் இருந்தும் ஏன் சிறப்புக்கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் அனுமதி பெறவில்லை. மேலும் தற்காலிக பணியாளர்கள் பலர் துப்புரவு பணியே செய்யவில்லை என்றார்.

செயல் அலுவலர் கூறு கையில், அவசரம் கருதி தலைவர் முன்அனுமதிபெற்று செய்யப்பட்டுள்ளது என்றார். அதற்கு ரவி கூறுகையில், அதில் தவறு இல்லை. ஆனால் மன்ற ஒப்புதலோ, நகராட்சிகள் நிர்வாக அதிகாரி ஒப்புதலோ இன்றி ஏன் செய்யப்பட்டது என கேட்டு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

தீர்மானத்திற்கு பெ.ரவி, ராதாகிருஷ்ணன், பாலுசாமி, பாபுகுமார், துணைத்தலைவர் வசந்தாமணி வேலுசாமி, காங் உறுப்பினர் மாரியம்மாள் ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

 


Page 354 of 841