Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

போட்டிக்காக கடுமையாக உழைத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம்

Print PDF

தினகரன் 13.10.2010

போட்டிக்காக கடுமையாக உழைத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம்

புதுடெல்லி, அக். 13: காமன்வெல்த் போட்டி வெற்றிகரமாக நடக்க கடுமையாக உழைத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு, கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக, விளையாட்டு கிராமம் பற்றி மோசமான கருத்தையே, பல நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதனால், கிராமத்தையும், போட்டி மைதானங்களையும் சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பிறகு, விளையாட்டு கிராமத்தின் நிலை தலைகீழாக மாறி, வெளிநாட்டவரை சூப்பர் என சொல்ல வைத்து விட்டது.

மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகளின் கடுமையான உழைப்புக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்கள்கூட பாராட்டு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ஜே.கே.சர்மா கூறுகையில், "போட்டி வெற்றிகரமாக நடப்பதற்கு மாநகராட்சி ஊழியர்கள் உண்மையிலேயே கடுமையாக உழைத்துள்ளனர். போட்டி பணிக்காக பாடுபட்ட ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்குவது பற்றியோ அல்லது போட்டி முடிந்தபிறகு கூடுதலாக விடுமுறை விடுவது பற்றியோ மாநகராட்சி கமிஷனர் ஆலோசிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி மாநகராட்சி அவை முன்னவர் சுபாஷ் ஆர்யா (பா..) கூறுகையில் கூறியதாவது: காமன்வெல்த் போட்டிகளுக்காக கஷ்டப்பட்டு பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஊக்கப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும். அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பதவி உயர்வு வழங்கலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கிறோம். அதுபற்றி முடிவெடுக்க அதிக நாட்களாகும். அதற்கு முன் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஆர்வத்துடன் பணியாற்ற, நிறைவு விழாவுக்கான இலவச பாஸ்களை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டுமென ஒருங்கிணைப்புக் குழுவை கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டு கிராமத்தில் மாநகராட்சி ஊழியர்கள் 18ம் தேதி வரையில் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

 

தாராபுரம் நகராட்சியில் தெருநாய்களுக்கு கு.க அறுவை சிகிச்சை

Print PDF

தினகரன் 13.10.2010

தாராபுரம் நகராட்சியில் தெருநாய்களுக்கு கு.க அறுவை சிகிச்சை

தாராபுரம், அக்.13: தாராபுரம் நகராட்சியில் தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தாராபுரம் நகராட்சியில் 30 வார்டு உள்ளது. எல்லா வார்டுகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து விட்டது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரோட்டில் செல்ல பயப்படும் நிலை உருவாகிவிட்டது. நாய்கள் துரத்திக் கடித்ததால் பல பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நாய்களின் தொல் லைக்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து நாய்களுக்கு கு.. அறுவை சிகிச்சை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் தெருநாய்களை பிடிப்பது, அவை களை அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்ல வும், சிகிச்சைக்கு பிறகு அதே இடத்தில்கொண்டுவந்து விட்டுச் செல்வதற்கான வாகனச் செலவு, அறுவை சிகிச்சைக்கு முன்பு வழங்கப்படும் மயக்க மருந்து, பிறகு அறுவை சிகிச்சை செலவு, சிகிச்சை காலத்தில் அவைகளுக்கு உணவு, தொடர்சிகிச்சை, இதோடு சேர்த்து வெறி தடுப்பு ஊசி இப்படி பல் வேறு செலவினங்களுக்காக ஒரு நாய்க்கு ரூ440

வழங்குகிறது. நகராட்சிக்கு 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் அடிப்படையில் தான் தாரா புரம் நகராட்சியில் கடந்த 2009&ம் ஆண்டு 220 தெரு நாய்களுக்கு குடும்பக்கட்டு பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது 255 தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட உள்ளது. இதற் காக நேற்று 60 நாய் பிடிக்கப்பட்டது. டாக்டர் ஆனந்த்குமார் மற்றும் தேனியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அறுவை சிகிச் சையை மேற்கொண்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் துரை கூறியதாவது:நகராட்சி ஆனது 7.2 சதுர கி.மீ பரப்பளவில் உள் ளது. அனைத்து பகுதிகளிலும் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வருகிறோம். இனப்பெருக்கத்தை குறைக்கும் வகையில் அவைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எனவே வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் தங்களது நாய்களை தெருவில் விட வேண்டாம். எந்த நேரத்திலும் நாய்களை பிடித்துச் செல்ல ஊழியர்கள் வருவார்கள். பிடித்த நாய்களுக்கு உடனுக்குடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விடும். எனவே தங்களது நாய்களை சில தினங்களுக்கு வீட்டிலேயே கட்டிவைத்து வளர்த்து கொள்ள வேண்டும். இவ் வாறு துரை கூறினார்.

 

அகில இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டி கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் அசத்தல்

Print PDF

தினகரன் 13.10.2010

அகில இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டி கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் அசத்தல்

கோவை, அக். 13: அகில இந்திய அளவில் மாநகராட்சிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிக ளில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் பதக் கம் பெற்றனர். இவர்களை மாநகராட்சி கமிஷனர்களு க்கு நேற்று பாராட்டு விழா நடந்தது.

சென்னை மாநகராட்சி யின் 322வது ஆண்டு விழா வை முன்னிட்டு சென்னை யில் தேசிய அளவிலான மாநகராட்சிகளுக்கு இடை யிலான விளையாட்டுப் போட்டி நடந்தது. இந்தியாவில் 12 மாநகராட்சிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றிருந்தனர். கோவை மாநகராட்சி சார்பில் கவுன்சிலர் சேரலா தன், தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில் கேரம் விளையாட்டில் சேர லாதன் முதலிடமும், குண்டு எறிதலில் 3ம் இடமும் பெற் றார். கவுன்சிலர் தமிழ்செல்வி குண்டு எறிதல் போட்டியில் 3வது இடமும் பெற்றனர். அகில இந்திய அளவிலான மாநகராட்சி கவுன்சிலர்களு க்கு இடையிலான போட்டி யில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளனர். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பாராட்டு விழாவில் கமிஷ னர் அன்சுல் மிஸ்ரா, துணை கமிஷனர் பிரபாகரன் மற்றும் உதவி கமிஷனர்கள் பங்கேற்று வெற்றி பெற்ற கவுன்சிலர்களை பாராட்டி பரிசு வழங்கினர்.

 


Page 355 of 841