Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வேரோடு சாய்ந்து விழுவதை தடுக்க மரக்கிளைகளை வெட்ட வேண்டும் தவறினால் ரூ5,000 அபராதம்

Print PDF

தினகரன் 11.10.2010

வேரோடு சாய்ந்து விழுவதை தடுக்க மரக்கிளைகளை வெட்ட வேண்டும் தவறினால் ரூ5,000 அபராதம்

மும்பை, அக். 11: இரண்டு வாரத்துக்குள் மரக்கிளைகளை வெட்ட வேண்டும் இல்லை என்றால் அபராதம் கட்ட நேரிடும் என 500 ஹவுசிங் சொசைட்டிகளுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மரங்கள் வேரோடு சாய்ந்து விபத்து ஏற்படுவது அண்மை காலத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 4 சம்பவங்களில் ஒரு ஆண் உயிரிழந்தார், 3 பெண்கள் படுகாயமடைந்தனர். அதிக மழை மற்றும் வெயில் காரணமாக மரங்களின் வேர் பலவீனமடைவதே விபத்து ஏற்படுவதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து மரங்கள் வேரோடு சாய்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க திட்டமிட்ட மாநகராட்சி, மும்பை முழுவதும் உள்ள மரங்களில் நிலவரம் குறித்து ஆய்வு செய்தது. இதில் 500 ஹவுசிங் சொசைட்டிகளில் உள்ள மரங்களின் கிளைகள் மிகுதியாக வளர்ந்துள்ளன என்றும் இவற்றை கொய்யவில்லை என்றால் வேரோடு சாய்ந்து விழும் ஆபத்து இருப் பதாக கண்டறியப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர்(பூங்கா) சந்த்ரகாந்த் ரோக்டே கூறுகையில், "ஆய்வில் கண்டறியப்பட்ட 500 ஹவுசிங் சொசைட்டிகளுக்கு, இரண்டு வாரத்துக்குள் மரக்கிளைகளை கொய்ய வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். உத்தரவை மீறும் சொசைட்டிகளுக்கு ரூ5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரம் விழுந்து மரணமடைந்த ரஹீம் ஷேக்(50) குடும்பத்தினருக்கு ரூ1 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும்" என்றார்.

 

தெரு ​நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

Print PDF

தினமணி 08.10.2010

தெரு ​நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

பரமக்குடி,​​ அக்.​ 7:​ பரமக்குடி நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை தடுக்கும் விதமாக,​​ அதனைக் கட்டுப்படுத்த அந் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை வியாழக்கிழமை நடைபெற்றது.

​ நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் தெரு நாய்கள் பொதுமக்களைக் கடித்தும்,​​ பல்வேறு வகையில் இடையூறுகளை ஏற்படுத்தி வந்தன.​ இதனைக் கட்டுப்படுத்த நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்து வந்தனர்.

​ ​ இதனை ஏற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்,​​ விலங்குகள் நலப் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன்,​​ ஜூலி பிராணிகள் நலச் சங்கம் மற்றும் நகராட்சி அலுவலர்கள்,​​ முதற்கட்டமாக 50-க்கும் மேற்பட்ட தெருநாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.​ ​ ​ தொடர்ந்து மாதம் ஒருமுறை விடுபட்ட நாய்களுக்கு அறுவைச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக ஆணையாளர் கே.​ அட்ஷயா தெரிவித்தார்.

 

பழனி நகராட்சி சார்பில் பன்றிகள் பிடிப்பு

Print PDF

தினமணி 08.10.2010

பழனி நகராட்சி சார்பில் பன்றிகள் பிடிப்பு

பழனி,​​ அக்.​ 7:​ பழனியில் நகராட்சி சார்பில் பன்றிகள் பிடிக்கப்பட்டு,​​ நகருக்கு வெளியே கொண்டு சென்று விடப்பட்டன . ​ ​ ​ ​ ​ பழனியில் பாளையம்,​​ அடிவாரம்,​​ கிரி வீதி உள்ளிட்ட பல வார்டு பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாகச் சென்று சாக்கடையை கிளறி நோய்களை பரப்பிய வண்ணம் இருந்தன.​ ​

​ இந் நிலையில்,​​ புதன்கிழமை அதிகாலை முதல் நகராட்சி சார்பில் நகரில் சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன.​ ​ இதற்காக கோவை மாவட்டத்தில் இருந்து பன்றிகளைப் பிடிக்கும் 15 பேர் கொண்ட குழு வலையுடன் அழைத்து வரப்பட்டது.

​ ​ ​ காலை முதல் பழனி நகரின் பல்வேறு பகுதிகளில் 65 பன்றிகள் பிடிக்கப்பட்டன.​ ​ இவை பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாத பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டன.​ ​ பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம்,​​ நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில்,​​ நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி,​​ நெடுமாறன்,​​ மணிகண்டன்,​​ மதுரைவீரன்,​​ சையது அபுதாகீர் உள்ளிட்ட பலர் இப் பணியில் ஈடுபட்டனர்.​

 


Page 357 of 841