Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காய்கறி தரைக்கடைக்கான ஏலம் நடத்தும் மாநகராட்சி மண்டபம் திடீர் முற்றுகை

Print PDF

தினமணி 07.10.2010

காய்கறி தரைக்கடைக்கான ஏலம் நடத்தும் மாநகராட்சி மண்டபம் திடீர் முற்றுகை

மதுரை, அக்.6: மதுரையில் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உள்ள தரைக்கடைகளை ஏலம் நடத்தும் மண்டபத்தை வியாபாரிகள் புதன்கிழமை காலை திடீரென முற்றுகையிட்டனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் 524 கட்டடக் கடைகளுக்கு ஏலம் விடப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட தரைக் கடைகளுக்கு ஏலம் விட முடிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி கல்தூண் மண்டபத்தில் புதன்கிழமை ஏலம் விடும் கூட்டம் நடைபெற்றது. இதில், ரூ 50 ஆயிரம் டெபாசிட் செலுத்தியவர்கள் ஏலம் நடைபெறும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மாநகராட்சி தலைமை நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையர்கள் தேவதாஸ், ரவீந்திரன் உள்ளிட்டோர் இந்த ஏலப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மேட்டுப்பகுதி காய்கறி மார்க்கெட் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கல்தூண் மண்டபம் பகுதிக்கு வந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி திடீரென முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, போலீஸôர் அவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, மேட்டுப்பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே இடத்தில் தரைக்கடைகளை ஒதுக்க வேண்டும்; வேறு பிளாக்கில் தனியாக பிரித்து வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். சங்கத்தின் தலைவர் சிவனேசன், செயலர் கோபாலாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேச்சு நடத்தினர்.

இதையடுத்து, போலீஸôர் ஏலம் நடத்தும் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மண்டபத்தின் கதவு அடைக்கப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது. இச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

 

பழநியில் சுற்றித்திரிந்த பன்றிகள் அகற்றம்

Print PDF

தினகரன் 07.10.2010

பழநியில் சுற்றித்திரிந்த பன்றிகள் அகற்றம்

பழநி, அக். 7: பழநி நகரில் சுற்றித்திரிந்த பன்றிகள் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளால் பிடித்து காட்டுக்குள் விடப்பட்டன. பழநி நகர் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பல்வேறு தரப்பினர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் பேரில் நகரில் சுற்றி திரியும் பன்றிகளை உயிருடன் பிடிக்க முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பழனிச்சாமி, மணிகண்டன், சையது அபுதாஹிர், நெடுமாறன், மதுரைவீரன் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் அகில இந்திய நாய் மற்றும் பன்றி பிடிப்போர் குழுவைச் சேர்ந்த 15 பேர் குழுவினருடன் நகர் முழுவதும் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 55க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட பன்றிகள் நகராட்சி எல்லைக்கு வெளியே காட்டு பகுதியில் விடப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நாய் பிடிக்கும் பணி ஜரூர்

Print PDF

தினமலர் 07.10.2010

நாய் பிடிக்கும் பணி ஜரூர்

சேலம்: கொண்டலாம்பட்டி மண்டலத்தில் நேற்று 24 நாய்கள், ஐந்து பன்றிகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.சேலம் மாநகர பகுதியில் தெரு நாய் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வார்டுகளில் இரவு நேரத்தில் வெளியில் தலைகாட்டவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஹாயாக உலா வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுடன் சேர்ந்து கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தொடர்ந்து சர்ச்சைகள் எழும்போது மாநகராட்சியில் அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். நேற்று கொண்டலாம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட சின்னையன் காலனி, கோவிந்தம்மாள் நகர், அழகு நகர், பெருமாள் கோவில் மேடு ஆகிய பகுதிகளில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த 24 நாய்கள், ஐந்து பன்றிகள் பிடிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 07 October 2010 07:49
 


Page 358 of 841