Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தெருவோரத்தில் வசிப்போர் மாநகராட்சி கணக்கெடுப்பு

Print PDF

தினமலர் 07.10.2010

தெருவோரத்தில் வசிப்போர் மாநகராட்சி கணக்கெடுப்பு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெருவோரங்கள் மற்றும் ரோட்டோரங்களில் வசிக்கும் குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பில், மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகாதாரத்துறை பிரிவில் உள்ள 13 டிவிஷன்களிலும், சுகாதார ஆய்வாளர்கள் இக்கணக்கெடுப்பில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். புகைப்படங்களுடன், புள்ளிவிபரங்களை அவர்கள் சேகரிக்கின்றனர். இதில், ரோட்டோரத்தில் அல்லது தெருவோரத்தில் வசிக்கும் குடும்பங்களை கண்டறிந்த இடம், வார்டு எண், அடையாள இடம், தங்கியுள்ள இடம் குறித்தும், ஆணா, பெண்ணா, அவர்களது வயது, குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் வயது, என்ன நிலையில் உள்ளனர்? மனநோயாளி, மாற்றுத்திறனாளி, முதியவர், சிறார் அல்லது மற்றவை என குறிப்பிட வேண்டும். செய்யும் தொழில், பிச்சை எடுத்தல், கூலி வேலை, சுயதொழில், மற்றவை அல்லது ஏதுமில்லை என குறிப்பிட வேண்டும். இத்தகவல்களை புகைப்படங்களுடன், அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Last Updated on Thursday, 07 October 2010 07:49
 

மேலவைக்கான உள்ளாட்சி உறுப்பினர்கள் 26 பேரை தேர்வு செய்ய தொகுதி வரையறை

Print PDF

தினமலர்          07.10.2010

மேலவைக்கான உள்ளாட்சி உறுப்பினர்கள் 26 பேரை தேர்வு செய்ய தொகுதி வரையறை

விருதுநகர் : மேலவைக்கான உள்ளாட்சி பிரதிநிதிகள் 26 பேரை தேர்வு செய்வதற்காக தொகுதிகளை தேர்தல் கமிஷன் வரையறை செய்துள்ளது.

மேலவைக்கு உள்ளாட்சி உறுப்பினர்களான நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் சார்பில் 26 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான தொகுதிகளை மக்கள் தொகை, உள்ளாட்சி உறுப்பினர்கள் அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு இரண்டு உறுப்பினர்களும், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு உறுப்பினர், திருச்சி, பெரம்பலூருக்கு ஒரு உறுப்பினர், நாகப்பட்டினம், திருவாரூருக்கு ஒரு உறுப்பினர், சிவகங்கை, ராமநாதபுரத்திற்கு ஒரு உறுப்பினர், நாமக்கல், கரூருக்கு ஒரு உறுப்பினர், கடலூர், அரியலூருக்கு ஒரு உறுப்பினர், கோவை, நீலகிரிக்கு ஒரு உறுப்பினர், திண்டுக்கல், தேனிக்கு ஒரு உறுப்பினர் தேர்வு செய்யும் விதமாக தொகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வுக்கு அந்தந்த மாவட்டங்களில் டி.ஆர்..,வும், சென்னையில் மாநகராட்சி டி.ஆர்..,(நிலம்) பதிவு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு உறுப்பினர் என வரும் போது ஏதாவது ஒரு மாவட்ட டி.ஆர்.., பதிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். உதவிப்பதிவு அலுவலர், அந்தந்த மாவட்ட ஊராட்சி வளர்ச்சிப்பிரிவு பி..,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Last Updated on Thursday, 07 October 2010 07:45
 

சேலம் மாநகராட்சியில் பார்வையாளர் மாடத்துக்கு செல்லஅனுமதி மறுப்பு

Print PDF

தினமலர் 06.10.2010

சேலம் மாநகராட்சியில் பார்வையாளர் மாடத்துக்கு செல்லஅனுமதி மறுப்பு

சேலம்: சேலம் மாநகராட்சியில் மாதந்தோறும் நடக்கும் மாமன்ற கூட்ட விவாதங்களை நேரடியாக பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பார்வையாளர் மாடத்துக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த 1963 டிச., 31ல், தமிழ்நாடு ஸ்தல ஸ்தாபன அமைச்சராக பொறுப்பு வகித்த மஜீத் என்பவர் தற்போதுள்ள மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். புதிய கட்டிடம் ராமகிருஷ்ணன் நகர் மன்றம் என்று அழைக்கப்பட்டது.எம்.ஜி.ஆர்., முதல்வராக பொறுப்பு வகித்த போது, அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ராஜாராம் என்பவர் எடுத்த முயற்சியால், சேலம் நகர்மன்ற கட்டிடத்துக்கு ராஜாஜி நகர் மன்ற நிலையம் என்ற பெயர் சூட்டப்பட்டது. தற்போதுள்ள கணக்குப்பிரிவு அலுவலகத்தில் மாதம் ஒருமுறை நகர்மன்ற கூட்டம் நடத்தப்பட்டது.

நகர் மன்ற தலைவர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். இடப்பற்றாக்குறையால், மன்ற கூட்ட விவாதம் அருகில் உள்ள புதிய கட்டிடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.நகராட்சியின் மைய அலுவலகத்தில் நடக்கும் நகர் மன்ற கூட்டங்களை பொதுமக்கள் நேரடியாக பார்க்க பார்வையாளர் மாடம் ஏற்படுத்தப்பட்டது. நகரவாசிகள் மாதந்தோறும் நடக்கும் கூட்டங்களை நேரடியாக பார்வையிட்டு வந்தனர். பொதுமக்கள் மன்ற கூட்டங்களுக்கு வந்ததால், வார்டு பிரதிநிதிகள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து காரசாரமாக விவாதித்தனர்.கடந்த 1994 ஜூன் 1 ம் தேதி சேலம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சேலம் மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.., வை சேர்ந்த சூடாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மேயராக பொறுப்பு வகித்த ஆரம்பகாலத்தில் பொதுமக்கள் பார்வையாளர் மாடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ஒருமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் செய்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அன்று முதல் பார்வையாளர் மாடத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சூடாமணிக்கு பிறகு, 2001-06 வரை அ.தி.மு.., வை சேர்ந்த சுரேஷ்குமார் மேயராக பொறுப்பு வகித்தார். அவரது காலத்திலும் பொதுமக்கள், பார்வையாளர் மாடத்துக்குசெல்ல அனுமதிக்கப்படவில்லை.கடந்த 2006ம் ஆண்டு தி.மு.., வை சேர்ந்த ரேகாபிரியதர்ஷினி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டாக அவரும் பார்வையாளர் மாடத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் சேலம் மாநகராட்சி மன்ற கூட்டம் நடக்கும் போது, கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மட்டுமே மன்ற கூட்டத்துக்கு செல்ல போலீஸார் அனுமதியளிக்கின்றனர்.மன்ற கூட்டத்தை நேரடியாக பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வரும் பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்களையும் போலீஸார் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால், அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.மன்ற கூட்டம் மட்டுமின்றி பட்ஜெட் கூட்டம் நடக்கும் போதும், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

 


Page 359 of 841