Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தஞ்சை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

தஞ்சை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தஞ்சை பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

நகராட்சி

தஞ்சை நகராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு நகரசபை தலைவி சாவித்திரிகோபால் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு நகராட்சி அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள், பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

இதில் நகராட்சி பொறியாளர் சீனிவாசன், நகர்நல அலுவலர் செந்தில்குமார், மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், முன்னாள் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப்பல்கலைக்கழகம்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் துணைவேந்தர் ம.திருமலை தேசிய கொடியை ஏற்றி வைத்து, 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்கள் ஜெகதீசன், அரங்கசாமி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுத்தொகையை வழங்கினார். பதிவாளர் கணேஷ்ராம் வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக மாணவிகள் தற்காப்பு கலையை செய்து காண்பித்தனர். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்லூரி

தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு முதல்வர் மகாதேவன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவிற்கு துணை முதல்வர் சிவசாமி, டாக்டர்கள் சங்கரநாராயணன், நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. முடிவில் நிலைய மருத்துவ அலுவலர்கள் மனோகரன், ஜெயச்சந்திரன் ஆகியோர் நன்றி கூறினர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஆகன் பல்கலைக்கழக பேராசிரியர் சட்டர்ஜி மற்றும் அவருடைய மனைவி அனயுலோனாசாவேஸ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அரசு உயர்நிலைப்பள்ளி

குருங்குளம் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு தலைமை ஆசிரியை ஜெயம்ஜெயசீலி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாலச்சந்திரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் அனுராதாமணிகண்டன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமார் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சானூரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி நந்தகுமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நந்தகுமார், சத்துணவு அமைப்பாளர் ஆறுமுகம் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அனிதா நன்றி கூறினார்.

நகராட்சி உயர்நிலைப்பள்ளி

தஞ்சை முனிசிபல்காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு தலைமை ஆசிரியை மேரிவிமலா தலைமை தாங்கினார். நகரசபை உறுப்பினர் சர்மிளாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கோவிந்தராசு வரவேற்றார். காந்திய மக்கள் இயக்க மாவட்ட துணைத் தலைவர் வேம்பு குடியரசு தினத்தை பற்றி பேசினார். முடிவில் ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

பாரதீய ஜனதா கட்சி

தஞ்சையில் பாரதீய ஜனதா சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் முன்னாள் ராணுவவீரர் பழனிகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தஞ்சை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பாலசெல்வம், ஆனந்தன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைத் தலைவி தனலட்சுமி நன்றி கூறினார்.

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி வெங்கடேசா நகரில் நடந்த குடியரசு தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவி கீதாசேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவிற்கு பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் மற்றும் கண்ணையன், சேவியர், கருப்பையா, குணசேகரன், பரமசிவம், தரணிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதரவற்றோர் மாணவர் இல்லம்

தஞ்சையில் உள்ள ஆதரவற்றோர் மாணவர் இல்லத்தில் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் விடுதிகாப்பாளர் சுடரொளி வரவேற்றார். கவுரவ செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கினார். பூண்டி புஷ்பம் கல்லூரி பேராசிரியர் சாமிநாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார் சிலம்ப ஆசிரியர் கோவிந்தன், தற்காப்பு கலை ஆசிரியர் முபாரக், இல்ல ஊழியர்கள் ராமதாஸ், ஆயிப்பொண்ணு மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிரசன்னா நன்றி கூறினார்.

சுவாமி விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை

தஞ்சை முனிசிபல் காலனியில் சுவாமி விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை சின்னையன் ஏற்றி வைத்தார். ஆசிரியர் பரமானந்தம் குடியரசு தினம் பற்றி பேசினார். இதில் பாலசெல்வம், சந்திரன், சாகுல்அமீது, சத்யா, தனலட்சுமி, பத்மபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

நாகர்கோவில் நகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர்           28.01.2014 

நாகர்கோவில் நகராட்சி கூட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி சிறப்பு கூட்டம் நகராட்சி சேர்மன் மீனாவ்தேவ் தலைமையில் நடந்தது. பாதுகாப்பற்ற ஆழ்குழாய் கிணற்றினால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுத்திடும் நோக்கத்தில் உச்சநீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அரசு, அரசு சார்புடைய நிறுவனங்கள், தனியார், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும், ஆபத்தான மரங்கள், பழுதடைந்த பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளி மற்றும் அரசு கட்டிடங்கள் குறித்த புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களும் குடியரசு தினத்தன்று கிறப்பு கூட்டம் நடத்தி முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் நாகர்கோவில் நகராட்சி சிறப்பு கூட்டம் நேற்று காலை நகர்மன்ற கூட்டத்தில் நடந்தது. கூட்டத்தில் நகரபகுதியில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் மற்றும் பழுதடைந்த மின்கம்பங்களை அடையாளம் காணவும், அடையாள சின்னம் குறித்த பலகை இல்லாத ஆபத்தான வளைவுகள் உள்ள சாலைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பாதுகாப்பற்ற சாலையேரா பள்ளங்களை சரி செய்யவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆபத்தான கட்டிடங்கள், மின் கம்பங்களை அகற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இந்த சிறப்பு கூட்டத்தில் துணைத்தலைவர் சைமன்ராஜ், ஆணையர் ராஜன் பொறியாளர் ஜார்ஜ் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

சென்னை புறநகரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

சென்னை புறநகரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னை புறநகரில் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழா

சென்னை புறநகரில் பல்வேறு பகுதிகளில் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் எச்.எஸ்.சுரேஷ் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் வி.என்.பி.வெங்கட்ராமன் தேசிய கொடி ஏற்றினார்.

பெருங்குடி

பெருங்குடியில் கே.பி.கந்தன் எம்.எல்.ஏ.வும், நீலாங்கரையில் மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் நீலாங்கரை முனுசாமியும், துரைப்பாக்கத்தில் மாநகராட்சி கவுன்சிலர் டி.சி.கோவிந்தசாமியும், பெருங்குடி மண்டல அலுவலகத்தில் மண்டலக்குழு தலைவர் ராஜாராம் ஆகியோரும் தேசிய கொடி ஏற்றினர்.

மேடவாக்கம் ஊராட்சியில் தலைவர் ப.ரவி, பெரும்பாக்கம் ஊராட்சியில் தலைவர் சுகாசினி ரங்கராஜன், மூவரசம்பேட்டையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்தவச்சலம் ஆகியோர் தேசிய கொடியேற்றி வைத்தார்.

திருவொற்றியூர்-மணலி

திருவொற்றியூர் மண்டலத்தில் உதவி ஆணையர் காங்கேயன் கென்னடி தலைமையில் மண்டலக்குழு தலைவர் தனரமேஷ் தேசியகொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

மணலி மண்டலத்தில் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் மண்டலக்குழு தலைவர் தங்கசிவம் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

தாம்பரம்

தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகரசபை தலைவர் கரிகாலன், பல்லாவரம் நகராட்சியில் தலைவர் நிசார்அகமது, பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் என்.டி.கிருஷ்ணன், அனகாபுத்தூர் நகராட்சியில் தலைவர் அனகை வேலாயுதம், பம்மல் நகராட்சியில தலைவர் சி.வி.இளங்கோவன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.

செம்பாக்கம் நகராட்சியில் தலைவர் சாந்தகுமார், மாடம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் விமலா, சிட்லபாக்கம் பேரூராட்சியில் தலைவர் மோகன், பெருங்களத்தூர் பேரூராட்சியில் தலைவர் சேகர், பீர்க்கன்கரணை பேரூராட்சியில் தலைவர் சம்பத்குமார் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.

திருவேற்காடு-ஆவடி

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் மகேந்திரன், வானகரம் ஊராட்சியில் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.

ஆவடி நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சா.மு.நாசர், திருநின்றவூர் அடுத்த பாக்கம் ஊராட்சியில் தலைவர் திருமஞ்சுஅருள்தாஸ், ஆலத்தூர் ஊராட்சியில் தலைவர் முனுசாமி, திருநின்றவூர் பேரூராட்சியில் தலைவர் தி.வை.ரவி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி

சென்னை புழலில் உள்ள சென்னை வாழ் நாடார்கள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ஸ்ரீ நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியின் செயலாளரும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான எஸ்.கோவிந்தசாமி தேசிய கொடியேற்றினார்.

புழலில் உள்ள சென்னை வாழ் நாடார்கள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் காமராஜ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை உறுப்பினர் ஏ.என்.எஸ். நல்லழகு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

செங்குன்றம்

செங்குன்றம் பேரூராட்சியில் குடியரசு தினத்தையொட்டி பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் குமாரி அருணாசலம் தேசிய கொடி ஏற்றினார்.

 


Page 37 of 841