Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகரில் நாளை 5 மண்டலத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

Print PDF

தினகரன்             22.01.2014 

மாநகரில் நாளை 5 மண்டலத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்

கோவை, : கோவை மாநகராட்சியில் நாளை 5 மண்டலங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் குறைதீர்ப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

கோவை மாநகராட்சியில் நாளை 5 மண்டலங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் குறைதீர்ப்பு திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் பெயர், கதவு எண், தெருவின் பெயர் மற்றும் கேட்பு முதலிய திருத்தங்கள் மேற்கொள்ளுதல், புதிய சொத்துவரி மற்றும் கேட்பு அட்டை மற்றும் குடிநீர் கேட்பு அட்டை வழங்கல், விடுபட்ட சொத்துவரி, குடிநீர் இணைப்பு பதிவு செய்தல் தொடர்பான இதர பணிகள், தொழில்வரி இனங்கள், புதிய இனங்கள் பதிவு செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான இதர பணிகளுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

நாளை (22ம் தேதி) கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி காமாட்சியம்மன் கல்யாண மண்டபத்தில் 32வது வார்டு மக்களுக்காகவும், மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் வார்டு அலுவலகத்தில் 5, 6, 7, 8, 9 ஆகிய வார்டு மக்களுக்காகவும் குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் 87, 88, 91, 92, 93 ஆகிய வார்டு மக்களுக்காகவும், வடக்கு மண்டலம் துடியலூர் வார்டு அலுவலகத்தில் 1, 2, 3, 4 ஆகிய வார்டு மக்களுக்காகவும், ஓசூர் சாலையில் உள்ள மத்திய மண்டல அலுவலகத்தில் 25, 72, 73, 74 ஆகிய வார்டு மக்களுக்காகவும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.

இதையடுத்து வரும் 27ம் தேதி, பிப்ரவரி முதல் தேதி, 5ம் தேதி, 8ம் தேதி, 10ம் தேதி, 15ம் தேதிகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வார்டுகளுக்கு அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது.  இத்தகவலை மேயர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.

 

கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு பூமிபூஜை

Print PDF

தினமணி             21.01.2014 

கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு பூமிபூஜை

கள்ளக்குறிச்சி நகராட்சிப் பேருந்து நிலையத்தில் விரிவாக்கம் செய்தல் பணிக்காக பூமி கட்ட திங்கள்கிழமை அமைச்சர் ப. மோகன் பூமி பூஜை செய்து வைத்தார்.

 கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் போதிய இடவசதியின்மையால் பேருந்துகள் நிறுத்த மிகவும் சிரமம் ஏற்பட்டு வந்தது.   இப்பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக தமிழக முதல்வர் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் பூமி பூஜை நடைபெறும் விழா பழைய நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கீழ் பகுதியில் சைக்கிள் நிறுத்துமிடமும், 24 கடைகளும் கட்ட உள்ளனர்.

 ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் தலைமை வகித்து பூமி பூஜை செய்து அடிக்கல்லை நாட்டினார். எம்எல்ஏ க.அழகுவேலு பாபு, நகர்மன்றத் தலைவர் கோ.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் க.வாசுகி,  ஒன்றிய குழுத் தலைவர் அ.ராஜசேகர், நகராட்சி ஆணையர் சு.அருணாச்சலம், நகரச் செயலாளர் எம்.பாபு, நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

 

ராசிபுரத்தில் 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

Print PDF

தினமணி            20.01.2014

ராசிபுரத்தில் 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

ராசிபுரம் பாரதிதாசன் சாலை தாய் சேய் நல மையத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார்.

நகரில் அமைக்கப்பட்ட 21 மையங்களில் ஐந்து வயதிற்குள்பட்ட 4106 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மு.கார்த்திகேயன், நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், ரோட்டரி நிர்வாகிகள் நடராஜன், எஸ்.பாலாஜி, மெய்யப்பன், சிவக்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பிரகாஷ், பாஸ்கர், லோகநாதன், அங்குராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 


Page 46 of 841