Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஜனவரி 19, பிப்ரவரி 23-இல் 83 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

Print PDF

தினமணி            18.01.2014

ஜனவரி 19, பிப்ரவரி 23-இல்  83 ஆயிரம் குழந்தைகளுக்கு  போலியோ தடுப்பு சொட்டு மருந்து

சேலம் மாநகராட்சியில் வருகிற 19, பிப்ரவரி 23-ஆம் தேதிகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடத்தி, சுமார் 83 ஆயிரம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மா. அசோகன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதி முழுவதும் ஜனவரி 19, பிப்ரவரி 23-ஆம் தேதிகளில் குழுந்தைகளுக்கு சிறப்பு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 184 மையங்களில் 5 வயதிற்கு உள்பட்ட சுமார் 83 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளன.

 போலியோ சொட்டு மருந்து மையங்கள் முறையே, மாவட்ட அரசு மருத்துவமனைகள், நகர் நல மையங்கள், மாநகராட்சி மருந்தகங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

 இது தவிர 10 நடமாடும் குழுக்கள் மூலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் குடிசைப் பகுதிகள், சாலையோரத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகள், நாடோடிகள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரில் சென்று குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 மாநகராட்சிக்கு 1 லட்சம் போலியோ சொட்டு மருந்துகள் பெறப்பட்டு குளிர் சாதன நிலையில் 9 மையங்களில் தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவ - மாணவிகள், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் சேர்ந்து சுமார் 1,200 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 22 மேற்பார்வையாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியைக் கண்காணிக்க உள்ளனர்.

 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் செயல்படும். அதைத் தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று ஒரு குழந்தை கூட விடுபடாமல் இருக்கவும், விடுபட்டக் குழந்தைகளைத் தொடர்ந்து பார்வையிட்டு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கி, போலியோ நோயை முற்றிலும் ஒழித்திட அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க முன் வர வேண்டும். போலியோ நோய் இல்லாத மாநகராட்சியாக சேலம் திகழ்ந்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

 

நகராட்சி ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

Print PDF

தினமணி            18.01.2014

நகராட்சி ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

கடலூர் நகராட்சி ஓய்வூதியர் சங்க மாதாந்திரக் கூட்டம், சங்கத்  தலைவர் சம்பத் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

 இக் கூட்டத்தில் சங்க துணைத் தலைவர் ரமணன், செயலர் குமாரசாமி, இணைச் செயலர் சந்திரமணி, பொருளாளர் முத்துக்குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.

குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ உதவி காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசாணை, பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

நீடாமங்கலத்தில் கோலப் போட்டி

Print PDF

தினமணி            17.01.2014

நீடாமங்கலத்தில் கோலப் போட்டி

நீடாமங்கலம் பேரூராட்சி 8 மற்றும் 9 -வது  வார்டுகளில் பொங்கல் விழாவை முன்னிட்டு, வண்ணக் கோலப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வீடுகளில்  வண்ணக் கோலங்களை வரைந்தனர். போட்டிகளின் நடுவர்களாக கதிரவன், செல்வராஜ், சந்தானராமன் ஆகியோர் இருந்தனர்.

இப்போட்டியில் முதலிடம் வித்யாவும், 2-வது பத்ம. சித்ரா, 3-வது சுவேதா, 4-வது விஜயா முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ. 1500, ரூ. 1000, ரூ. 500, ரூ. 300 மதிப்பிலான சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி உறுப்பினர் துரை. ஆசைத்தம்பி, திமுக இளைஞரணி அப்பு, தியாகராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 


Page 49 of 841