Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருவிதாங்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா

Print PDF

தினமணி            16.01.2014

திருவிதாங்கோடு பேரூராட்சி  அலுவலகத்தில் பொங்கல் விழா

திருவிதாங்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

 விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் கலா கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வி.வி. வினிதா முன்னிலை வகித்தார்.

 அலுவலக வளாகத்தில் பொங்கலிடப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

 இதில், பேரூராட்சி உறுப்பினர்கள் பி.தங்கராஜ், பால்ராஜ், ஜெயா, ராதாகிருஷ்ணன், ஐயப்பன், ராஜேந்திரன், கலா, ஜெயபாரதி ஜெயலட்சுமி, தக்கலை ஒன்றிய பாஜக பொதுச் செயலர் என்.கோபாலகிருஷ்ணன், பேரூர் பாஜக தலைவர் எஸ்.பி. தேவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருள்கள்

Print PDF

தினமணி            14.01.2014

துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருள்கள்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்புப் பொருள்களை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் திங்கள்கிழமை வழங்கினார்.

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேயர் செ.ம.வேலுசாமி தலைமை வகித்தார். ஆணையர் க.லதா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, சேலஞ்சர் துரை, எம்.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சியில் பணியாற்றும் 2,909 துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.7.28 லட்சம் மதிப்பிலான பொங்கல் சிறப்பு பொருள்கள் வழங்கப்பட்டன.

பொங்கல் சிறப்புப் பொருள்களை வழங்கி, வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் பேசியது:

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருள்கள் வழங்குவதுபோல், தமிழகத்தில் முதன் முறையாக மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது என்றார்.

மேயர் செ.ம.வேலுசாமி பேசியது: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 2,909 துப்புரவு பணியாளர்களுக்கும் நடப்பாண்டு முதல் ரூ.7.28 லட்சம் மதிப்பில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய், பாசி பருப்பு, கரும்பு, மஞ்சள் ஆகியவை ரூ.250 மதிப்பில் வழங்கப்படுகிறது.

மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிப்பதற்காக ரூ.14.99 லட்சம் மதிப்பில் 2 சிறப்பு வாகனங்கள் வாங்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் அதன் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மாநகராட்சியில் பணியாற்றிய பணியாளர்களின் வாரிசுகள் 200 நபர்களுக்கு கருணை அடிப்படையில் இது வரை வேலை நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொது பிரிவில் நேரடி நியமனமாக 22 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் கே.ஏ.ஆதிநாராயணன், கே.ஆர். ஜெயராம், பி.சாவித்திரி, பி.ராஜ்குமார் எம்.பெருமாள்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா

Print PDF

தினமணி            14.01.2014

குமாரபாளையம் நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

பள்ளியில் வண்ண வண்ண கோலமிட்ட மாணவிகள், ஆசிரியைகள் மாவிலைத் தோரணம் கட்டி கதிரவனுக்கு பொங்கல் படையல் இட்டனர்.

நிகழ்ச்சியில், பொங்கல் திருநாளின் சிறப்பு, தமிழர் வரலாறு, பண்பாடுகளை தலைமையாசிரியை சி.கெüசல்யாமணி விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பொங்கலின் சிறப்பை விளக்கும் பாடல், பேச்சு, நடனம், கவிதைப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. கணித ஆசிரியர் வெ.வடிவேல் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

 


Page 50 of 841