Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் தொங்கும் பூங்காவில் முழுமையாக செயல்பட துவங்கியது

Print PDF

தினகரன்             06.01.2014

சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் தொங்கும் பூங்காவில் முழுமையாக செயல்பட துவங்கியது

சேலம், : சேலம் மாநகராட்சி மைய அலுவலகம், தொங்கும் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட தற்காலிக அலுவலகத்தில் முழுமை யாக செயல்பட துவங்கியது.

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகம், நூற்றாண்டு பழமை வாய்ந்த பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நிர்வாக திறன் அதிகரித்ததன் காரணமாக அலுவலக கட்டடங்களில் இட பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து புதிதாக மாநகராட்சி அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ7.68 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.

இந்த நிதி மூலம் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. இதையடுத்து பழைய மாநகராட்சி கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணி துவங்கப்படவுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சியின் மேயர் அறை, ஆணையாளர் அறை, பொறியியல் பிரிவு, சிறப்பு திட்டப்பிரிவு, சுகாதாரப்பிரிவு, கணக்குபிரிவு, நிலஅளவை பிரிவு, கருவூலம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் தற்காலிக அலுவலகமான தொங்கும் பூங்கா கட்டடத்திற்கு இடமாற்றப்பட்டது.

தற்காலிக மாநகராட்சி மைய அலுவலகம் செயல்படுவதற்காக, தொங்கும் பூங்காவின் பழைய கட்டடங்கள் அனைத்தும் ரூ50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது அந்த கட்டடங்களில் மேயர், ஆணையாளர் அலுவலகம், சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களும் முழுமையாக செயல்பட துவங்கியுள்ளது.

இனிமேல் மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும், பொதுமக்கள் தொங்கும் பூங்கா அலுவலகத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதே போல் செவ்வாய் கிழமை தோறும் நடக்கும் மேயரின் மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மாதாந்திர மாமன்ற கூட்டம் ஆகியவையும் இனி தொங்கும் பூங்கா அலுவலகத்தில் நடக்கவுள்ளது.

 

காரப்பாக்கம் பகுதியில் ஆதார் அடையாள அட்டை பணிக்காக சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

காரப்பாக்கம் பகுதியில் ஆதார் அடையாள அட்டை பணிக்காக சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை மாநகராட்சி மண்டலம்-11, வார்டு எண் 150-க்கு உட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில் ஆதார் அடையாள அட்டை பணி தொடர்பாக புகைப்படம், கைரேகை மற்றும் விழித்திரை விவரங்கள் பதிவு செய்வதற்காக கீழ்கண்ட இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

சிவபூதம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மகளிர் குழு கட்டிடம், சிவபூதமேடு பகுதியில் உள்ள மகளிர் குழு கட்டிடம், செட்டியார் அகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அப்பாதுரை பிள்ளை தெருவில் உள்ள திரு.வி.க.நகர் நூலக கட்டிடம், சந்தோஷ்பாய் தெருவில் உள்ள பரசுநாத் நகர் பூங்கா நூலக கட்டிடம், ராஜேஸ்வரி நகர் 2-வது தெருவில் உள்ள விளையாட்டு திடல் கட்டிடம், ஜெயா நகர் ஜெயவிநாயகர் கோவில் தெருவில் உள்ள சரஸ்வதி கான்வென்ட், பள்ளிக்கூட தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள பொன்னியம்மன் கோவில் கட்டிடம் மற்றும் பொன்னி நகர், கம்பர் தெருவில் உள்ள கிரேஸ் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

தெற்கு தில்லி மாநகராட்சியில் ஆப்கன் மேயர்கள்

Print PDF

தினமணி             04.01.2014 

தெற்கு தில்லி மாநகராட்சியில் ஆப்கன் மேயர்கள்

தெற்கு தில்லி மாநகராட்சி தலைமை அலுவலகத்தை ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 மேயர்கள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர். அவர்கள் தெற்கு தில்லி மாநகாரட்சி மேயர் சரிதா செüத்ரி, ஆணையர் மணீஷ் குப்தா ஆகியோர் வரவேற்றனர்.

அப்போது மாநகராட்சியின் செயல்பாடுகள், திட்டங்கள், நிர்வாக முறைகள் ஆகிவயற்றை அவர்கள் கேட்டறிந்தனர். மாநகராட்சி மேற்கொண்டு வரும் சுகாதார நடவடிக்கைகள், பூங்கா பராமரிப்பு, மின் ஆளுகை திட்டங்கள் குறித்து மேயர் சரிதா செüத்ரி அவர்களுக்கு  விளக்கிக் கூறினார்.

 


Page 53 of 841