Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காரமடை பேரூராட்சியில் அம்மா திட்ட முகாம்: 362 பேருக்கு சான்றிதழ்

Print PDF

தினமணி             04.01.2014

காரமடை பேரூராட்சியில் அம்மா திட்ட முகாம்: 362 பேருக்கு சான்றிதழ்

காரமடை பேரூராட்சியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து 461 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 362 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

மேட்டுப்பாளையம் வருவாய்த் துறை சார்பில், காரமடை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமிற்கு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். காரமடை ஒன்றியக் குழுத் தலைவர் ராஜ்குமார், சமூக நலப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் டி.டி.ஆறுமுகசாமி வரவேற்றார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இம்முகாமில், காரமடை பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டு பகுதி மக்களிடமிருந்து 461 மனுக்கள் பெறப்பட்டு, 362 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உரிய ஆய்விற்கு பின்னர் நிலுவையிலுள்ள மனுக்களுக்கும் தீர்வு காணப்படும் எனதெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில வேளாண் திட்டக் குழு உறுப்பினர் டி.கே.துரைசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் நிரிஜாமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள் கந்தசாமி, கண்ணப்பன், முத்துசாமி, ராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரத்தினம், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை வட்டாட்சியர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

 

பல்லடம் நகராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்                03.01.2014

பல்லடம் நகராட்சி கூட்டம்

பல்லடம்,: பல்லடம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வைஸ்.பி.கே.பழனிச்சாமி, ஆணையாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: சித்திக்(திமுக): எனது வார்டில் பட்டேல் வீதிக்கு பச்சாபாளையம் பகுதியில் இருந்து தண்ணீர் தர மறுக்கின்றனர். வார்டுக்கு தலா 5 தெருவிளக்கு அமைத்து தருவதாக கூறி ஒரு ஆண்டு ஆகிறது. இன்னும் தெருவிளக்கு அமைத்து தரவில்லை.

சண்முகம்: எனது வார்டில் சுகாதார பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மேற்கு பல்லடத்தில் உள்ள மேல்நிலைத்தொட்டியில் இருந்து 13வது வார்டு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

கிருஷ்ணக்குமார்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை நகராட்சி முன்புறம் அமைக்க வேண்டும் எனக் கூறி ஆணையாளர் நாராயணனிடம் கடிதம் கொடுத்தார். பின்னர் அது, அனைவரின் ஒப்புதலுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தலைவர் சேகர்: சுகாதார பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். அத்திக்கடவு 3ம் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுகிறது. அந்த பணி முடிந்தவுடன் அனைத்து வார்டுக்கும் குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கப்படும். மேலும் அண்ணா வணிக வளாகத்தின் மேல் தளத்தில் 40 கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கடைசி கூட்டத்தில் பல்லடம் முதல் நிலை நகராட்சி சராசரி வருமானம் ரூ.7கோடியாக உள்ளதால் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அரசுக்கு கருத்துரு அனுப்புவது உள்ளிட்ட 59 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Saturday, 04 January 2014 05:09
 

அம்மா உணவகத்திற்கு ஒரு நாள் செலவு ரூ.11 ஆயிரம்

Print PDF

தினகரன்                03.01.2014

அம்மா உணவகத்திற்கு ஒரு நாள் செலவு ரூ.11 ஆயிரம்

மதுரை, : அம்மா உணவகம் ஒவ்வொன்றுக்கும் தினமும் மாநகராட்சி நிதி ரூ.11 ஆயிரம் வீதம் ஒதுக்கப்பட்டு  செலவிடப்படுகிறது.

மதுரையில் 10 இடங்களில் அம்மா உணவகம், மாநகராட்சி பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இயங்கி வருகிறது. ஒரு உணவகத்தில் தினமும் காலையில் 1,200 இட்லி, மதியம் 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இதற்காக ஒரு உணவகத்திற்கு தினமும் ரூ.11 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் மாநகராட்சி செலவிடுகிறது.

இதில் ஒரு உணவகத்தில் ரூ. 3 ஆயிரத்து 600 வருவாய் வருகிறது. உணவகத்திற்கான அனைத்து செலவுகளும் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ஒதுக்கப்படுகிறது.

இந்தலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவம¬னையில் அம்மா உணவகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கு உணவகம் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதுவும் மாநகராட்சி பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது. இதன் திறப்பு எப்போது? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 


Page 55 of 841