Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி

Print PDF

தினமணி              31.12.2013

மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி

மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்த மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கோவை மாநகராட்சி மாமன்றத்தின் அவசரக் கூட்டம், மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மேற்கு மண்டலத் தலைவர் சாவித்ரி பார்த்திபன் பேசுகையில், ""மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் வயதான நபர்கள், மலையில் படி ஏற சிரமப்படுகின்றனர். எனவே, ரோப் கார் வசதி ஏற்படுத்திட வேண்டும்'' என்றார்.

 இதற்கு பதில் அளித்து மேயர் செ.ம.வேலுசாமி பேசுகையில், ""மருதமலை கோயிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்தின் கொண்டு செல்லப்படும்'' என்றார்.

 அதைத் தொடர்ந்து, மருதமலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

 46 தீர்மானங்கள் நிறைவேற்றம்:  மாநகராட்சி அவசர கூட்டத்தில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்தால் ரூ.1 லட்சம் அபராதம், பிளாஸ்டிக் பொருட்களை சாக்கடையில் போட்டால் அபராதம், மாநகராட்சி பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்தல் உள்பட மொத்தம் 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமணி              31.12.2013

ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கூட்டம்

திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. தலைவர் சிராஜ்நிஷா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசிக்குமார், செயல் அலுவலர் வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் கோகிலா: எனது வார்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. ஆனால் எனக்கு எதுவும் தெரிவிக்காமல் நடைபெறுகிறது. அவசர அவசரமாக பணிகள் நடந்துள்ளது. முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. 

செயல் அலுவலர் வீரன்: இனி தகவல் தெரிவிக்கப்படும்.  

கவுன்சிலர் கந்தசாமி: பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்காமல் இன்னும் அனுமதி வழங்குவது ஏன்?

கவுன்சிலர்களிடம் திட்ட அனுமதி வாங்க கொடுக்கப்படும் அஜென்டாவில் செலவின தொகை, திட்ட எண்ணிக்கை ஆகியவை மறைக்கப்பட்டுள்ளன.

முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு விவாதங்கள் நடந்தன.

 

குரூப் 1 தேர்வு: மாநகராட்சி இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி              31.12.2013

குரூப் 1 தேர்வு: மாநகராட்சி இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி மாநகராட்சி சார்பில் அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

 இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: 79 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றிபெற ஏதுவாக சென்னையில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது.

 இதன் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சியை சென்னை மாநகராட்சி கட்டணமில்லாமல் அளித்து வருகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்பும், சென்னை மாநகராட்சிக்குள் படித்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படும்.

 இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், www.chenn​ai​corpor​ation.gov.in​ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பயிற்சி நடைபெறும் சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 58 of 841