Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

"அம்மா உணவகங்களில் 4 கோடி இட்லி விற்பனை

Print PDF

தினமணி              30.12.2013

"அம்மா உணவகங்களில் 4 கோடி இட்லி விற்பனை

அம்மா உணவகங்களில் 1 ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 4 கோடி இட்லி விற்பனையாகியுள்ளது என்று அதிமுக பேச்சாளர் கோபி.காளிதாஸ் கூறினார்.

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில், அவர் மேற்கண்டவாறு பேசினார்.

கூட்டத்துக்கு கட்சியின் தொகுதிச் செயலர் என்.முனுசாமி தலைமை தாங்கினார்.

கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் சி.ஏழுமலை, எம்எல்ஏ அ.முகமது ஜான், மேயர் பா.கார்த்தியாயினி, நகர்மன்றத் தலைவர்கள் வேதகிரி (வாலாஜா), சித்ரா சந்தோஷம் (ராணிப்பேட்டை), பி.அப்துல் ரஹ்மான் (மேல்விஷாரம்), கட்சியின்  ஒன்றியச் செயலர் எம்.சி பூங்காவனம், நகரச் செயலர்கள் மோகன் (வாலாஜா), ஜே.பி.சேகர் (ராணிப்பேட்டை), ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலர் வி.முரளி, இணைச் செயலர் கே.பி.சந்தோஷம், நகர்மன்ற உறுப்பினர்கள் கீதா சேகர், மணிமேகலை, முன்னாள் உறுப்பினர் தியாகராஜன், எம்ஜிஆர் மன்றத்தின் நகரத் தலைவர் என்.சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

திருவண்ணாமலையில் ஜனவரி 3 முதல் 7 வரை ஆதார் அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம்

Print PDF

தினமணி              30.12.2013

திருவண்ணாமலையில் ஜனவரி 3 முதல் 7 வரை ஆதார் அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம்

திருவண்ணாமலை நகராட்சியில் இரண்டாம் கட்டமாக ஜனவரி 1 முதல் 7 வரை ஆதார் அடையாள அட்டைக்கான விவரங்கள் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்கெனவே நடைபெற்றன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக பொதுமக்களின் கைரேகை, விழித்திரை, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யும் முகாம் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 1, 2, 3-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜனவரி 3 முதல் 7 வரை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது விவரங்களை அளிக்கலாம்.

இதேபோல, 4 மற்றும் 5-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜனவரி 3 முதல் 7 வரை தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், 6 மற்றும் 7-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பே கோபுரத் தெருவில் உள்ள நகராட்சிப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொண்டு தங்களது கைரேகை, விழித்திரை, புகைப்படங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

தேசிய அடையாள அட்டை என்பது எதிர்காலத்தில் மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படும் மிக முக்கியமான அடையாள அட்டை.

 எனவே, முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று நகராட்சி ஆணையாளர் பெ.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

 

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Print PDF

தினமணி              30.12.2013

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

களம்பூர் பேரூராட்சி சார்பில் பஜார் வீதியில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு குறித்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 களம்பூர் பேரூராட்சி சார்பில் பஜார் வீதியில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு குறித்த விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜராணி முன்னிலை வகித்தார்.

 இதில் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, ஏடிஸ் கொசு பற்றியும், இதனால் ஏற்படும் நோய் குறித்தும் திருச்சி கலைக் குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 


Page 60 of 841