Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருச்சியில் மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

Print PDF

தினமணி              30.12.2013

திருச்சியில் மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

திருச்சி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகே சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி வரும் திங்கள்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளன.

  தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். இதில் ஏழை, எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான சுய தொழில் பயிற்சி, தொழில் தொடங்குவதற்கான மானியம், கடனுதவி வழங்கும் வங்கிகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

  மேலும், மகளிர் குழுக்களின் உற்பத்திப் பொருள்களும் ஏராளம் வைக்கப்பட்டிருக்கின்றன. கண்காட்சி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

  சனிக்கிழமை மாலை இந்தக் கண்காட்சியை மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, அரசுத் தலைமைக் கொறடா ஆர். மனோகரன், மேயர் அ. ஜெயா, மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன், மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மு. பரஞ்ஜோதி, மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாராட்டினர்.

 

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட முனிசிபல் காலனியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 31-ந்தேதி தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி            28.12.2013

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட முனிசிபல் காலனியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 31-ந்தேதி தொடங்குகிறது

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

2-வது கட்டமாக

கடந்த 2010 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு புகைப்படம் எடுக்கும் பணி ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எடுக்காமல் விடுபட்டவர்களுக்காக மீண்டும் புகைப்படம் எடுக்கும் பணி 2-வது கட்டமாக ஈரோடு மாநகராட்சி சார்பில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக நடந்து வருகிறது.

இதில் திண்டல் பகுதியில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து முடிந்து விட்டது. தற்போது திருநகர் காலனி பகுதியில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

31-ந்தேதி தொடங்குகிறது

இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மரப்பாலம், முனிசிபல் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கான புகைப்படம் எடுக்கும் பணி வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

இந்த பணி தொடர்ந்து வருகிற 5-ந்தேதி வரை பழைய வார்டு எண் அடிப்படையில் நடக்கிறது. புகைப்படம் எடுக்கும் இடம் மற்றும் பழைய வார்டு எண் ஆகியவை விவரம் வருமாறு:-

மரப்பாலம் பகுதி

பழைய 7-வது வார்டுக்கு உள்பட்ட அரசிளங்கோ வீதி, ஆறுமுகம் வீதி, அய்யம்பெருமாள் சந்து, குமணன் வீதி, மரப்பாலம் ரோடு வீதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, மருதவீராசாமி கோவில் சந்து, முத்துக்கருப்ப சந்து, பழனிசந்து, பரசுராம சந்து, தொப்பையர் சந்து, வையாபுரி சந்து, வீரப்ப வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

பழைய 8-வது வார்டுக்கு உள்பட்ட காவிரி ரோடு, கரிகாலன் வீதி, கிருஷ்ணமூர்த்தி தோட்டம் வீதி 1, 2, 3, 4, மரப்பாலம் மெயின்ரோடு, புதுக்காவிரி ரோடு, ஓங்காளியம்மன் கோவில் வீதி, பச்சியப்பா சந்து, பெரிய மாரியம்மன் கோவில் வீதி, ராஜராஜன் வீதி, ரங்கநாதன் வீதி 1, 2 ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

10, 11-வது வார்டு

பழைய 10-வது வார்டுக்கு உள்பட்ட காந்திபுரம் வீதி 1, 2, 3, கே.என்.கே. ரோடு மற்றும் கே.என்.கே. ரோடு வீதி 3, சுப்பையன் வீதி, பழைய 11-வது வார்டுக்கு உள்பட்ட மில் வீதி, வரகப்பா வீதி, ராஜாஜிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கூடம், ராஜாஜிபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கூடம் ஆகிய 2 இடங்களிலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

முனிசிபல் காலனி

பழைய 12-வது வார்டுக்கு உள்பட்ட எ.பி.டி. ரோடு மற்றும் 1-வது வீதி, ஈ.வி.கே.சம்பத் சாலை, கோவலன் வீதி, கிருஷ்ணன் வீதி, செங்கோட சந்து, வி.சி.டி.வி. மெயின் ரோடு, வீதி 1, 2, 3, 4, 5, மற்றும்

பழைய 13-வது வார்டுக்கு உள்பட்ட அண்ணாமலை லே அவுட், கிருஷ்ணசாமி வீதி, முனிசிபல் காலனி ரோடு வீதி 1, 2, 3, 4, 5, பாப்பாத்திக்காடு வீதி 1, 2, திரு.வி.க. ரோடு, எல்.ஐ.ஜி.எச். காலனி 1-வது வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

புகைப்படம்

பழைய 14-வது வார்டுக்கு உள்பட்ட அகில்மேடு வீதி 4, 5, 6, 7, ஈ.வி.என். ரோடு, கண்ணகி வீதி, காசியண்ண வீதி, முனியப்பன் கோவில் வீதி, வடக்கு ஈஸ்வரன் கோவில் வீதி, கண்ணகி வீதி குறுக்கு சந்து ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

பழைய 15-வது வார்டுக்கு உள்பட்ட அகில் மேடு வீதி 1, 2, 3, கிழக்கு பெருமாள் கோவில் வீதி, முத்துசாமி வீதி, நாச்சியப்பா வீதி 1, 2, நேரு வீதி, பழனி மலை வீதி, பழனி மலை வீதி குறுக்கு சந்து ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கும் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. அந்தந்த வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இந்த தகவல் ஈரோடு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

டிச., 31ல் மாநகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர்            27.12.2013 

டிச., 31ல் மாநகராட்சி கூட்டம்

சேலம்: சேலம் மாநகராட்சியின் மன்றக்கூட்டம் டிசம்பர், 31ம் தேதி நடக்கிறது. ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, கடந்த இரு மாதங்களாக, மாநகராட்சி இயல்புக்கூட்டம் நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து, நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின், இம்மாத இயல்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோகன் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமையில், டிசம்பர், 31ம் தேதி செவ்வாய்கிழமை காலை, 11 மணிக்கு, சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், இயல்புக்கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Page 61 of 841