Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பணி நியமன உத்தரவு வழங்கல்

Print PDF

தினமலர் 09.03.2010

பணி நியமன உத்தரவு வழங்கல்

விழுப்புரம் : வளவனூர் பேரூராட்சியில் பணி புரிந்து இறந்த துப்புரவு பணியாளர் மனைவிக்கு பணி நியமன உத்தரவை சேர்மன் சம்பத் வழங்கினார்.

வளவனூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணி புரிந்த பாலசுப்பிரமணியன் கடந்த ஆண்டு மே 14ம் தேதி பணியின் போது இறந்தார். அவரது மனைவி வளர்மதிக்கு கருணை அடிப்படையில் துப்புரவு பணியாளராக ஏற்ற முறை ஊதிய விகிதத் தில் பணி நியமன உத்தரவை சேர்மன் சம்பத் வழங்கினார். துணைத் தலைவர் சரபோஜி, கவுன் சிலர் ஷெரீப், செயல் அலுவலர் கன்னியப்பன் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 09 March 2010 06:17
 

எரிவாயு மாயான பணியை பாதியில் விட்ட காண்ட்ராக்டர் மீது வழக்கு: திண்டுக்கல் நகராட்சி அதிரடி முடிவு

Print PDF

தினமலர் 06.03.2010

எரிவாயு மாயான பணியை பாதியில் விட்ட காண்ட்ராக்டர் மீது வழக்கு: திண்டுக்கல் நகராட்சி அதிரடி முடிவு

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் எரிவாயு மாயான பணியை எடுத்த காண்ட்ராக்டர் மீது நஷ்டஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர திண்டுக்கல் நகராட்சி முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சந்திரசேகர்: திண்டுக்கல் வேடபட்டியில் எரிவாயு மாயானத்தை காண்ட்ராக்ட் எடுத்தவர் மூன்று ஆண்டுகளாக எந்த பணியும் செய்யவில்லை.ஜெயபாலன்: கடந்த 2007ல் காண்ட்ராக்ட் எடுத்தவர் மூன்று ஆண்டுகளாக பணிகளை செய்யாததால், மீண்டும் காண்ட்ராக்ட் விட்டால் பணியின் செலவுத்தொகை அதிகமாகும். அவர் எவ்வளவு பணி செய்தார். அவர் மீது ஏன் நாம் நடவடிக்கை எடுக்கவில்லை.

துணை தலைவர் கல்யாணசுந்தரம்: காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் வைப்பு தொகை வைக்க வேண்டும். தாமதத்திற்கு காரணம் என்ன.தலைவர் நடராஜன்: பழநியில் செயல்படும் எரிவாயு மாயானத்தை நாங்கள் பார்வையிட்டுள்ளோம். இதன் அடிப்படையில் வேடபட்டியில் மாயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பணி 60 லட்சம் ரூபாய்க்கு விடப்பட்டது.

தற்போது வரை 22 லட்சத்திற்கு செக் வழங்கப்பட்டுள்ளது. பணியின் தாமதத்தால் திண்டுக்கல் மக்களின் வரிபணம் விரையமானது குறித்தும், சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் மீது நஷ்டஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இந்த வழக்கு தமிழகத்தில் முன்மாதிரியாக இருக்கும். இதனால் பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதிய ஒப்பந்தத்திற்கு நாம் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

Last Updated on Saturday, 06 March 2010 09:50
 

புத்தர் தெரு நகராட்சி பள்ளி ஆண்டு விழா

Print PDF

தினமணி 06.03.2010

புத்தர் தெரு நகராட்சி பள்ளி ஆண்டு விழா

பவானி, மார்ச், 5. குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 107-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.வாசுதேவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிஎஸ்பி.சந்திரன், பொருளாளர் சிவசக்தி கே.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை வி.முத்தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

தொடக்கக் கல்வி அலுவலர் இளங்கோவன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார் (படம்). பள்ளியில் 100 சத வருகை புரிந்த 20 மாணவ, மாணவியருக்கும், முதல் மதிப்பெண்கள் பெற்ற 16 பேருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிர்வாகிகள் சுகன்ராஜ், மாதேஸ்வரன், சக்திவேல், மகேந்திரன், தண்டபாணி, நாச்சிமுத்து குருசாமி, என்.ஜெகதீஸ், கிராம கல்விக்குழுத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 06 March 2010 06:20
 


Page 641 of 841