Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிப்பு

Print PDF

தினமணி 04.03.2010

மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் அளிப்பு

பெங்களூர், மார்ச் 3: பெங்களூர் மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திடம் அரசு அளித்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது.

பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை மே 15-ம் தேதி வரை ஒத்திவைக்க அவகாசம் கோரி அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் ஏற்கெனவே பிப்ரவரி 11-ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி மார்ச் 30-ம் தேதிக்குள் பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கண்டிப்பாகக் கூறிவிட்டது.

இதையடுத்து மாநகராட்சியின் 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து பட்டியலை கடந்த வாரம் அரசு அறிவித்தது. மேலும் இதில் ஆட்சேபனை தெரிவிக்க பொதுமக்களுக்கு அரசு ஒரு வாரகால அவகாசம் அளித்தது. அதன்படி ஒரு வார காலம் முடிவடைந்தது. இதனால் 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்த பட்டியலை அரசு புதன்கிழமை மாநில தேர்தல் ஆணையத்திடம் அளித்தது.

இனி தேர்தல் ஆணையம் மாநகராட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும். பெங்களூர் மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பிறகு இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்தக் கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் பி.ஆர்.ரமேஷ், ராமச்சந்திரப்பா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உயர் நீதிமன்றமும் தேர்தலை நடத்தும்படி அரசுக்கு 8 முறை உத்தரவிட்டது. ஒவ்வொரு முறையும் தேர்தலை ஒத்திவைக்க கால அவகாசம் கேட்டு வந்தது. இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாநகராட்சி தேர்தலுக்கான கால அட்டவணையை மாநில தேர்தல் அதிகாரி சிக்கமத் அறிவித்தார்.

அதன்படி 2010-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலை எதிர்த்தும், இட ஒதுக்கீடு பட்டியலை எதிர்த்தும் உயர்நீதிமன்றம், பிறகு உச்ச நீதிமன்றம் என இரு நீதிமன்றங்களிலும் மாறி மாறி மாநிலஅரசும், பொதுநலன் வழக்கும் தொடரப்பட்டது. இறுதியில் தேர்தல் நடத்தியே தீர வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து இட ஒதுக்கீடு பட்டிலை அரசு வெளியிட்டுள்ளது.

Last Updated on Thursday, 04 March 2010 09:55
 

கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் பொறுப்பேற்பு

Print PDF

தினமணி 04.03.2010

கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் பொறுப்பேற்பு

காரைக்குடி,மார்ச் 3: கோட்டையூர் பேரூராட்சியில் மூன்றாண்டுகளாக தேக்கமடைந் திருக்கும்பணிகள் அனைத்தும் ஓராண்டிலேயே நிறைவேற்றப்படும் என்று புதிய தலை வராக பொறுப்பேற்றுக்கொண்ட கேஆர். ஆனந்த் தெரிவித்தார்.

காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சியின் புதிய தலைவராக கேஆர். ஆனந்த் போட்டியின்றி கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.26) தேர்ந்தெடுக் கப்பட்டார்.

புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்ட கேஆர்.ஆனந்த் பதவியேற்பு விழா புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் குமரேசன் அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப.துரைராஜ், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுப. முத்துராமலிங்கம், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் எஸ்.முத்துத்துரை, கோட்டையூர் பேரூராட்சி துணைத்தலைவர் உ. உடையப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.

தலைவராக பதவியேற்றுக்கொண்ட பின் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியது:

கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.70 லட்சத்தில் பல்வேறு பணிகள் நிறைவேற்றப் படும். அதில் குடிநீர், மின்விளக்கு, பூங்கா மற்றும் சாலைவசதிகள் அடங்கும். கடந்த மூன்றாண்டுகளாக முடங்கிவிட்ட பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.

Last Updated on Thursday, 04 March 2010 09:47
 

குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு: செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 04.032010

குடிநீர் வரி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு: செயல் அலுவலர் எச்சரிக்கை

முசிறி: முசிறியில் குடிநீர் வரி கட்டாதவர்களின் வீடுகளில் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முசிறி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2009-10ம் ஆண்டிற்குரிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரியை ஆகியவற்றை 1 முதல் 18 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மறு இணைப்பு 6 மாதத்திற்கு வழங்கப்படமாட்டாது. மேலும் முசிறி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் பேரூராட்சி அலுவலகத்தில் உடனடியாக செலுத்தி முறையாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 04 March 2010 06:32
 


Page 643 of 841