Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒருவர் கூட விடுபடக்கூடாது: இயக்குனர் கோபாலகிருஷ்ணன் 'அட்வைஸ்'

Print PDF

தினமலர் 04.032010

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒருவர் கூட விடுபடக்கூடாது: இயக்குனர் கோபாலகிருஷ்ணன் 'அட்வைஸ்'

அணைக்கட்டு:மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள், ஒருவரைக்கூட கணக்கில் இருந்து விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று செயற்கைகோள் ஒளிப்பரப்பு மூலம் நடந்த பயிற்சியில் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்திய மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2001ல் கணக்கெடுக்கப்பட்டது. இதனையடுத்து வரும் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. அதற்கு முன் ஏற்பாடாக நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்.இந்த பணி ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது.

இது தொடர்பாக வருவாய் துறையினருக்கு பொறுப்பு பதிவேடு கையாளும் விதம் குறித்து பயிற்சியை செயற்கைகோள் வழியாக தமிழகம் முழுவதும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன், உதவி இயக்குனர்கள் சின்னதுரை, புவணேஸ்வரி ஆகியோர் பயிற்சியளித்தனர்.இயக்குனர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:

கணக்கெடுப்பு பணி சரியாகவும், முறையாகவும் செய்ய வேண்டும். பணியில் ஈடுபடுபவர்கள் அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் கணக்கெடுப்பு குறித்து மக்களிடம் தெளிவாக கூறமுடியும். அவர்களும் புரிந்துகொண்டு, சரியான தகவல் அளிப்பார்கள்.கணக்கெடுப்பு பணி நடத்துவற்தகு முன்பு முதலில் கிராமம், நகரம், மாநகரம் என பிரிக்கவேண்டும்.

பின்னர் வார்டு வாரியாக 150 வீடுகள் அல்லது மக்கள் தொகையில் 750 என சூழ்நிலைக்கு ஏற்ப கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தவேண்டும்.மக்கள் தொகை கணக்கு எடுக்கும் போது ஒரு இடத்தில் ஆறு மாதத்திற்கு மேல் உள்ளவர்களை மட்டுமே சேர்த்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒருவர் கூட கணக்கெடுப்பில் இருந்து விடபடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வள மையத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு, சென்னை மக்கள் தொகை கணக்கொடுப்பு அலுவலக முதுநிலை மேற்பார்வையாளர் முருகன் தலைமை வகித்தார். பிடிஓ., ரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன், மண்டல துணைத் தாசில்தார் அன்பு, ஆர்ஐ.,க்கள் சுமதி, சேகர், பூமா, வி..., ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிதம்பரநாதன் வரவேற்றார்.பயிற்சியில், அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா உள் வட்டத்தை சேர்ந்த விஏஓ., க்கள் கலந்து கொண்டனர். வட்டார வள மைய பயிற்றுநர்கள் பிரேம்குமார், ஜெயக்குமார், கண்ணியப்பன், மகேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் ஒளிப்பரப்பு பணிகளை செய்தனர்.விஏஓ., சிவகுமார் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை வட்டார வள மைய பயிற்றுநர்கள் மற்றும் வருவாய் துறையினர் செய்திருந்தனர

Last Updated on Thursday, 04 March 2010 06:31
 

கோவை மாநகராட்சி மார்க்கெட் கட்டணங்கள் குறைப்பு

Print PDF

தினமணி 03.03.2010

கோவை மாநகராட்சி மார்க்கெட் கட்டணங்கள் குறைப்பு

கோவை, மார்ச் 2: வியாபாரிகள், விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள், சரக்குகள் கொண்டுவரும் வாகனங்ளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியின் தடாகம் சாலை வாழைக்காய் மண்டி, மேட்டுப்பாளையம் சாலை அண்ணா தினசரி மார்க்கெட், எம்ஜிஆர் மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட்களுக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கட்டணம் உயர்த்தப்பட்டது.

வியாபாரிகள், விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து , தற்போது இந்த மார்க்கெட்களுக்கு வரும் லாரிகள் நடை ஒன்றுக்கு ரூ.35, வேனுக்கு ரூ.20, ஆட்டோவுக்கு ரூ.10, மாட்டு வண்டிக்கு ரூ.6 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தவிர இருசக்கர வாகனங்கள், சைக்கிள் ஆகியவற்றுக்கு ரூ.2 என வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்மீது பேசிய மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் சி.பத்மநாபன், "மாநகராட்சி மார்க்கெட் பராமரிப்பை ஏலம் விடுவதற்குப் பதிலாக மகளிர் குழு அல்லது தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கலாம்' என்றார்.

இதே கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் குழுத் தலைவர் புருஷோத்தமனும் வலியுறுத்தினார். வியாபாரிகள், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கட்டணத்தை குறைத்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் வெ..உதயகுமார் நன்றி தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 03 March 2010 09:36
 

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாநகராட்சி நிர்வாகம் ஆயத்தம்!

Print PDF

தினமலர் 03.03.2010

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாநகராட்சி நிர்வாகம் ஆயத்தம்!

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் எடுக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, ஒவ்வொரு வார்டிலும் வீதிதோறும் உள்ள வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக் கெடுக்கப்படும். அதன்படி, இந்தாண்டு கணக்கெடுப்பு நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, மாநிலங்களில் வருவாய் எல்லைகள்; காவல்துறை எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது; புதிய தாலுகா, போலீஸ் ஸ்டேஷன்கள் உரு வாக்கக் கூடாது என தடை விதிக்கப் பட்டுள்ளது. 2011 மார்ச் மாதம், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைய உள்ளது. அதுவரை, இந்நிலையே நீடிக்கும்.திருப்பூரில் மக்கள் தொகை கணக் கெடுப்புக்காக, மாநகராட்சி நிர் வாகம் ஆயத்த பணியை துவக்கி உள்ளது. அப்பணிக்கு தேவைப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பட்டி யல் தயாரிக்கப்படுகிறது. இதுதொடர் பாக, மாநகராட்சி பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கணக்கெடுப்பு பணிக்கான ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த 2001 மக்கள் தொகை கணக் கெடுப்புப்படி, மாநகராட்சி பகுதி யில் மூன்று லட்சத்து 51 ஆயிரத்து 501 பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டது. 2007ல் இந்நகர மக்கள் தொகை நான்கு லட்சத்து 32 ஆயிரம் என தோராயமாக மாநகராட்சி கணக்கிட்டுள்ளது. பின்ன லாடை தொழில் நகரமான திருப் பூரில், வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக் கானவர்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். தற்போது, இந்நகர மக்கள் தொகை ஆறு லட்சத்துக்கும் கூடுதலான இருக்க வாய்ப்புள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஊழியர்களை அனுப்பு வதற்கு முன்னதாக, வீதிதோறும் உள்ள வீடுகள் பற்றிய கணக்கெடுப் பில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. 150 வீடுகளுக்கு ஒரு கணக்கெடுப்பாளர் நியமிக்க வேண்டும். அல்லது, 600 முதல் 750 மக்களுக்கு ஒரு கணக் கெடுப்பாளரை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆறு கணக்கெடுப்பாளர்களை கண் காணிக்க, ஒரு மேற்பார்வையாளர் வீதம் நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 540 கணக்கெடுப்பாளர்கள்; 90 மேற்பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும். ஆனாலும், திருப்பூர் பகுதியில் மக்கள் தொகை அதிக ளவில் காணப்படுவதால், கூடுதலாக 100 ஊழியர்கள் நியமிக்க வாய்ப்புள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப் படும்; ஜூன் மாதமே கணக்கெடுப்பு பணி துவங்கும்.

Last Updated on Wednesday, 03 March 2010 06:56
 


Page 644 of 841