Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வைகையில் கழிவுகளை கொட்டினால் அபராதம் கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 03.03.2010

வைகையில் கழிவுகளை கொட்டினால் அபராதம் கமிஷனர் எச்சரிக்கை

மதுரை:""வைகையாற்றில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் எச்சரித்து உள்ளார்.வடக்குமண்டலத்தில் ஒன்று முதல் 21 வது வார்டு பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது :

வைகை ஆறு தற்போது சுத்தம் செய்யப்படுகிறது. ஆற்றின் கரையோரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீரை கொட்டி, மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் மாடுகளைத் திரிய விடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பழுடைந்துள்ள லாரிகள் விரைவில் சரிசெய்யப்பட்டு, அவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார். மேயர் தேன்மொழி, மண்டலத் தலைவர் இசக்கிமுத்து, தலைமை பொறியாளர் சக்திவேல், முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி கமிஷனர்கள் (வருவாய்) பாஸ்கரன், ராஜகாந்தி, நிர்வாகப் பொறியாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர். ஆக்கிரமிப்பு அகற்றுதல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல், குடிநீர், அடிப்படை வசதிகளை கோரிய பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டது

Last Updated on Wednesday, 03 March 2010 06:49
 

ஏப்ரல் முதல் சென்ட்ரல் மார்க்கெட் புதிய இடத்தில் செயல்படும் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 03.03.2010

ஏப்ரல் முதல் சென்ட்ரல் மார்க்கெட் புதிய இடத்தில் செயல்படும் மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை : மதுரை மாநகராட்சி வருவாய் இனங்கள் நிலுவை வசூல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், கமிஷனர் செபாஸ்டின் தலைமையில் நடந்தது. தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் ஆர்.பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்திற்குப் பின் கமிஷனர் கூறியதாவது:

நிலுவை வரியை வசூலிக்க, ஒவ்வொரு வார்டுக்கும் உதவி பொறியாளர் தலைமையிலான குழு தீவிர வசூல் செய்கிறது. மீனாட்சி பஜார், பாண்டி பஜார், பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள மாதாந்திர வாடகை கடைகளுக்கான நிலுவை தொகையும் வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு இந்த மாதத்துடன் உரிமம் முடிவதால், நிலுவை தொகையை செலுத்தினால் மட்டுமே அடுத்த ஆண்டிற்கு உரிமம் புதுப்பிக்கப்படும்.மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடக்கிறது. சாலை, குடிநீர், சாக்கடை வசதிகளும் இம்மாதத்திற்குள் அமைக்கப்பட்டு விடும். ஏப்ரல் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் மு..அழகிரி மார்க்கெட்டை திறக்கிறார்.தற்போது சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடை உரிமையாளர்களுக்கே கடைகள் ஒதுக்கப்படும். தரைக்கடைக்காரர்களுக்கு டெபாசிட் தொகை, நிர்ணயம் செய்யப்பட்டு, அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கே ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கப்படும். டெபாசிட் தொகை செலுத்தினால் மட்டுமே கடைகள் ஒதுக்கப்படும். கடை உரிமையாளர்களுக்கு, பிரச்னை ஏற்படாத வகையில், மாநகராட்சி மூலம் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Wednesday, 03 March 2010 06:42
 

வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

மாலை மலர் 02.03.2010

வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்; மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

மதுரை, மார்ச். 2- மதுரை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 1 முதல் 21 வரையிலான வார்டு பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சி மேயர் தேன்மொழி தலைமையில் ஆணையாளர் செபாஸ்டின் முன்னிலையில் இன்று காலை மாநகராட்சி கல்தூண் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கோருதல், குடிநீர் மற்றும் சாக்கடை அடிப்படை வசதிகள் குறித்து 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொது மக்கள் சார்பாக மேயரிடம் வழங்கப்பட்டன. மேயர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக செல்லூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் 85 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் திறந்து வைக்கப்படும். தொடர்ந்து மாநகராட்சி லாரிகள் நிறுத்துமிடத்தினை பார்வையிட்டு பழுதடைந்துள்ள குப்பை மற்றும் குடிநீர் லாரிகளை உடனடியாக பழுது நீக்கம் செய்யுமாறு தெரிவித்தார்.

வைகை ஆற்றினை பார்வையிட்ட கமிஷனர் செபாஸ்டின் கூறும்போது, வைகை ஆறு தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வைகை ஆற்றின் கரையோரங்களில் குப்பைகள் மற்றும் கழிவு நீரினை கொட்டி ஆற்றினை மாசுப்படுத்துவோர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் மாடுகளை திரியவிடுபவர்கள் மீதும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பழுதடைந்துள்ள லாரிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து சீரான முறையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் இசக்கிமுத்து, தலைமை பொறியாளர் சக்திவேல், முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி ஆணையாளர் (வருவாய்) பாஸ்கரன், உதவி ஆணையாளர் (வடக்கு) ராஜகாந்தி, நிர்வாக பொறி யாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 02 March 2010 11:49
 


Page 645 of 841