Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சத்துவாச்சாரி நகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 01.03.2010

சத்துவாச்சாரி நகராட்சி கூட்டம்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி நகராட்சி கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ஜெயலட்சுமி ஏழுமலை தலைமை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றார். துணைத் தலைவர் ஜானகிராமன், கவுன்சிலர்கள் சிவாஜி, சேகர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.நகராட்சி பகுதிகளில் தென்னை மரம், மாமரம் ஏலம் விட வேண்டும். கடை வாடகை பாக்கிப் பணத்தில் வசூலாகாமல் உள்ள பணத்தை தள்ளுபடி செய்வது, புதியதாக அங்கன்வாடி மையம் கட்டுவது, சிமென்ட் சாலை அமைப்பது, ஆழ் துளை கிணறு அமைப்பது, தடுப்பு சுவர் அமைப்பது, ரங்காபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைப்பது' உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Last Updated on Monday, 01 March 2010 06:42
 

மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு 'கட்'

Print PDF

தினமலர் 01.03.2010

மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு 'கட்'

ஆத்தூர்: "ஆத்தூரில் குடிநீர் குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி நேரடியாக குடிநீரை உறிஞ்சினால், இணைப்பு துண்டிக்கப்படும்' என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் 70 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். காந்தி நகர், கடைவீதி, நாராயணபுரம், உப்பு ஓடை பகுதி என ஐந்து இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். குறைந்தளவு தண்ணீர் வழங்குவதால் சரிவர குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது.

பல மாதங்களாக நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் 15, 20 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர்.கடந்த ஃபிப்ரவரி 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 622.670 லட்சம் லிட்டர் தான் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. சராசரியாக நாள்தோறும் 28.30 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் ஆத்தூர் நகராட்சி பகுதிக்கு வந்துள்ளது. அதனால் நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நீடித்து வருகிறது.இந்நிலையில், "ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வீடுகள், தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அந்நீரை காய்ச்சி கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்."குடிநீர் குழாயில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறுஞ்சினால் நகராட்சி சட்டவிதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்து, நீதிமன்றத்தின் மூலம் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடரப்படும்' என, ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

அய்யலூர் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 01.03.2010

அய்யலூர் பேரூராட்சி கூட்டம்

வடமதுரை:அய்யலூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் சந்தானலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மத்தியாஸ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அய்யலூர் பேரூராட்சி குப்பாம்பட்டி, கொண் ணையம்பட்டி, கெங்கையூர், கஸ்பா அய்யலூர், களர்பட்டி, முத்துநாயக் கன்பட்டி, சந்தைப் பேட்டை ஆகிய ஆறு வார்டுகளைச் சேர்ந்த 1500 ரேஷன் கார்டுகளுக் கென்று அபிராமி நியாய விலைக்கடை உள்ளது. போதிய இட வசதியில்லாத வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் முறைகேடுகளும் நடக்கின்றன.

எனவே இந்த ரேஷன் கடைக்கு சொந்தமான கட்டடம் கட்ட கரூர் எம்.பி., நிதி ஒதுக்க வேண்டும், பராமரிப்பின்றி கிடக்கும் ரயில்வே கேட்முதல், கஸ்பா அய்யலூர், கெங்கையூர் வழியே வைரபிள்ளைபட்டி ரோட் டை செப்பனிட்டு, ஏழு தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Monday, 01 March 2010 06:06
 


Page 648 of 841