Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஆடு, மாடுகளை வீட்டில் கட்டி வளர்க்க பேரூராட்சி அறிவுரை

Print PDF

தினமலர் 26.02.2010

ஆடு, மாடுகளை வீட்டில் கட்டி வளர்க்க பேரூராட்சி அறிவுரை

ஊத்துக்கோட்டை :"ஆடு, மாடுகளை அதன் உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும்' என ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் 10வது வார்டு பஜார் பகுதி மற்றும் முக்கிய சாலைகளில் ஆடு, மாடுகள் தெருக்களில் திரிகின்றன. இதன் உரிமையாளர் கள் அவற்றை வீடுகளில் கட்டி வளர்க்காமல் தெருக்களில் விட்டு விடுகின்றனர்.இவைகள் சாலையோரம் உள்ள காய்கறி, பழம், பூ ஆகிய கடைகளுக்குச் செல்கின்றன. வியாபாரிகள் அவற்றை விரட்டுகின்றனர். இதனால் மாடுகள் மிரண்டு பாதசாரிகள் மீது மோதுகின்றன. சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிரண்டு ஓடும் மாடுகளால் விபத்துக்கு ஆளாகின்றனர்.காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவியர் கடும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இங்குள்ள பஸ் நிலையத்திலும் ஆடு, மாடுகள் ஜாலியாக உலா வருவதால், பஸ்கள் உள்ளே செல்வதற்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் பெரியசாமி உத்தரவின் பேரில், ஒலி பெருக்கி மூலம் ஆடு, மாடுகளை அதன் உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். இல்லையெனில், அடுத்த சில தினங்களில் சாலைகளில் திரியும் ஆடு, மாடுகளை பிடித்து கோ-சாலையில் ஒப்படைக்கப்படும் என எச்சரித் துள்ளனர

Last Updated on Friday, 26 February 2010 09:43
 

மதுரையில் நாய்கள் 'ஓவர்' மேயர் ஒப்புதல்

Print PDF

தினமலர் 26.02.2010

மதுரையில் நாய்கள் 'ஓவர்' மேயர் ஒப்புதல்

மதுரை:""மதுரையில் நாய்கள் கொஞ்சம் ஓவர்,'' என மதுரையில் நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் மேயர் தேன்மொழி ஒப்பு கொண்டார்.நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து நடந்த விவாதம்:

பழனிச்சாமி(மார்க்சிஸ்ட்): மதுரையில் வெறி நாய் தொந்தரவு அதிகரித்து வருகிறது. என் வார்டில் ஏராளமான நாய்கள் திரிகின்றன. மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி ஊழியர்கள், நாய்களை கண்டுகொள்வதில்லை.தம்பித்துரை, கணேசன் (தி.மு..,): எங்கள் வார்டிலும் தெரு நாய்களுடன் வெறி நாய்கள் திரிவது குறித்தும் பல முறை கமிஷனரிடம் முறையிட்டும்

நடவடிக்கை இல்லை.மேயர் தேன்மொழி: மதுரையில் நாய்கள் கொஞ்சம் ஓவர். சில நாட்களுக்கு முன்பு கூட யானைக்கல்லில் பழங்கள் வாங்க சென்ற உறவினரை நாய் கடித்து விட்டது. அவர்கள் என்னிடம் நாய்களை பிடிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். எனவே வெறி நாயோ, தெரு நாயோ...அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.கமிஷனர் செபாஸ்டின்: தெரு நாய்களை பிடித்து அவைகளுக்கு ஊசி போட்டு மீண்டும் அதே இடத்தில் விட்டு விடுகிறோம். அவைகளை காட்டில் கொண்டு விடுவதாக வெளியான செய்தி தவறு. வெறி நாய்களாக இருந்தால் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சுகாதார அலுவலர்: நகரில் 2 ஆயிரம் நாய்களுக்கு ஊசி மருந்து போடப்பட்டது.கணேசன்(தி.மு..,): பொதுப்படையாக இப்படி கூற கூடாது. எனது வார்டில் ஒரு தெரு நாயை கூட அதிகாரிகளோ, ஊழியர்களோ பிடிக்கவில்லை. எந்த வார்டில், எத்தனை நாய்கள், என்னென்ன தேதியில் பிடிக்கப்பட்டது என கூற முடியுமா?
கமிஷனர்: நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது

Last Updated on Friday, 26 February 2010 06:10
 

மாநகராட்சி தேர்தல்: இட ஒதுக்கீடு பட்டியலை அரசு வெளியிட்டது

Print PDF

தினமணி 25.02.2010

மாநகராட்சி தேர்தல்: இட ஒதுக்கீடு பட்டியலை அரசு வெளியிட்டது

பெங்களூர், பிப்.24: நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக மாநகராட்சிக்கு தேர்தலை நடத்த அரசு முன்வந்துள்ளது, இதுதொடர்பாக 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

÷பெங்களூர் மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு அக்டோபர்மாதத்துடன் முடிவடைந்தது. பிறகு இதுவரை மாநகராட்சி மன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்த கர்நாடக உயர்நீதிமன்றம் 8 முறை உத்தரவிட்டும்பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்தே வந்தது.

÷இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அதில் மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டு அப்பீல் செய்தது. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அரசு அப்பீல் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பலமுறை உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் அணுகியும் பயனில்லாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. இதனால் தேர்லை நடத்த முன்வந்துள்ளது. தேர்தலை நடத்த வசதியாக 198 வார்டுகளுக்கும் இட ஒதுக்கீடு செய்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அரசு அறிக்கை வெளியிட்டது.

Last Updated on Thursday, 25 February 2010 11:16
 


Page 650 of 841