Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு

Print PDF

தினகரன்           12.12.2013

கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு

கோவை, : கோவை மாநகராட்சி பள்ளி மாணவிகளின் ஆய்வு கட்டுரை ஈரோட்டில் நடக்கவுள்ள மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாடு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இதற்கான மாவட்ட அளவிலான போட்டி கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில் கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. இதில் கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வித்யபிரியா, தீபா ஸ்ரீ, கஸ்தூரி, பாத்திமா, வித்யா ஆகி யோரின் ஆய்வு கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.

தற்போது இந்த மாணவிகளின் மனித ஆற்றல் என்ற தலைப்பின் கீழ் ‘மனித சமுதாயம் நோய்களை நோக்கி செல்கிறது’ என்ற ஆய்வு கட்டுரை மாநில அளவிலான தேசிய குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுரையில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்துகள் உள்ளது.

மேலும், இம்மாணவிகள் ரத்தினபுரி பகுதியில் துரித உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து துண்டு பிரசுரங்களையும் தற்போது வினியோகித்து வருகின்றனர். இந்த மாநில அளவிலான மாநாட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் மாணவிகளின் ஆய்வு கட்டுரை 21வது தேசிய அளவிலான குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படும்.

 

திண்டலில் 10ம் தேதி தேசிய மக்கள்தொகை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினகரன்              10.12.2013

திண்டலில் 10ம் தேதி தேசிய மக்கள்தொகை புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் பகுதியில் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை தேசிய மக்கள்தொகைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் பகுதியில் 10ம்தேதி தேசிய மக்கள்தொகை புகைப்படம் எடுக்கும் பணி தொடங்குகிறது. திண்டல் 1 முதல் 6வது பிளாக் வரை உள்ள காரப்பாறை, புதுக்காலனி, அக்னிநகர், பங்காருநகர், வித்யாநகர், ஐத்தரியா அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு காரப்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 10ம்தேதி முதல் 15ம்தேதி வரையும், 7 முதல் 12வது பிளாக் வரை உள்ள மேல் திண்டல், கீழ் திண்டல், அருள்நகர், முருகன்நகர், கணபதிநகர், டி.ஆர்.கார்டன், சக்திநகர், கலைமகள் நகர் ஆகிய பகுதிகளுக்கு 16ம்தேதி முதல் 20ம்தேதி வரை திண்டல் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது.

 13 முதல் 18வது பிளாக் வரை உள்ள கே.ஏ.எஸ்.நகர், சத்தியசாய்நகர், பால்காரர் தோட்டம், ராஜீவ்நகர், ராஜா கார்டன், செங்கோடம்பாளையம், அம்மன்நகர், வள்ளியம்மை நகர் ஆகிய பகுதிகளுக்கு 21ம்தேதி முதல் 25ம்தேதி வரை திண்டல் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது. 19 முதல் 25வது பிளாக் வரை உள்ள செல்வம்நகர், ஸ்ரீநகர், சாமுண்டிநகர், அரவிந்த்நகர், பெரியார் காலனி, காலாஜி கார்டன், மாணிக்கம்பாளையம், நல்லியம்பாளையம், லட்சுமிநகர், லட்சுமி கார்டன், சரவணாநகர், எஸ்.டி.எஸ்.கார்டன், தெற்குபாளையம் ஆகிய பகுதிகளுக்கு 26ம்தேதி முதல் 31ம் தேதி வரை திண்டல் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது.

 புகைப்படம் எடுக்கும் பணி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதால் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 2010ம்ஆண்டு மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் அதற்கான பதிவுசீட்டுடன் வந்து உரிய மையத்தில் தேசிய மக்கள்தொகைக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்

Print PDF

தினமணி              10.12.2013

மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை மாநகராட்சி நடத்திய சிறப்பு மருத்துவ முகாம்களில் 3.89 லட்சம் பேர் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் மொத்தம் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 5 நாள்களாக நடைபெற்றன. இந்த முகாம்கள் பெரும்பாலும், ஏழை மக்கள் அதிகம் உள்ள குடிசைப் பகுதிகளில் நடத்தப்பட்டதால், அதிகளவில் மக்கள் ஆர்வமுடன் முகாமில் பங்கேற்றனர். வார்டுக்கு ஒரு இடம் என தினமும் 200 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன. ஒவ்வொரு வார்டிலும் வெவ்வேறு 5 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு இடத்தில் முதன்மை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மொத்தம் 3,89,228 பேர் பங்கேற்று பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்றனர். இதில் அதிகபட்சமாக முதல் நாளில் 86,240 பேர் கலந்துகொண்டனர். முகாம்களுக்கு ஆண்களை விட பெண்களே அதிகம் வந்தனர். 5 நாள்களிலும் சேர்த்து மொத்தம் 1,22,005 ஆண்களே முகாம்களுக்கு வந்தனர். ஆனால், 1,73,332 பெண்கள் வந்துள்ளனர். 48,430 சிறுவர்களும், 45,461 சிறுமிகளும் மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 66 of 841