Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தி.மலை வீதிகளில் சுற்றி திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை

Print PDF

தினமலர் 25.02.2010

தி.மலை வீதிகளில் சுற்றி திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் நாய், குரங்கு, மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளதாக நகராட்சிக்கு புகார் தொடர்ந்து வந்தது. இதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, வனத்துறை, விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நகராட்சி தலைவர் திருமகன் தலைமையில் ஆலோசனை நடந்தது.

கூட்டத்துக்கு பின் நகராட்சி தலைவர் திருமகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்கு களை வனத்துறை மூலம் வருகிற 2ம் தேதி முதல் தொடர்ந்து பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குரங்குகளை பிடித்து காட்டில் விடுவதற்கு ஆகும் செலவுத்தொகை நகராட்சி மூலம் செலுத்தப்படும். அதை தொடர்ந்து விலங்குகள் பாதுகாப்பு சங்கம் மூலம் வரும் 3ம் தேதி முதல் மாடுகளை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

மாடு பிடிக்கும் போது மாடுகளின் உரிமையாளர் பிரச்னை செய்வதால் போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்க முடிவு செய்யப்பட்டது. நாய்களை பிடித்து கருத்தடை ஆப்பரேஷன் செய்யவும், வெறி நாய்கள் கடித்தால் நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போட சந்தைமேட்டு பகுதியில் மருத்துவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது. இது வரை 2, 700 நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது.

கருத்தடை செய்யப்பட்ட நாய்களுக்கு அடையாளமாக காது பகுதி துண்டிக்கப் பட்டிருக்கும். இதற்காக மத்திய அரசு 225 ரூபாயும், நகராட்சி 225 ரூபாயும் சேர்த்து ஒரு நாய்க்கு 450 ரூபாய் செலவு செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் 1,000 நாய்கள் பிடித்து கருத்தடை ஆப்பரேஷன் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Thursday, 25 February 2010 07:08
 

தென்காசியில் இன்று நகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 25.02.2010

தென்காசியில் இன்று நகராட்சி கூட்டம்

தென்காசி: தென்காசி நகராட்சியின் அவசர கூட்டம் இன்று (25ம் தேதி) நடக்கிறது. தென்காசி நகராட்சியின் அவசர கூட்டம் இன்று (25ம் தேதி) காலை 10.30 மணிக்கு நகராட்சி கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் இப்ராகிம், நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் தென்காசியில் ரயில்வே மேம்பால பணி நடந்து வருவதால் மாற்று பாதை அமைத்தல், மேம்பால பணி நடக்கும் பகுதியில் உள்ள குடிநீர் குழாயை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட 44 மன்ற பொருட்கள் மீது விவாதம் நடத்தப்படுகிறத

Last Updated on Thursday, 25 February 2010 07:07
 

சத்திரம் பஸ் ஸ்டாண்டு பணிகள்: மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Print PDF

தினமலர் 25.02.2010

சத்திரம் பஸ் ஸ்டாண்டு பணிகள்: மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி பொது நிதி 50 லட்சம் ரூபாய் செலவில் பஸ் பயணிகளுக்கு நடைபாதையுடன் கூடிய நவீன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

நிழற்குடை அமைத்த பகுதியில் தற்போது 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், திருவானைக்கோவில் தெற்கு உள்வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வேண்டும் என மேயரிடம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்தனர். அந்த இடத்தை நேரில் சென்றுபார்வையிட்டு, நடவடிக்கை எடுக்கும்படி பொறியாளர்களை அறிவுறுத்தினார். கீழகொண்டையம்பேட்டை குடியிருப்பு பகுதிக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்ட இடத்தையும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, செயற்பொறியாளர் அருணாச்சலம், கோட்டத் தலைவர் குமரேசன், உதவி கமிஷனர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் பாலகுருநாதன், கவுன்சிலர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர

Last Updated on Thursday, 25 February 2010 07:03
 


Page 651 of 841