Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் மாநகராட்சி கட்டுமானப் பணிகள்: மேயர் தகவல்

Print PDF

தினமலர் 25.02.2010

இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் மாநகராட்சி கட்டுமானப் பணிகள்: மேயர் தகவல்

சென்னை: ""மாநகராட்சி கட்டடங்கள், இயற்கைச் சீற்றங் களை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்படுகின்றன,'' என, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் பேசினார். அண்ணா பல்கலையின் இயற்கை பேரிடர் துயர் துடைப்பு மையம் சார்பில், சென்னை மாநகராட்சி பொறியாளர்களுக்கு, சென்னை மாநகர கட்டடங்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து காப்பது குறித்த பயிரலங்கம் நேற்று நடந்தது.

பயிலரங்கில் மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: ஆசியாவில் தற்போது ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆறு உள்ளன. அவற்றின் வரிசையில் சென்னை நகரும் விரைவில் சேர உள்ளது. பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங் களிலிருந்து மக்களை பாதுகாப்பதில், சென்னை நகரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களின் ஸ்திரத்தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கருத்தில் கொண்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட மருத்துவமனைகள், உடற்பயிற்சி மற்றும் சத்துணவு கூடங்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இயற்கைச் சீற்றங் களை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் உருவாகும் அரசு மற்றும் தனியார் கட்டடங்களும் இயற்கைச் சீற்றங்களை எதிர் கொள்ளும் வகையில் கட்டப்படுவது உறுதி செய்யப்படும். இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.

அண்ணா பல்கலையின், "சிவில் இன்ஜினியரிங்' துறை முன்னாள், "டீன்' சாந்தகுமார் பேசும் போது, "சென்னையில் சமீபகாலமாக லேசான நிலநடுக்கம் அவ்வப்போது உணரப்படுகிறது. இது மிகப்பெரிய அசம்பாவிதத்திற்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். பூகம்பத்தை எதிர் கொள்ளும் வகையில், சென்னை மாநகரின் பழைய கட்டடங்களின் ஸ்திரத்தன்மையை மேம் படுத்துவது குறித்த தொழில்நுட்ப பயிற்சியை மாநகராட்சி பொறியாளர்கள் பெறுவதும் அவசியம்' என்றார்.

பயிலரங்க துவக்க நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர், இயற்கை பேரிடர் துயர்துடைப்பு மைய இயக்குனர் ராஜரத்தினம், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, தலைமைப் பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, சென்னை மாவட்ட அளவில் 2008-09ம் நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட, சைதாப்பேட்டை மண்டலத்தை சேர்ந்த யமுனை, சிந்து பாரதி மற்றும் கீழ்ப்பாக்கம் மண்டலத்தைச் சேர்ந்த சரோஜினி ஆகிய மகளிர் உதவிக் குழுக்களுக்கு, மணிமேகலை விருதையும், தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் மேயர் வழங்கினார்.

Last Updated on Thursday, 25 February 2010 06:29
 

விரைவில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல்: எடியூரப்பா அறிவிப்பு

Print PDF

தினமணி 24.02.2010

விரைவில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல்: எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூர், பிப்.23: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உறுதி அளித்தார்.

பெங்களூர் மாநகராட்சித் தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அப்பீல் செய்யப்பட்டது. அதில் மார்ச் மாதம் பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெற இருப்பதால் மாநகராட்சி தேர்தலை நடத்த இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என கோரியிருந்தது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அரசு மனுவை தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும் கால அவகாசம் வேணóடுமானால் உயர்நீதிமன்றத்தையே அணுக வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால் ஏற்கெனவே கால அவகாசம் அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனால் அரசுக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்த அரசு முன்வருமா அல்லது மீண்டும் உயர்நீதிமன்றத்தில் கால அவகாசம் கோருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை விதானசெüதாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த முதல்வர் எடியூரப்பாவிடம் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிபெங்களூர் மாநகராட்சித் தேர்தலை நடத்த அரசு முன்வருமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்து எடியூரப்பா கூறியது:

தேர்தலை நடத்த அரசு தயாராகவே உள்ளது. ஆனால் மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு நடக்க இருப்பதால் தேர்தலை நடத்த வகுப்பறைகள் கிடைப்பது கஷ்டம். மேலும் தேர்தலில் பணியாற்ற ஆசிரியர்களையும் நியமிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் இதை எல்லாம் பரிசீலித்து பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றார். விரைவில் என்றால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட கெடுவுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்க முதல்வர் மறுத்துவிட்டார்.

மார்ச் 14-ல் தேர்தல்?: உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மாநில தேர்தல் ஆணையர் சிக்கமட் கூறியது: மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அளிக்கும்படி அரசுக்கு úóதர்தல் ஆணையம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அரசு இட ஒதுக்கீடு பட்டியலை அளிக்கவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் அரசின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டதால், தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் ஆணையம் சார்பில் மனுதாக்கல் செய்யப்படும். மார்ச் மாதம் 14-ம் தேதி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்றார் அவர்.

Last Updated on Wednesday, 24 February 2010 10:39
 

மார்த்தாண்டம் பகுதியில் 50 கிலோ போலி தேயிலைத் தூள் பறிமுதல்

Print PDF

தினமணி 24.02.2010

மார்த்தாண்டம் பகுதியில் 50 கிலோ போலி தேயிலைத் தூள் பறிமுதல்


மார்த்தாண்டம், பிப். 23: மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதி கடைகளில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ஆய்வில் 50 கிலோ போலி தேயிலைத் தூள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மதுசூதனன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் ஜெயகுமார், செல்வன், ரஞ்சித்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் மார்த்தாண்டம், பம்மம், உண்ணாமலைக்கடை,கருங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக் கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பெரும்பாலான கடைகளில் போலி தேயிலைத் தூள் பயன்படுத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் பல்வேறு கடைகளில் இருந்து 50 கிலோ போலி தேயிலைத் தூளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்

Last Updated on Wednesday, 24 February 2010 10:37
 


Page 653 of 841